Showing posts with label nationallist. Show all posts
Showing posts with label nationallist. Show all posts

Wednesday, December 21, 2016

ஹஸன் அலியிடம் ஹக்கீமின் சாணக்யம் சறுக்கியது....!!! நாணயம் பாழாப் போனது...!!!

ஹஸன் அலியிடம் ஹக்கீமின் சாணக்யம் சறுக்கியது....!!! நாணயம் பாழாப் போனது...!!!



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ரவூப் ஹக்கிம் அவர்களை பொறுத்தளவில் அவர் மேற் கொள்ளும் சில தீர்மானங்கள் சவால்களை முறியடிக்கும் திறமை வாய்ந்தது. அதனை பார்க்கும் கட்சி போராளிகள் தலைமையை சாணக்கிய தலைமை என்றுதான்  அழைப்பார்கள். 



ஆனால் அன்மைக் காலமாக தலைமை மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் தோல்வியில் முடிவடைவதை பார்க்கும் போது சாணக்கியம் சருக்கி விட்டதா என்றே கேள்வி என்னத் தோன்றுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தளவில் தலைமைதானா சாணக்கியம் என்று பார்த்தால் இல்லை இன்னும் ஒருவர் சாணக்கியராக இருந்திருக்கிறார் என்பதையே தற்போது அறியக் கிடைக்கிறது. 


தலைமையின் தீர்மானத்தை தனது சாணக்கியத்தால் முறியடித்து தலைமையின் சாணக்கியத்தை தோல்வி காணச் செய்ததன் மூலம் உண்மையான சாணக்கியனாக கௌரவ முன்னால் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.டி.ஹஸன் அலி அவர்கள் தன்னை உறுதிப்படித்துக் கொண்டார்.



எவ்வாறு எனின் தலைமை அரசியல் சார்ந்த நடவடிக்கையில் சமூகத்தின் உணர்வுகளை மதிப்பதில்லை என்பதால் தலைவருக்கு அவ் அப்போது சில விடயங்களில் செயலாளர் ஒத்துளைக்காமையினாலும் செயலாளர் நாயகத்திற்கு முக்கிய அதிகாரங்கள் கட்சி யாப்பில் வழங்கப் பட்டிருப்பதாலும் செயலாளரின் நடவடிக்கையில் அதிருப்தி உற்ற தலைமை அவரின் அதிகாரங்களை குறைக்க கடந்த பேராளர் மாநாட்டில் கட்சி யாப்பில் மாற்றங்களை கொண்டுவந்து செயலாளரின் அதிகாரத்தை உச்சபீட செயலாளர் என்ற பதவியை உருவாக்கி அதற்கு மன்சூர் ஏ காதரை நியமித்து வழங்கப்பட்டது.



இவைகளின் போது செயலாளர் ஹசன் அலி அதிருப்தி தெரிவிக்காமல் இருக்க அவருக்கு தேசிய பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. 
செயலாளர் ஹசனலியோ பாராளுமன்றம் சென்றால் போதும் என்ற நினைப்பில் இது தொடர்பாக ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளவில்லை.



தலைமை தேசிய பட்டியலை வேறு பிரதேசத்துக்கு வழங்கவே தலைமை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை உணர்ந்தவர் நேரடியாக தேசிய பட்டியலை கோராது செயலாளர் அதிகாரத்தை கேட்டு தனது போராட்டத்தை பல்வேறு கோணத்தில் தொடர்ந்தார். இதனால் தலைமை சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. 


தலைமை ஹசனலியை குறைத்து மதிப்பிட்டதன் விளைவாலும். தலைவரின் வயது ஹசனலியின் அனுபவம் என்பதாலும் தலைவரால் ஹசனலியை தோற்கடிக்க முடியவில்லை என்பதும் ஹசனலி சந்தர்ப்பம் பார்த்து தனது காயை சாணக்கியமாக நகர்த்தியதால் தலைமை தனது காய் நகர்தலில் தோல்வி கண்டுள்ளது. 


எனவே செயலாளர் பிரச்சனை தேர்தல் ஆணைக்குழு முன் கொண்டு செல்லப்பட்டு சாணக்கிய தலைமை செயலாளர் ஹசன் அலி அவர்களுக்கு முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியும் மற்றும் தேசிய பட்டியலும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. 


அத்தோடு செயலாளர்க்கு அதிகாரம் யாப்பில் பேராளர் மாநாட்டை கூட்டியே செய்யவேண்டும் என தெரிவித்ததால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. ஹசனலியை பொறுத்தளவில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதனை கடந்த அதிர்வு தொலைகாட்சி நிகழ்வில் தலைமை மறைத்து பேசினாலும் ஹசனலி விடிவெள்ளி க்கு வழங்கிய செவ்வியில் தெளிவாக சொல்லி உள்ளார்.   


சாணக்கியம் ரவூப் ஹக்கீம் செயலாளர் விடயத்தில் சறுக்கி செயலாளரிடம் குட்டுவாங்கியுள்ளது. எனவே தனது தோல்வியை ஒத்துக் கொண்டு ஜனநாயக முறைப்படி தலைவர் கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி ஆளுமை உள்ள சாணக்கியத்தை தலைவரிடமே உறுதிப்படுத்திய செயலாளரை தலைவராக நியமிக்க ரவூப் ஹக்கிம் அவர்கள் முன் வரவேண்டும்.


அது மட்டு மன்றி தேசிய பட்டியல் எம் பி பதவியானது  செயளாலர் நாயகம் ஹஸன் அலியை சென்றடையும் விடத்து தலைவர் ஏனைய ஊர்களுக்கு வழங்கிய தேசிய பட்டியல் வாக்குறுதி மீறப்பட்டு நாணயம் பாழாக்கப்படுகிறது.


யூ.எல்.றிபாஸ் 







Monday, December 19, 2016

 செயலாளர் விவகாரமும்  ஏமாற்றப்படும்  கல்குடாவும்

செயலாளர் விவகாரமும் ஏமாற்றப்படும் கல்குடாவும்

will-slmc-secretary-problem-clash-with-national-list-of-kalkudah ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் தொடர்பாக சில நாட்களாக கட்சிக்குள் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் அறிந்ததே.



அதாவது கடந்த பேராளர் மாநாட்டில் செயலாளராக இருந்த ஹஸன் அலி அவர்களின் வேலைப் பழுவை குறைக்கும் நோக்கில் அன்று உச்ச பீட செயலாளராக மன்சூர் ஏ காதர் அவர்கள் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற விவகாரம் மற்றும் உச்சபீட கூட்டம் தொடர்பான மற்றும் தேர்தல் செயலகம் தொடர்பான கட்சி தொடர்பில் செயற்படுவதற்கான  அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. 



அன்றைய பேராளர் மாநாட்டிலயே இந்த தீர்மானம்  அறிவிக்கப்பட்டு கட்சியின் உயர் பீட உறுப்பினர்களினால்  ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றும் போது அங்கு  ஹஸன் அலியும் உடன் இருந்தார். ஆனால் அங்கு ஹசன் அலி தனக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலோ அவர் அங்கு இது  தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லை.

இது ஒரு புறம் இருக்க கடந்த நாடாளு மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம்  முஸ்லிம் காங்கிரஸுக்கு  இரண்டு தேசிய பட்டியல் கிடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு தற்காலிகமாக இருவர் நியமிக்கப்பட்டும் இருந்தார்கள்.


இவ்வாறான ஒரு சூழ் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தேசியபட்டியல் தொடர்பாக அட்டாளைச் சேனை, திருகோணமலை,கல்குடா,வன்னி போன்ற பிரதேசங்களே அதனை அதிகமாக  எதிர்பார்த்தும் இருந்தன அது மட்டுமன்றி கட்சியின்  தலைவராலும் இதனை சுழட்சி முறையில் வழங்குவதாக   இதில் சில பிரதேசங்களுக்கு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

அந்த வகையில் பேராளர் மாநாட்டின் பிற்பாடு திருகோணமலைக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்த  வேளையில் அத் தேசிய பட்டியல்  தனக்கு  கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்த ஹஸன் அலி தான் தலைமையால் ஏமாற்றப்பட்டதாக கருதி நேரடியாக தேசிய பட்டியலை கோராது செயலாளருக்கான அதிகாரங்களை திரும்ப தருமாறு கோரி  மறைமுகமாக பல அழுத்தங்களை   தலைமைக்கு  வழங்கிய வண்ணம் இருந்தார்.




இறுதியில் செயலாளர் தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக் குழுவிற்கு சென்றடைந்த நிலையில் அதன் பிற்பாடு தேர்தல் ஆணைக்குழு கட்சி தலைமைக்கு கட்சி செயலாளர் தொடர்பாக இறுதி முடிவை கடந்த பதினைந்தாம் திகதிக்கு முன்னர் அறிவிக்கும் படி ஆணையிட்டது.


இந்த பிரச்சினையில் இருந்து விடுபடவும்,  தலைமையை இதிலிருந்து பாதுகாக்கவும் தேர்தல் ஆணையாளருக்கு கட்சியின்  செயளாலர் நாயகத்தை உறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணத்தினாலும்  மீண்டும் ஹஸன் அலிக்கு தேசிய பட்டியல் தருவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்காக சல்மான் விரைவில் தனது பாராளுமன்ற உறுப்பினரையும் இராஜினாமா செய்ய உள்ளதாக கட்சியின் தற்கால நிகழ்வுகள் மூலம் எமக்கு அறியக் கிடைக்கின்றது.


 ஹஸன் அலி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக   நியமிக்கப்படுாராக இருந்தால்  அத்தோடு  அவர் செயலாளருக்கான முழுமையான  அதிகாரம் கேட்டு தொடர்ந்த  போராட்டமும்  முற்றுப் பெற்று விடும். ஆனால் அதன் பிற்பாடு    தேசிய பட்டியலை எதிர்பார்த பிரதேசங்களும்  மற்றும் தலைவரால் வாக்குறுதி வழங்கிய பிரதேசங்களினதும் நிலை என்ன......? 


 கடந்த 2010 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் கல்குடாவுக்கு தேசிய பட்டியல் எம்.பி தருவதாக வாக்களிக்கப்பட்டு அது ஏமாற்ற பட்டதுடன்  ஆதலால் அதன் பிற்பாடு நடந்ந தேர்தல்களில் கட்சி பல  ஆயிரக்கணக்கான வாக்குகளையும் இழந்தது. 



2015ல் நடந்த பொதுத் தேர்தலிலும் புது முக வேற்பாளர் றியாழ் களமிறக்கப்பட்டாலும் அவரின் சாதுர்யத்தாலும்,அவரின் நன்னடத்தைகளினாலும் கவரப்பட்ட மக்கள் பலர் கட்சிக்காக வாக்குகளை வாரி வழங்கினர். இருந்தும் எமது வாக்குகள் போதாமின்மையால் அயலூருக்கே அன்றும் பாராளு மன்ற  பிரதிநிதித்துவம் போகும் நிர்ப்பந்த சூழ் நிலை வந்தது.


எவ்வாறாயினும் இம் முறையும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தேர்தலுக்கு பிற்பாடு கட்சியின்  கல்குடா பிரமுகர்களையும்,மூத்த போரிகளையும் சந்தித்து கல்குடாவுக்கு இம்முறை எவ்வாறாயினும் தேசியப் பட்டியல் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அவ்வாக்குறுதி இம்முறையும் மீறப்படுமாக இருந்தால் நிச்சயம் கல்குடா மக்கள் குட்ட குட்ட குனிபவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு பாடமாக அமையும் என்பதில் எவ்வீத மாற்றுக் கருத்துமில்லை.



யூ.எல்.றிபாஸ்
பிறைந்துறைச்சேனை

Monday, September 21, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மானத்தைக் காப்பாற்றிய மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கே தேசியப்பட்டியல் வழங்கப்படல் வேண்டும் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மானத்தைக் காப்பாற்றிய மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கே தேசியப்பட்டியல் வழங்கப்படல் வேண்டும் !


(தேசியப்பட்டியல் அலசல்)
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது குறிப்பிட்ட மாவட்டங்களில் தனித்தும் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட்டது.
கட்சியினதும் தலைவரதும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற தோ்தல் வியூகத்தின் அடிப்படையில் இவ்வாறு தனித்தும் , சேர்ந்தும் போட்டியிட்டபோதும் ஒரேயொரு மாவட்டத்தைத்தவிர தனித்துப் போட்டியிட்ட ஏனைய சகல மாவட்டங்களிலும் கட்சி தோல்வியைத் தழுவியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்தச் சின்னமாகிய மரச்சின்னத்தில் போட்டியிட்ட இடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஒரேயொரு நேரடிப் பிரதிநிதித்துவத்தை பெற்ற அதிர்ஷ்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதுடன் இதன்மூலம் கட்சித்தலைவரென்ற ஸ்தானத்தை சில அரசாங்க நிகழ்வுகளின்போது கௌரவ . ரவூப்ஹகக்கீம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இது வழங்கியிருந்தது.
முஸ்லிம் காங்கிரசின் சாா்பில் பெறப்பட்ட ஏனைய (4) பிரதிநிதித்துவங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பெறப்பட்டவையாகும் .
அந்த வகையில் கட்சியின் மானத்தைக் காப்பாற்றியவர்ளென்று சொன்னால் அது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையே சாரும்.
அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு போனசாகக் கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப் பட்டியல்களில் ஒன்றை மானசீகமான முறையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே வழங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு கட்சியின் தலைவருக்கு நிச்சயம் இருக்கின்றது.
சர்வதேச புகழ்பெற்ற உல்லாசத்தளமாகிய பாசிக்குடா கடற்கறையைக் கொண்டமைந்துள்ள கல்குடாத் தொகுதி இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேலும் ஒளிபெற்றுத் திகழுமா ? அல்லது ஒளி மங்கிப் போகுமா ? என்பதை அடுத்துவரும் சில வாரங்களில் கல்குடா மக்கள் அறிந்துகொள்வர் !
-Ibunu Samad-

Sunday, September 20, 2015

அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு கல்குடா தேர்தல் தொகுதியில் இருந்து ஒரு திறந்த மடல்.....

அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு கல்குடா தேர்தல் தொகுதியில் இருந்து ஒரு திறந்த மடல்.....

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
A.S. சலீம்
பாடசாலை வீதி,
செம்மண்ணோடை,
வாழைச்சேனை.
19.09.2015
கௌரவ. அல்ஹாஜ். றவுப் ஹக்கீம், (பா.உ),
நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சர்,
தேசியத் தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
கல்குடாவின் அரசியல் பிரதிநிதித்துவமும்,
முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளும்
இம்மடல் உங்கள் கரம் சேர்க்கையில் உடல் நலத்துடனும் ஈமானிய உணர்வுடனும் இருக்க பிராத்திக்கிறேன்.
மேற்படி விடயம் சம்பந்தமாகஎனது ஆதங்கத்தை தங்களுடன் மனம் விட்டு பகிர்ந்து கொள்கின்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மறைந்த மர்ஹும்;அல்ஹாஜ். எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் அன்று எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சம்பந்தமாகதேசிய மட்டத்தில் பேரினவாதிகளுடன் பேசுகின்ற போது,அதனை பேரினவாத அரசியல் தலைமைகள் சமூகம் சார்ந்த விடயமாக கவனத்திற் கொள்ளாததன் விழைவாக இன்று எவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தோற்றம் பெற்றது என்பது வாஸ்தபம்.
அன்று அவ்வாறு உரிமை உணர்வோடு சமூகத்திற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ள கட்சியான எமது முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபடாது ஒரு தலைப்பட்சமாக இயங்கி வருகின்றமையும், தலைமைகளுக்கிடையே காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் இதனால் கட்சிக்குள் உண்டாகி வரும் பிளவுகள்போன்றன கவலைக்குரிய விடயமாகும். இந்நிலைப்பாடானது கட்சிக்குள்ளேயே இருப்பவர்களின் நயவஞ்சகத்தன்மையையும,; கட்சியை மூலப்பொருளாக வைத்து முதலீடு செய்து சுயஇலாபம் சம்பாதிக்கின்ற குறுகிய சிந்தனையுமே இதற்கு பிரதான காரணமாகும். இவ்வாறான அசாதாரண சூழ்நிலையினால் கட்சியின் செயற்பாடுகள் பின்னடைவை எதிர்நோக்கி வருவதென்பது அவதானித்துக்கக்கூடியதாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு கட்சியின் மறுமலர்ச்சிக்காக சில செய்திகளை இதன் ஊடாக தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இக்கட்சியானது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் குரலாகும். ஆனால் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளாத ஒரு பிரதேசம்; இருக்குமாக இருந்தால் அது மட்டகளப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.கல்குடா தொகுதி முஸ்லிம்கிகளும், போராளிகளும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்காக பல தியாகங்களை செய்து காட்டிய சமூகமாகும். ஆனால் கட்சியானது அச்சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தை கொடுத்து அழகு பாரக்கின்ற எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பது கடந்த கால வரலாற்று காரணியாகும்.
ஆதலால் இன்று அச்சமூகம் நாளா சந்திகளிலும் பேசக்கூடிய சமாச்சரமாக உருவெடுத்திருக்கின்றது கவலைக்குறியதே!. எனவே இந்த நிலமையானது எதிர்வரும்காலங்களிலும் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பற்றி மக்கள் மத்தியில் உள்ள நல்லபிப்பிராயமும், செல்வாக்கும் செயலிழந்துவிடும் என்ற அச்சம் எமக்கு உண்டு.
அந்தவகையில்,என்றும் முஸ்லிம் காங்கிரஸ் போராளி என்ற அடிப்படையில் நான் தங்களுடன் வினயமாக வேண்டிக்கொள்ளுகின்ற விடயமானது, கல்குடாவிலே முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் மறுமலர்ச்சி பெற்று,அதன் மூலமாக சிறந்ததொரு தலைமைத்துவம் தேர்வு செய்யப்பட வேண்டுமென்பதும், அத்தலைமைத்துவத்தின் மூலமாக கல்குடாவின் அரசியல் அதிகாரம் தக்க வைப்பதன் மூலமாக கட்சியின் செயற்பாடுகளும், மக்கள் மத்தியில் உள்ள நற்பெயரும் கட்டி காக்கப்பட வேண்டும் என்பது எனதும்,தியாக உணர்வுடன் போராடும் முழு கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினதும் எதிர்பார்ப்புமாகும். அத்தோடு நாங்கள் எதிர்பார்த்ததைப் போல் நீங்கள் தந்த பொது வேற்பாளரைதிறந்த மனதோடு ஏற்றுக் கொண்டு எந்த விதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் இந்தக் கட்சிக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆசணத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் கடுமையாக உழைத்து 9,093 அங்கிகரிக்கப்பட்டு வாக்குகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும் சேர்த்துகிட்டத்தட்ட 10,000 வாக்குகள் கல்டாவில் இருந்து அளிக்கப்பட்டதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களை அடையாளப்படுத்திக் காட்டியதற்குகல்குடா தொகுதி முதன்மை பங்குதாரிகள் என்பதோடு 10,000 பேர்களுடைய உணர்வுகளையும் மதித்து எங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புக்களும் எச்.எம்.எம். றியாழ் அவர்களுக்கு தேசியப்படியல் ஒன்றைக் கொடுப்பதனூடாக போராளிகளின் மனதை வென்ற தலைவராக அத்தோடு எதிர்வரும்உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் வெற்றியை உறுதிசெய்த தொகுதியாக மாற்றுவது தலைவரின் கையிலேயே தங்கியுள்ளது என்பதை தெளிவு படுத்திக் கூறியதற்கு மாற்றமாக பழைய பல்லவியைப் போல் தேசியப்பட்டியல் தரமால் மழுங்கடிக்கப்படுமாக இருந்தால் கல்குடாத் தொகுதியிலிருந்து இந்தக் கட்சி அழிந்தே தீரும் இன்ஷா அல்லாஹ் ,என்ற வகையில் மிகத் தெளிவாக கூறியவனாக!
எனவே எனது இந்த அபிப்பிராயம் ஆக்கபூர்வமானதாகவும், தங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதான நியாயமுமாகும் என்பதாக இருந்தால்,தங்களைப் பொறுத்த மட்டில் இதற்கு பயனான செயல் வடிவம் கொடுப்பது சுலபமானது என்பதே எனது பாரிய நம்பிக்கை...
இன்ஷா அல்லாஹ் என்றும் இக்கட்சியின் போராளியாக நீங்கள் காண்பீர்கள்!
இப்படிக்கு
பணிவுள்ள
...........................
(AS. சலீம்)

Saturday, September 19, 2015

இன்ஷா அல்லாஹ், இம்முறை கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் ! தலைவர் ரவூப் ஹககீம் உறுதியளிப்பு !

இன்ஷா அல்லாஹ், இம்முறை கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் ! தலைவர் ரவூப் ஹககீம் உறுதியளிப்பு !


நன்றி -
-இப்னு சமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் இம்முறை நிச்சயம் கல்குடாப் பிரதேசத்திற்கு வழங்கப்படுமென்றும் இதுதொடர்பாக கல்குடாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களோ போராளிகளோ சந்தேகமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல்,வடிகாலமைப்பு அமைச்சருமாகிய கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 12-09-2015 ஆம் திகதியன்று கல்குடாப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களில் ஒருவராகிய இஸ்மாயில் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜூப் பெருநாள் கழித்து எதிர்வரும் 27-09- 2015ஆம் திகதியளவில் இந்த நியமனம் கட்சியின் மானத்தைக் காப்பாற்றி மாவட்டத்தில் வெற்றியை உறுதிப்படுத்திய வகையில் கல்குடாவின் மண்ணுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தனது சொந்தச் சினன்மாகிய மரச்சின்னத்தில் போட்டியிட்ட இடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.