Monday, September 21, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மானத்தைக் காப்பாற்றிய மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கே தேசியப்பட்டியல் வழங்கப்படல் வேண்டும் !


(தேசியப்பட்டியல் அலசல்)
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது குறிப்பிட்ட மாவட்டங்களில் தனித்தும் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட்டது.
கட்சியினதும் தலைவரதும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற தோ்தல் வியூகத்தின் அடிப்படையில் இவ்வாறு தனித்தும் , சேர்ந்தும் போட்டியிட்டபோதும் ஒரேயொரு மாவட்டத்தைத்தவிர தனித்துப் போட்டியிட்ட ஏனைய சகல மாவட்டங்களிலும் கட்சி தோல்வியைத் தழுவியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்தச் சின்னமாகிய மரச்சின்னத்தில் போட்டியிட்ட இடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஒரேயொரு நேரடிப் பிரதிநிதித்துவத்தை பெற்ற அதிர்ஷ்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதுடன் இதன்மூலம் கட்சித்தலைவரென்ற ஸ்தானத்தை சில அரசாங்க நிகழ்வுகளின்போது கௌரவ . ரவூப்ஹகக்கீம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இது வழங்கியிருந்தது.
முஸ்லிம் காங்கிரசின் சாா்பில் பெறப்பட்ட ஏனைய (4) பிரதிநிதித்துவங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பெறப்பட்டவையாகும் .
அந்த வகையில் கட்சியின் மானத்தைக் காப்பாற்றியவர்ளென்று சொன்னால் அது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையே சாரும்.
அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு போனசாகக் கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப் பட்டியல்களில் ஒன்றை மானசீகமான முறையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே வழங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு கட்சியின் தலைவருக்கு நிச்சயம் இருக்கின்றது.
சர்வதேச புகழ்பெற்ற உல்லாசத்தளமாகிய பாசிக்குடா கடற்கறையைக் கொண்டமைந்துள்ள கல்குடாத் தொகுதி இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேலும் ஒளிபெற்றுத் திகழுமா ? அல்லது ஒளி மங்கிப் போகுமா ? என்பதை அடுத்துவரும் சில வாரங்களில் கல்குடா மக்கள் அறிந்துகொள்வர் !
-Ibunu Samad-


SHARE THIS

Author:

0 comments: