Sunday, September 20, 2015

அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு கல்குடா தேர்தல் தொகுதியில் இருந்து ஒரு திறந்த மடல்.....

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
A.S. சலீம்
பாடசாலை வீதி,
செம்மண்ணோடை,
வாழைச்சேனை.
19.09.2015
கௌரவ. அல்ஹாஜ். றவுப் ஹக்கீம், (பா.உ),
நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சர்,
தேசியத் தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
கல்குடாவின் அரசியல் பிரதிநிதித்துவமும்,
முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளும்
இம்மடல் உங்கள் கரம் சேர்க்கையில் உடல் நலத்துடனும் ஈமானிய உணர்வுடனும் இருக்க பிராத்திக்கிறேன்.
மேற்படி விடயம் சம்பந்தமாகஎனது ஆதங்கத்தை தங்களுடன் மனம் விட்டு பகிர்ந்து கொள்கின்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மறைந்த மர்ஹும்;அல்ஹாஜ். எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் அன்று எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சம்பந்தமாகதேசிய மட்டத்தில் பேரினவாதிகளுடன் பேசுகின்ற போது,அதனை பேரினவாத அரசியல் தலைமைகள் சமூகம் சார்ந்த விடயமாக கவனத்திற் கொள்ளாததன் விழைவாக இன்று எவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தோற்றம் பெற்றது என்பது வாஸ்தபம்.
அன்று அவ்வாறு உரிமை உணர்வோடு சமூகத்திற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ள கட்சியான எமது முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபடாது ஒரு தலைப்பட்சமாக இயங்கி வருகின்றமையும், தலைமைகளுக்கிடையே காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் இதனால் கட்சிக்குள் உண்டாகி வரும் பிளவுகள்போன்றன கவலைக்குரிய விடயமாகும். இந்நிலைப்பாடானது கட்சிக்குள்ளேயே இருப்பவர்களின் நயவஞ்சகத்தன்மையையும,; கட்சியை மூலப்பொருளாக வைத்து முதலீடு செய்து சுயஇலாபம் சம்பாதிக்கின்ற குறுகிய சிந்தனையுமே இதற்கு பிரதான காரணமாகும். இவ்வாறான அசாதாரண சூழ்நிலையினால் கட்சியின் செயற்பாடுகள் பின்னடைவை எதிர்நோக்கி வருவதென்பது அவதானித்துக்கக்கூடியதாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு கட்சியின் மறுமலர்ச்சிக்காக சில செய்திகளை இதன் ஊடாக தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இக்கட்சியானது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் குரலாகும். ஆனால் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளாத ஒரு பிரதேசம்; இருக்குமாக இருந்தால் அது மட்டகளப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.கல்குடா தொகுதி முஸ்லிம்கிகளும், போராளிகளும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்காக பல தியாகங்களை செய்து காட்டிய சமூகமாகும். ஆனால் கட்சியானது அச்சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தை கொடுத்து அழகு பாரக்கின்ற எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பது கடந்த கால வரலாற்று காரணியாகும்.
ஆதலால் இன்று அச்சமூகம் நாளா சந்திகளிலும் பேசக்கூடிய சமாச்சரமாக உருவெடுத்திருக்கின்றது கவலைக்குறியதே!. எனவே இந்த நிலமையானது எதிர்வரும்காலங்களிலும் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பற்றி மக்கள் மத்தியில் உள்ள நல்லபிப்பிராயமும், செல்வாக்கும் செயலிழந்துவிடும் என்ற அச்சம் எமக்கு உண்டு.
அந்தவகையில்,என்றும் முஸ்லிம் காங்கிரஸ் போராளி என்ற அடிப்படையில் நான் தங்களுடன் வினயமாக வேண்டிக்கொள்ளுகின்ற விடயமானது, கல்குடாவிலே முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் மறுமலர்ச்சி பெற்று,அதன் மூலமாக சிறந்ததொரு தலைமைத்துவம் தேர்வு செய்யப்பட வேண்டுமென்பதும், அத்தலைமைத்துவத்தின் மூலமாக கல்குடாவின் அரசியல் அதிகாரம் தக்க வைப்பதன் மூலமாக கட்சியின் செயற்பாடுகளும், மக்கள் மத்தியில் உள்ள நற்பெயரும் கட்டி காக்கப்பட வேண்டும் என்பது எனதும்,தியாக உணர்வுடன் போராடும் முழு கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினதும் எதிர்பார்ப்புமாகும். அத்தோடு நாங்கள் எதிர்பார்த்ததைப் போல் நீங்கள் தந்த பொது வேற்பாளரைதிறந்த மனதோடு ஏற்றுக் கொண்டு எந்த விதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் இந்தக் கட்சிக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆசணத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் கடுமையாக உழைத்து 9,093 அங்கிகரிக்கப்பட்டு வாக்குகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும் சேர்த்துகிட்டத்தட்ட 10,000 வாக்குகள் கல்டாவில் இருந்து அளிக்கப்பட்டதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களை அடையாளப்படுத்திக் காட்டியதற்குகல்குடா தொகுதி முதன்மை பங்குதாரிகள் என்பதோடு 10,000 பேர்களுடைய உணர்வுகளையும் மதித்து எங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புக்களும் எச்.எம்.எம். றியாழ் அவர்களுக்கு தேசியப்படியல் ஒன்றைக் கொடுப்பதனூடாக போராளிகளின் மனதை வென்ற தலைவராக அத்தோடு எதிர்வரும்உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் வெற்றியை உறுதிசெய்த தொகுதியாக மாற்றுவது தலைவரின் கையிலேயே தங்கியுள்ளது என்பதை தெளிவு படுத்திக் கூறியதற்கு மாற்றமாக பழைய பல்லவியைப் போல் தேசியப்பட்டியல் தரமால் மழுங்கடிக்கப்படுமாக இருந்தால் கல்குடாத் தொகுதியிலிருந்து இந்தக் கட்சி அழிந்தே தீரும் இன்ஷா அல்லாஹ் ,என்ற வகையில் மிகத் தெளிவாக கூறியவனாக!
எனவே எனது இந்த அபிப்பிராயம் ஆக்கபூர்வமானதாகவும், தங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதான நியாயமுமாகும் என்பதாக இருந்தால்,தங்களைப் பொறுத்த மட்டில் இதற்கு பயனான செயல் வடிவம் கொடுப்பது சுலபமானது என்பதே எனது பாரிய நம்பிக்கை...
இன்ஷா அல்லாஹ் என்றும் இக்கட்சியின் போராளியாக நீங்கள் காண்பீர்கள்!
இப்படிக்கு
பணிவுள்ள
...........................
(AS. சலீம்)


SHARE THIS

Author:

0 comments: