நன்றி -
-இப்னு சமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் இம்முறை நிச்சயம் கல்குடாப் பிரதேசத்திற்கு வழங்கப்படுமென்றும் இதுதொடர்பாக கல்குடாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களோ போராளிகளோ சந்தேகமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல்,வடிகாலமைப்பு அமைச்சருமாகிய கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 12-09-2015 ஆம் திகதியன்று கல்குடாப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களில் ஒருவராகிய இஸ்மாயில் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜூப் பெருநாள் கழித்து எதிர்வரும் 27-09- 2015ஆம் திகதியளவில் இந்த நியமனம் கட்சியின் மானத்தைக் காப்பாற்றி மாவட்டத்தில் வெற்றியை உறுதிப்படுத்திய வகையில் கல்குடாவின் மண்ணுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தனது சொந்தச் சினன்மாகிய மரச்சின்னத்தில் போட்டியிட்ட இடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Saturday, September 19, 2015
RELATED STORIES
அட! இதயமே இமயமா? தொடர்-5 இமயம் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட
ஏன் கல்குடா தொகுதி முஸ்லிம்கள் மீது ரவூப் ஹக்கீமுக்கு இந்த வெறுப்பு.....!!! யூ.எல்.றிபாஸ் பிறைந்துறைச்சேனை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதான ஊர்களில் கல்கு
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உரையும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டியவையும்...!!! வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை நேற்று அதாவது 08-12-16 நடந்த பாராளுமன்ற பொதுக் கூட்டத்தில் இராஜ
மர்ஹும் அஷ்ரஃப் எதிர்கொண்ட முதலாவது சிவில் நிர்வாகச் சீர்திருத்தம் ன் முற்பகுதி. ஸ்டான்லி ஜெயராஜ். அஷ்ரஃப்பின் அத்யந்த நண்பர். ஒரு தந்தி வருகிறது. 'Job avail
சொந்த மண்ணில் மூக்குடைக்கப்பட்டார் பிரதி அமைச்சர் அமீர் அலி...!!! ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள்
பட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை. பட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை.19
0 comments: