Tuesday, August 18, 2026

தூரத்தில் நின்று ஓய்வெடுக்க முடியாது. ஏனெனில் இது ஒரு கடல் பயணம்.

தூரத்தில் நின்று ஓய்வெடுக்க முடியாது. ஏனெனில் இது ஒரு கடல் பயணம்.

தேர்தலில் போட்டியிடும் போது ஒரு பேச்சு,
போட்டியிடாவிட்டால் இன்னொரு பேச்சு,
வெற்றி பெற்றால் ஒரு பேச்சு,
வெற்றி பெறாவிட்டால் வேறொரு பேச்சு,
பதவி கிடைத்தால் ஒரு பேச்சு,
பதவி கிடைக்காவிட்டால் இன்னொரு பேச்சு.
இதுதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கை. அவர்கள் எப்படியும் வாழ்ந்து விடுவார்கள்.
தனி மனித ஆளுமையையோ, கட்சி சார்ந்த ஆட்களையோ ஆதரித்து நாம் ஏமாறக் கூடாது. வல்ல இறைவனை அஞ்சக்கூடியவர்களை தெரிவு செய்வது நமது கடமை - பர்ளு கிபாயா.
அவர்களின் அடிமைகளாகவோ, வக்காலத்து வாங்குபவர்களாகவோ, அவர்கள் செய்யும் தவறுகளை ஆதரிப்பவர்களாகவோ இருக்கக் கூடாது.
மாறாக ,அரசியல்வாதிகளை நாம் ஆள வேண்டும், அவர்கள் நம்மிடம் ஆலோசனை கேட்க வேண்டும். மக்களின் சேவகனாக மாற வேண்டும்.
அரசியல் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒன்றோ ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றோ அல்ல.
அது வாழ்க்கை பயணத்தில் இன்றியமையாத
ஒரு கடலை போன்றது. சிலர் மாலுமிகளாக, பலர் பயணிகளாக.
சில கப்பல்கள் கவிழும். பல கப்பல்கள் கரைசேரும்.
தூரத்தில் நின்று ஓய்வெடுக்க முடியாது. அருகில் சென்று மாலுமிகளை அவதானியுங்கள், வழிகாட்டுங்கள்.
இல்லையென்றால் நாம் நடுக்கடலில் திக்குத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டி வரும்.
முஹம்மது ஸில்மி.
இறுதியாண்டு வைத்திய மாணவன்-மட்டக்களப்பு வைத்தியசாலை.
2020.08.15
மட்டக்களப்பு : முக்கோண அரசியலும் : முஸ்லிம் அரசியலும்

மட்டக்களப்பு : முக்கோண அரசியலும் : முஸ்லிம் அரசியலும்

மட்டக்களப்பு :
முக்கோண அரசியலும் : முஸ்லிம் அரசியலும் 

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மாற்றங்களை நோக்கி நகர்கின்ற போது சமூகங்களும் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டவும்மாற்றங்களை எதிர்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும்.

இன்று உலக அரங்கில் அரசியல் மாற்றமென்பது தவிர்க்க முடியாதவொன்று என்பதுடன், மாற்றங்களை மக்களே நிகழ்த்திக்காட்டியுள்ளனர். 

உதாரணமாக, உலக வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க மக்களில் மனங்களில் மாற்றம் தேவைப்பட்டது. கொள்கைமாற்றங்களை ஏற்றுக் கொண்டனர். 

அமெரிக்கர்கள் புதிய உலகைக் காண ஆசைப்படுகிறார்கள். இன ஜெளன்யம் அவசியம் என்பதை உணர்த்தி நிற்கிறது. அண்மையஅமெரிக்க தேர்தல் பிரதிபலிப்புக்கள். 

அமெரிக்க புராணம் பாடுவதல்ல நோக்கம். உலக ஒழுங்கு மாற்றங்களைக்கண்டு வருகிறது என்ற யதார்த்தங்களைப் புரிந்து கொண்டுதான் ஆக வேண்டும்.

அந்த வகையில், மட்டக்களப்பும் பாரிய அரசியல் மாற்றத்தைக் கண்டது. முப்பெரும் அரசியல் ஜாம்பவான்களாக அவரவர்பிரதேசங்களிலும் அடுத்த பிரதேசங்களில் சுமாரான அபிவிருத்தியூடான செல்வாக்கிலும் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களாகநாடாளுமன்றத்தை அலங்கரித்த காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடியைச் சேர்ந்த மூவரும் மாவட்ட அரசியலில் தூரப்பட்டுள்ளனர். 

கடந்த தேர்தல் தோல்வி அவர்களது அரசியலை மெளனிக்கச் செய்துள்ளதுடன், மக்கள் மனங்களிலும் தூரப்படுத்தப்பட்டுள்ளதானதோற்றப்பாடு நிலவுவதாக எண்ணத் தோன்றுகிறது.

தோல்வி, தேசிய அரசியல் போக்கு, கொரோனா தாக்கம் போன்ற காரணிகள் அவர்களை சமூக அரசியலிலிருந்து தூரப்படுத்திவிட்டதா? என்ற கேள்வி என் போன்ற சாதாரண வாக்காளனிடம் இல்லாமலில்லை.

ஆகக்குறைந்தது பிரதேச ரீதியான பிரச்சினைகளில் தலையிடுவதை விட்டும் தூரமாக்கியுள்ளது. மக்கள் தேடும் நிலையும்உருவாகியுள்ளதுடன், தம் வெற்றிடத்தை மக்களுக்கு உணர்த்தும் இடைவேளையாக இருக்குமோ? என எண்ணாமலும் இருக்கமுடியவில்லை.

பிரதேச ரீதியாக உரிமை சார்ந்து பல்வேறு பிரச்சினைகள் தொன்று தொட்டு இருந்து வரும் நிலையில், தாம் கோலோச்சியகாலத்திலேனும் சந்தர்ப்பங்களைச் சாதகமாக்கி காய் நகர்த்தி வென்று கொடுக்க முடியாமல், வெறும் அபிவிருத்தி அரசியல் மாயைமாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தமை தற்போது விமர்சனப்பொருளாகியுள்ளதுடன், தங்களை எவ்வாறு காத்துக் கொள்வதென்றமுயற்சியிலும் அவர்களால் வெற்றி பெற முடிந்ததா? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

இவ்வாறான நிலையில், மாவட்டதில் தெரிவான ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியும் உறங்கு நிலை அரசியலைத் தொடர்வதை கடந்துசெல்ல வேண்டிய நிலையில் மாவட்ட முஸ்லிம் மக்கள் இருக்கிறார் என்பது கவலை தரும் விடயமாகும்.

ஒட்டுமொத்த மாவட்ட முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதிநிதியான அவர், தன் மீது இம்மாவட்ட மக்கள் சுமத்திய பொறுப்பை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. 

மாவட்டத்தின் ஒட்டுமொத்த திட்டமிடல் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலாவது கலந்து கொண்டு சமூகம் சார்ந்தசெயற்பாடுகளை முன்னெடுக்க, கிடைக்க வேண்டிய பங்கீடுகளை பெற்றுக் கொடுக்கவும் அவர் தவறி வருகிறார்.

பல்வேறு அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்மொழியப்படுகின்றன. திட்டமிடப்படுகின்றன. செயற்படுத்தப்படுகின்றன. 

கொரோனா அலையினால் முஸ்லிம் பிரதேசங்கள் காலவரையின்றி முடக்கப்பட்டு, தொழில், வருமான வழிகள் இஸ்தம்பித்துப்போனசூழலிலும் இப்பிரதேசத்தின் தலைவிதியை எவரோ தீர்மானிக்கும் நிலை இருந்தமை கவலையளிக்கிறது.

வாழைச்சேனை, காத்தான்குடி பிரதேசங்கள் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்ட போது, அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் கூட காலதாமதத்தைக் காணக்கூடியதாக இருந்தது. 

அன்றைய சூழலில் இடம்பெற்ற மாவட்டசார் அமர்வுகள், கூட்டங்களில் கூட முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் பேச ஆளில்லாதஒரு வெற்றிடம் உங்களுக்காக வாக்களித்த மனங்களையும் உங்களை மாவட்ட முஸ்லிம்களின் ஏக பிரதியாக ஏற்றுக்கொண்ட முஸ்லிம்மக்களின் மனங்களையும் நெருடிச் செல்கின்றது.

கண் முன்னே நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்க நாதியற்றி நிற்கும் நீங்களா? திரைமறைவு சதிகளுக்கு தீர்வு பெற்றுத்தரபோகிறீர்கள்? 

எம் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் முஸ்லிம்கள்சார் பிரச்சினைகள் தொடர்பிலான தரவுகள் வறுமை நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். 

எந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதியிடம் முஸ்லிம்கள் தொடர்பிலான, முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் இன்னோரன்னபிரச்சினைகள் தொடர்பிலான முறையான ஆவணங்கள் இல்லை என்பதுடன், பிரச்சினைகள் தொடர்பிலான அறிவென்பது தீர்வுகளைநோக்கி நகரும் நிலைக்குப் போதுமானதாக இல்லை.

இவ்வாறான நிலையில், மாவட்டத்தைப் பிரதிதித்துவம் செய்யும் சகோதர இன பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்காலச்செயற்பாடுகள் எமக்கு கண் முன்னே தெரிகின்ற அதே வேளை, கடந்த காலங்களில் கதிரைகளைச் சூட்டாக்கிய முதியவர்களைவீட்டுக்கு அனுப்பி இளம் இரத்தங்களிடம் தமது பிரச்சினைகளை ஒப்படைத்துள்ளனர்.

வெவ்வேறு கட்சிகள், கொள்கைகள் அரசியலுக்குள் அவர்கள் நுழைந்திருந்தாலும் தம் இனத்தின் பிரச்சினை என்று வருகின்ற போதுஒரே நேர்கோட்டில் சங்கமமாகும் தழிழ் அரசியல் எமக்கு நல்ல பாடங்களாகும்.

மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசுசார் ஒரு இராஜாங்க அமைச்சரும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் என, அபிவிருத்திசார்ந்து ஒருவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒருவரும் மும்முரமாக முழு நேர அரசியலை மேற்கொண்டு வரும் அதேநிலையில், கொள்கை அரசியலுக்கூடாக தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மொழிப்புலமை, பாரம்பரிய குடும்ப அரசியல்பின்னணி, தம் மண், தம் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றிய ஆழ்ந்த அறிவு, தூரநோக்கு என தமிழ் அரசியலை, தமிழின பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி சர்வதேச அரங்கில் பேசுபொருளாக்குவதனூடாக தீர்வுக்கான அழுத்தங்களைநோக்கிய நெடுந்தூர அரசியல் என மற்றொருவருமாக மூன்று மக்கள் பிரதிநிதிகளும் முக்கோண் அரசியலை முன்கொண்டு வருவதைநாம் காண்கிறோம்.

இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் சர்வதேச நாடாளுமன்றங்களில் எதிரொலிக்க தமிழ் மக்களால் தேர்வான தமிழ்மக்கள் பிரதிநிதிகள் காரணகர்த்தாக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

பாராளுமன்ற உறுப்புரிமையின் வலிமையை சகோதர இனத்தினர் உணர்ந்தளவுக்கு, பயன்படுத்திக் கொண்டளவுக்கு நம் சமூகம்பெறுமதி உணர்ந்து செயற்படத் தவறி விட்டோம் என்பதுடன், கடந்த காலத்தவறுகளில் பாடம் கற்றதாக இல்லை என்பதே உண்மை. 

அதே நேரம், மூன்று தசாப்த கல்குடா முஸ்லிம் அரசியல் அபிவிருத்தி ரீதியாக ஓரளவு மாற்றம் கண்டாலும் உரிமைகள் ரீதியாகமேலதிகமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் இருந்ததையாவது தக்க வைக்க முடியாமல் போனதுடன், இழந்ததையாவது பெற்றுக்கொள்ள முடியாமை துர்ப்பாக்கியமே. 

முப்பதாண்டு கால கல்குடா முஸ்லிம் அரசியலில் பெற்றுக் கொண்டதை விட இழந்ததே அதிகம். 

கடல், வயல், பிரதேச எல்லை ரீதியான பிரச்சினைகளில் எந்தத்தீர்வையும் பெற்றதாக வரலாறு சொல்லப் போவதில்லை.

மாவட்ட நிருவாகச்சக்கரம் சகோதர இன அதிகாரப் பிடியில் சிக்குண்டுள்ள நிலையில், அரசியல் பின்னடைவும் கையாலாகாத முஸ்லிம்அரசியலும் விடிவைத் தரும் என்று இனிதும் நம்புவதில் பலனில்லை.

இழந்ததை பெறப்போய் இருப்பதை இழப்பதான நிலையே காணப்படுகிண்றது.

அந்த நம்பிகையீனங்கள் தான் முஸ்லிம் இளைஞர்களின் மத்தியில் உணர்ச்சி அரசியலுக்கு முண்டு கொடுத்து, யதார்த்தங்கள், பின்னணிகள் குறித்த எந்தவொரு அறிவும், ஆய்வும் இல்லாமல் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை ஹீரோக்களாக தலையில் தூக்கி வைத்துகொண்டாட வைத்துள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.

இதற்கு, தோல்விகளின் பின்னர் தூரப்பட்டுப் போன முஸ்லிம் அரசியலும் அடித்தளமிட்டுள்ளதாக உணர முடிகிறது.

எங்கோ ஒரு மூலையில் நாம் பலிக்கடாவாக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

தம் மக்களிடம் தம்மை தவறுகளை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு சில சகோதர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்-தமிழ்ப்பிரதேசங்களை ஒப்பீடு செய்து, ஏதோ முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டு, செல்வச் செழிப்புடன்இருப்பதாக கதையளக்கின்றனர்.

இதன் யதார்த்தம் முஸ்லிம்கள் குறிப்பிட்டவொரு சிறியளவு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் சுருக்கப்பட்டுள்ளமையினால்செறிவாகக் காட்சி தருவதனால் அவ்வாறான பிரமை தோற்றமளிக்கிறதேயொழியே, நீங்கள் சிலாகிக்கும் அளவில் பாரியஅபிவிருத்திகளை அடைந்து விட்டதாக கொள்ள முடியாது. 

சகோதர தமிழ் உறவுகள் பரந்த நிலப்பரப்பில் நெரிசல் இல்லாமல் வாழ்வதனால் அந்த தோற்றப்பாட்டை சிலாகிக்க முடியாமல்உள்ளதேயொழிய, நீங்கள் குறிப்பிடும் சோமலியா அளவில் தமிழ் பிரதேசங்கள் இல்லை என்பதே யதார்த்தம். 

இதற்கு கடந்த காலங்களில் மாவட்டத்தில் அதிகாரத்திலிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தம்மாலான பங்களிப்பினை தமிழ்ப்பிரதேசஅபிவிருத்தியில் வழங்கியுள்ளதனை மூடி மறைத்து விட முடியாது.

முக்கோண அரசியலால் முஸ்லிம் அரசியல் மூழ்கடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே ஆதங்கம்.

எம்.ஐ.லெப்பைத்தம்பி 
The Director
Thehotline.lk

Wednesday, October 13, 2021

*கொவிட் தடுப்பூசி வழங்குவதன் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாப்போம்* Dr. MOHAMED SILMY (MBBS)

*கொவிட் தடுப்பூசி வழங்குவதன் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாப்போம்* Dr. MOHAMED SILMY (MBBS)

*கொவிட் தடுப்பூசி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதன் நோக்கம் என்ன?*

Dr. MOHAMED SILMY (MBBS)

💡கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோயறிகுறிகள் காணப்படமாட்டாது அல்லது இலேசான நோயறிகுறிகள் காணப்படும் .
 🔕சிலருக்கு மாத்திரமே தீவிரமான நோய் ஏற்படும் .

💥 தீவிரமான நோய் ஏற்படுபவர்களுக்கு குறைமாதப் பிரசவம் , கருச்சிதைவு மற்றும் சிசு இறப்பு போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படலாம் . அரிதாக கர்ப்பிணித்தாய் இறப்பும் ஏற்படலாம் .

👉 சில கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏனையவர்களுடன் ஒப்பிடும் போது , தீவிர நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக காணப்படுகிறது .


 👉தடுப்பூசி யாருக்கு வழங்கப்படும் ? 

 கொவிட் 19 இன் தீவிர நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் 

👉ஆபத்துக் காரணிகள்

📙35 வயதிற்கு மேற்பட்டவர்கள் 
ஈரல் நோய்கள்
📙நீரிழிவு நோய்
📙நோய் நிலை அல்லது மருந்துகள்  காரணமாக குறைந்த நோய் எதிர்ப்புசக்தி உடையவர்கள்
📙உயர் குருதியமுக்கம் 
📙புற்று நோய்  
📙இருதய நோய் 
📙உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் 
📙தீவிர அஸ்மா போன்ற நாள்பட்ட சுவாச நோய்கள் 
📙அதீத உடற்பருமன் ( BMI > 30 )
 📙சிறுநீரக நோய்
 உள நோய்கள் .

📜 "மேலே குறிப்பிட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னர் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும்."


👉 இந்த தடுப்பூசி ஏற்றுதல் .... 

🔮கர்ப்ப காலத்தில் கொவிட் காரணமாக ஏற்படும் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கும்

 📘கர்ப்காலத்தில் கொவிட் காரணமாக குழந்தைகளில் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் 
📘 இருப்பினும் , இந்த தடுப்பூசி காரணமாக சிசுக்களில் அல்லது பிறந்த குழந்தைகளில் ஏற்படும் நீண்ட கால விளைவுகள் தொடர்பாக இதுவரை ஆராயப்படவில்லை.


🔕தடுப்பூசி ஏற்றுவதனால் கொவிட் -19 ஐ தடுப்பதற்கான பூரண பாதுகாப்பு கிடைப்தில்லை .

👉 தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் பின்வரும் அனைத்து நோய்த்தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் . 

📗 நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் 
📗 காற்றோட்டம் குறைவான பொது இடங்களைத் தவிர்த்தல் 
📗 வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது முகவுறையை அணிதல் 
📗 கைகளை சவர்காரமிட்டு நீரினால் கழுவுதல் 
📗 கொவிட் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோய் அறிகுறிகளுடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தூர விலகியிருத்தல்


👪 " குழந்தையின் புன்னகையைக் பார்ப்பதற்கு எமது உயிரைப் பாதுகாத்திடுவோம் " 


💉தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் காணப்படுமாயின் அது தொடர்பாக உங்கள் பிரதேச குடும்ப சுகாதார உத்தியோகத்தருக்கு அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கவும்


☎ சுகாதார ஆலோசனை 
சேவையினை 1999 இந்த இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் (தகவல் உதவி - சுகாதார மேம்பாட்டு பணியகம்)

Tuesday, October 12, 2021

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவாக மரங்களை நடுங்கள் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவாக மரங்களை நடுங்கள் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

தோப்பு ஒன்றை உருவாக்கி எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவாக மரங்களை நடுங்கள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் உருக்கமாக வேண்டுகோள்

கொவிட் பெரும் தொற்றைக் காரணம் காட்டி, வேண்டுமென்றே கொடூரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நீங்காத நினைவுகள் எதிர்கால சந்ததியினரின் மனங்களிலும் ஆழப்பதிந்திருப்பதற்காக ஒரு தோப்பை உருவாக்கி , அதில் எரியூட்டப்பட்ட முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் பெயரில் தனித்தனி மரங்கள் நடப்படவேண்டும் என ஸ்ரீலங்கா   காங்கிரஸ் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

கொழும்பு, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் வார இறுதியில்  நடைபெற்ற கலாபூஷணம் ஸக்கியா சித்திக் பரீட் எழுதிய "நமது வரலாற்று ஆளுமைகள்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்  குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இந் நிகழ்வில் எனக்கு முன்னர் உரையாற்றிச் சென்ற கலாநிதி றவூப் ஸெய்ன்  குறிப்பிட்ட " வரலாற்று ரீதியான பிரக்ஞை இருக்கவேண்டும் " என்ற மேற்கோள் வாக்கியம்  எல்லா சமூகத்தினருக்கும் முக்கியமானதாகும்.  இந்த பிரக்ஞையின்  உண்மையான ஒரு பரிமாணம்தான்  முஸ்லிம் சமூகத்திற்காக பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பற்றிய தடயங்களின் பதிவாகும். 

ஒரு சமூகம் அவ்வப்போது படுகின்ற அவஸ்தைகள், அவற்றையும் தாண்டி வருகின்ற சவால்கள், அந்த சவால்களை உலகமயப்படுத்துவது, அதனை எவ்வாறு நினைவிலிருந்து அகலாமல் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற விவகாரமும் ஒரு சமூக வரலாற்றின் பதிவுகளைப் பற்றிய விடயத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.  அதனை  Memorialization என்று ஆங்கிலத்தில்  சொல்வார்கள்.அதற்கென்றே ஒரு னியான  துறை இருக்கிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்,
அதிகமாக சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற ஒரு விடயம்தான் யூதர்களுக்கு எதிரான இன ஒழிப்பு என்ற விடயமாகும். இதனை " நாசகார இன ஒழிப்பு"(Holocaust ) என்று சொல்வார்கள்.
அதை  நினைவிலிருந்து நீங்காது வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு யூதர்கள்  எப்படியெல்லாம் பிரயாசைப் படுகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.

அது நிறைய சவாலுக்கு உட்படுத்தப்படுகிற விடயம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த யூத சமூகம் அதில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றது என்பதைப் பார்க்கின்ற போது , முஸ்லிம் சமூகம் இவ்வாறான விவகாரங்களை எவ்வளவு தூரம் நினைவில் பதித்தல்(Memoralization) என்ற இந்த விவகாரத்தில் கரிசனை காட்டுகிறார்கள் என்ற விடயத்தையும் நான் இங்கு ஞாபகப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.

குறிப்பாக கடந்த நான்கு,ஐந்து வருடங்களாக , இந்த நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றியடைந்துவிட்டது என்ற வெற்றிக்களிப்பிலும் , மமதையிலும்  இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் "ஓர் எதிரியை அழித்துவிட்டோம்; இன்னுமோர் எதிரியை வரித்துக் கொள்ளவேண்டும்" அல்லது "வலிந்துவரவழைக்கவேண்டும்" என்ற நோக்கில் நடந்தேறிய அநியாயங்கள் என்பன இந்த சமூகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பதிவாக Memorisation என்கிற விதத்தில் மிக முக்கியமாக இடம்பெற வேண்டிய விடயங்களாகும்.

உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.,
நிறைய விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன. ஆனால் இந்த முஸ்லிம்களை புண்படுத்திய மிக மோசமான நிகழ்வுதான் இந்த கொடிய கொரோனா தொற்றின் காரணமாக மரணித்த ஜனாஸாக்களை தராமல் அவற்றைக்  கொண்டுபோய் பலவந்தமாக எரித்த விவகாரமாகும்.

இந்த நாட்டில் இருக்கும் சகல இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களும்,உயர் ஸ்தானியர்களும் ஒன்றுகூடி "இந்த அநியாயத்தை  நிறுத்துங்கள்"என்று  கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதினார்கள். அந்தக் கடிதத்திற்கு ஒரு பதில் கூட கொடுக்காமல்  அதை குப்பைத் தொட்டியில் போட்ட ஒருவராகத்தான் இன்று இவ்வளவு இழிவுக்குள்ளாகியிருக்கின்ற இந்த நாட்டின் முன்னைய ஜனாதிபதி நடந்து கொண்டார் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இதற்குச் சொ காரணங்கள் நான் ஒரு முறை அன்று நான் அமைச்சராகவிருந்தபின்னர் என்னை அழைத்த ஒரு நிகழ்ச்சியிலும் இதனை குறிப்பிட்டிருந்தேன்.

எவ்வாறு இந்த அநியாயங்கள் நடந்தன? அவற்றின் பின்னணி என்ன?, இன்னும் அநியாயங்கள் முற்றுப்பெறவில்லை. இந்த திங்கட்கிழமையும், புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிரான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு சோடிக்கப்பட்ட விவகாரம் என்பது அந்த விடயத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்குப் புரியும். 

ஆனால், அதற்கு மத்தியில் இப்போது பெரிய பட்டியல் அடங்கிய ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார்கள். பலரது பெயர் பட்டியல் அதில் உள்ளது. அதுமாத்திரமல்ல புத்தகங்களை எழுதுபவர்கள் நல்ல காரியத்திற்காகவும் எழுதலாம், சில நேரம் சில ஊடகவியலாளர்களுடைய பங்களிப்பு என்று பார்க்கிறபோது கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மன உணர்வுகளைப் பாதித்த சல்மான் ருஷ்டியுடைய மூர்க்கத்தனமான விளக்கங்களைக் குறித்து கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசப்படுகின்ற பொழுது கருத்து வெளியீட்டு சுதந்திரமிருப்பதானால் வன்செயலுக்கு எதிராகக கண்டிக்கப்படுவதற்குமான சுதந்திரமும் இருக்கவேண்டும் என்ற சல்மான் ருஷ்டிடைய  கூற்றை மறுதலித்து  சிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரான அமீன் இஸ்ஸத்தீன்  ஓர் ஆங்கில நாளிதழில் இன்று(20) கட்டுரையொன்றை  எழுதியிருந்தார். ஆகவே மக்களின் மன உணர்வுகளை மதிக்காதவர்களைக்  கண்டிக்கவேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் இருக்கிறது.ஊடகவியலாளர்கள் துணிகரமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கும் அதைவிடத்  துணிகரம் வேண்டும்.

ஒரு கட்டத்தில் இந்த நாட்டில் முஸ்லிம் அமைச்சர்,ஆளுநர் பதவி விலகவேண்டும் என்ற தேவையற்ற பாரிய புரளியைக் கிளப்பி அதற்காகப்போய் கண்டியில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தது ஒரு கூட்டம். இங்கு நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.அதை அடிப்படையாகவைத்து நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு பெரிய முஸ்தீபு நடந்தது.  எல்லா இடங்களிலும் தடியுடன் குண்டர்களும்,இனவாதிகளும் இரவோடிரவாக  பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள்.

மிகப் பயங்கரமான சூழ்நிலை தோன்றியது நாங்கள் அரசாங்கத்தினர்  மீது அழுத்தம் செலுத்தியபோது அவர்கள்,  "பாதுகாப்பு தரப்பிடம் சொல்லியிருக்கிறோம் .ஒன்றும் நடக்காது " என்று வெறும் உத்தரவாதம் ஒன்றைத் தந்தார்கள். ஆனால், உத்தரவாதத்தினால் ஒன்றும் நடக்காது என்பதால் நள்ளிரவிற்குப் பிறகு  என்ன நடக்கிறது என்று நேரடியாக அவதானித்த எங்களுக்கு வேறுவழியிருக்கவில்லை. பிரதமரிடம் சென்றோம். ஜனாதிபதியிடம் சென்றோம் அடுத்த நாள் இந்த விடயம் பூதாகரமான கலவரமாக வெடிக்கப்போகின்றது என்ற நிலைவரம்  நிலவியது. வர்த்தகப் பிரமுகர்கள், ஜம்இய்யத்துல் உலமா முக்கியஸ்தர்கள் எல்லோரும் கூடி , பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

 "நீங்கள் இதற்கு தலைமைதாங்கி எல்லா உறுப்பினர்களுடனும் பேசுங்கள் "என்று என்னிடம் சொன்னார்கள்.
நேரடியாக நாங்கள் பிரதமரிடம் சென்று  "இதை உடனடியாக நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுங்கள் " என்று சொன்னோம் ,நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.  "தாக்குதல் நடக்கப்போகிறது. அநியாயமாக ஏதோ காரணங்களுக்காக அந்த அரசியல்வாதிகள் இருவரும் இராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்கின்ற விவகாரம் பிழையானது  என்பதை புரிந்து கொள்ளுங்கள் "என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னோம். அதற்கும் சாக்குப்போக்காக "இல்லை, நீங்கள் பொறுமையாக இருங்கள் நாங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்  என்றார்கள்.

ஆனால், நாங்கள் பொறுமையிழந்து போனோம், எல்லோரையும் அழைத்து ஒரேடியாக அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜனாமா செய்தோம். ஆனால்  அதையும் ஒரு மூலதனமாக வைத்து அடுத்த தேர்தலில் ,"இப்படிதான் இந்த முஸ்லிம்கள்.முஸ்லிம் தலைவர்கள் என்றால் பிழைசெய்த முஸ்லிம் தலைவர்களை பாதுகாப்பதற்கு எல்லோரும் சேர்ந்து கூட்டாக இராஜினாமா செய்தார்கள் பார்தீர்களா?'" என்று இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்துதான் "அதிக பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தோம் " என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு நேர்ந்த கதியைப்பார்த்தால் , "சதிகாரர்களை மிகைத்த சதிகாரன் நான்" என்று இறைவன் அல்- குர்ஆனில் கூறுவதில் எவ்வளவு அர்த்தம்  பொதிந்துள்ளது என்பதை நாங்கள் இன்று உணர்கிறோம்.

இவையெல்லாம் வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயங்களாகும். இப்படியெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தினரில் ஒரு கணிசமான சாரார்,கடந்த யுத்தத்திற்குப் பிறகு  முஸ்லிம்கள் மீது நடத்திய பாய்ச்சலின் பயங்கரம் என்பது வெவ்வேறு கட்டங்களைக் கொண்டிருந்தது.

 எனவேதான் ,அண்மையில் இது சம்பந்தமாக புதிய ஜனாதிபதிக்கு ஒர் ஆவணத்தைக் கொடுத்தபோது இப்போது அதிலும் பிழை பிடிக்கிறார்கள்.

அதைவைத்து எங்களைத் தீவிரவாதிகளாக சித்திரிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. நான் சொன்ன விடயத்தைச் சரியாகப் பார்க்காமல், உண்மையாக விடயத்தை ஆராயாமல் எடுத்தஎடுப்பிலேயே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு மதக்குழுவினருக்கு அல்லது ஒரு சமூகத்தை நோக்கி ஒரு பிழையான பிரசாரம் முஸ்லிம் தலைமைகள் சம்பந்தமாக செய்யப்படுவது என்பது கவலைக்குரிய விடயம் மாத்திரமல்ல ,கண்டனத்திற்குரிய விடயமுமாகும்.

இந் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது  , நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கக்ககூடிய விதத்திலேயே அண்மையில் நாங்கள்  ஜனாதிபதியை சந்தித்தபோது ஒரு ஆவணத்தை அவரிடம் கையளித்திருந்தோம்.  அதில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவமின்றி அங்கு  தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரமுள்ள ஒரு செயலணியை அமைத்து,   அகழ்வாராய்ச்சி தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுவது பற்றியஎமது கவலையை நாங்கள் வெளியிட்டிருந்தோம், அதன் மூலமாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்குள்ள சட்ட  அதிகாரங்களைப் பயன்படுத்தி அநீதி இழைக்கப்படக்கூடிய நிலைமை இருப்பதனால் பொதுவாக நீதியான முறையில் அதனை முன்னெடுக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம், அதற்கும்  மதிக்கத்தக்க பௌத்த மதகுருவொருவர் தவறான விளக்கத்தைக் கற்பித்து  கருத்து வெளியிட்டிருந்ததையிட்டு நாங்கள் கவலையடைகிறோம்.ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்த எமது ஆவணத்தில் அந்த விடயத்தில்  நியாமாக நடந்து கொள்ளுமாறுதான் நாம் கேட்டிருந்தோம்.


மேலும், இந்தக் காலகட்டத்தில், அதாவது இவ்வாறான வரலாற்று ஆளுமைகளைப் பற்றி புத்தகங்களில் வடித்துவைக்கின்ற இந்த நல்ல பணியை சகோதரி ஸக்கியா ஸித்திக் செய்திருப்பது போன்று, ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. அதே வேளை, இந்த சமூகம் மறந்துவிடாமல் இருப்பதற்கென்று அடுத்த சந்ததியினரும் நினைவில் வைத்திருக்கவேண்டிய விதத்தில் சில விடயங்களை உயிரோட்டமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் எப்படி ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை ஹொலோகாஸ்ட்  என்று யூத சமூகம் தொடர்ந்தும் நினைவில்வைத்திருப்பதற்கு எத்தனிக்கிறதோ அதேபோன்று எங்களுக்கு நடந்த அநியாயங்களும் அதே  அடுத்த சந்ததியினரும் நினைவில் வைத்திருக்கத்தக்கதாக  ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற விடயத்தை இங்கு அழுத்தந்திருத்தமாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.

(தொகுப்பு : எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி)

Thursday, September 9, 2021

சிவில் சமூகக்கட்டமைப்பு (ASCO)உதயம்.

சிவில் சமூகக்கட்டமைப்பு (ASCO)உதயம்.


சிவில் சமூகக்கட்டமைப்பு (ASCO)உதயம்.

செயலிழந்து போயுள்ள சிவில் சமூகக்கட்டமைப்பை வலுப்படுத்த சமூக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு (ASCO) உதயம் -  பட்டயக்கணக்காளர் எச்.எம்.எம்.றியாழ்

செயலிழந்து போயுள்ள சிவில் சமூகக்கட்டமைப்பை வலுப்படுத்த சமூக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு (ASCO) உதயமாகியுள்ளதாக பட்டயக்கணக்காளரும் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எச்.எம்.எம்.றியாழ் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 

சமூகங்களின் உரிமைகள், கோரிக்கை பேசப்பட வேண்டிய இன்றைய இக்கட்டான கால சூழ்நிலையில் சமூக அரசியல் வீழ்ச்சியையும் பின்னடைவையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சமூகத்தை வலுப்படுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்றித்துப் பயணிக்கவும் செயலிழந்து போயுள்ள சிவில் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் புத்திஜீவிகளையும் துறைசார் நிபுணர்களையும் கொண்ட அமைப்பாக அஸ்கோ (ASCO - Association for Societal Co-Ordination - சமூக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு) உருவாக்கப்பட்டுள்ளது. 

பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் எம்.எஸ்.எம்.முஸ்தாலி BSc.Eng, CEng (SL&UK), MIE(SL),  IntPE, MBA(Colombo), LLB(Hons)(U.K) அவர்களைப் பொதுச்செயலாளராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அஸ்கோவின் ஏனைய உயர்சபை உறுப்பினர்களாக புத்துஜீவிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இது அரசியலுக்கப்பால் சமூகம்சார் பல்வேறு பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதுடன், திட்டமிடலுடன் கூடிய செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. 

இதன்பிரதான நோக்கங்களாக, 
1.சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சமாதானத்தையும் உருவாக்க இணைந்து பணியாற்றுதல்.
2.புத்துஜீவிகளுடன் கலந்துரையாடி சரியான அரசியல் பாதையை மக்களுக்கு தெளிவுபடுத்துதல். 
3.மக்களுக்கிடையிலான சமூகப்பிரச்சினையைத் தீர்க்கத்தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்தல். 
4.சமூகப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அறிவுஜீவிகளை ஒருங்கிணைத்தல். 
5.சகல சமூகங்களும் நன்மையடையக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்தல். 

போன்றன அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.ஐ.லெப்பைத் தம்பி.

Wednesday, August 18, 2021

தற்கால அரசியலில் றியாழ் விசித்திரமானவர்.

தற்கால அரசியலில் றியாழ் விசித்திரமானவர்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி.

இன்றைய அரசியல்  "  அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்?" என்ற நிலையில், பலரையும் எதிர்பார்ப்புகள் கொண்ட நபராக மாற்றியிருப்பதைக் காணலாம்.

அரசியலுக்கு பலர் வரும்போது பாராளுமன்ற ஆசனத்தில் அமரவேண்டும் என்ற கனவுகளுடேனேயே வருகிறார்கள். ஆனாலும் ஒரு சிலேரே சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதை பார்க்கலாம்.

சமூகத்தில் நல்ல தலைமைத்துவங்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பொதுத்தேர்தலில் களம் கண்ட கணக்கறிஞர் றியாழை, இன்றைய அரசியல் போக்கில் விசித்திரமான மனிதராக பார்க்கிறேன்.

அடாவடி அரசியல் கோலோச்சுக் கொண்டிருந்த காலத்தில், புதிய அரசியல் கலாச்சாரத்தை கல்குடா மண்ணில் ஏற்படுத்தும் நோக்கில், அன்றைய தனது தேர்தல் களத்தை பயன்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கி,இளம் தலைமுறைக்கு உதாரணமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அரசியலில் ஒருவர் பிரவேசித்து அதிகாரங்களை பெற்றுக் கொண்டால், அதனை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்பார்கள். நல்ல தலைமைத்துவங்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல உருவாகுவதற்கும் விரும்ப மாட்டார்கள். சிலர் அரசியலில் ஒரு கட்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டால், அடுத்த தேர்தலில் மாற்று கட்சி மேடைகளிலேயே பெரும்பாலும் காணலாம்.

ஆனாலும் றியாழ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அறிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாதுபோனாலும், வாக்களித்த மக்களுக்காக தன்னாலான அனைத்து பணிகளையும் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்.

இம் முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பிருந்த போதிலும், தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்து, இளம் தலைமைத்துவம் உருவாகுவதற்கு வழிகாட்டியிருக்கிறார்.
தான் இல்லை என்றால் அந்த இடத்திற்கு மற்றவர்கள் வந்துவிடக்கூடாது என நினைப்பவர்களுக்கு மத்தியில் றியாழ் அவர்களின் இத்தகையே செயற்பாடு எதிர்கால சந்ததியினாருக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
அஷ்ரப் என்ற ஆளுமையின் 20 வருட இழப்பும் : கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும்.

அஷ்ரப் என்ற ஆளுமையின் 20 வருட இழப்பும் : கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும்.



எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.

இலங்கையில் முஸ்லிம் அரசியலில் பலர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஒரு சிலரே மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களில் ஒருவராக மர்ஹும் அஷ்ரப் அவர்களை நாம் பார்க்கிறோம்.

இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டில் (1948) ஒரு சமூகத்தின் விடிவுக்காய் கிழக்கில் உதித்த சூரியனாக சம்மாந்துறை மண்ணில் குஸையின் விதானை, மதினா உம்மா தம்பதியினருக்கு மகனாக அஷ்ரப் ஒக்டோபர் 23 இல் பிறந்தார்.

கல்முனை வெஸ்லி கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியையும் பின்னர் இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை தொடர்ந்து, சட்டத்தரணியாக கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமாணி பட்டமும் பெற்றார். ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் பின்னர் நியமிக்கப்பட்டார்.

எழுத்துத்துறையிலும் தனது திறமைகளை வெளிக்காட்டினார். சிறுகதைகள், கவிதைகள், பத்திரிகை மற்றும் சஞ்சிகைக்கு தமிழில் கட்டுரைகளும் எழுதினார். இவர் எழுதிய "நான் எனும் நீ" கவிதை பெரும் தொகுப்பாக வெளியிடப்பட்டது. கவிஞர் திலகம் என அஷ்ரப் போற்றப்பட்டார். அரசியலமைப்புச்சட்டம் தொடர்பாக தமிழில் ஒரு நூலை எழுதினார்.

இவ்வாறு தனது திறமைகளை அரசியலிலும் வெளிக்காட்டத் தவறவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களாலும் கவரப்பட்டிருந்தார். முஸ்லிம் அரசியல் தொடர்பாக ஒரு தேடல் அவரிடம் காணப்பட்டது. அந்த அடிப்படையில் அஷ்ரப் ஏனையவர்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1977 இல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) என்ற கட்சியை ஆரத்பித்து, அதன் சட்ட ஆலோசகராகவும், கோட்பாடு சார்ந்திருந்தார்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியில் அரசியல் பயணத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தனது அரசியலை அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் 1980 இல் இணைத்துக் கொண்டார். அதன் பின்னர், 1980, 81 காலப்பகுதியில் காத்தான்குடியில் அஹமட் லெப்பை தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதனோடு அஷ்ரப் போன்றவர்களும் இணைந்து செயற்பட்டார்கள்.

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவுமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அரசியல் கட்சியாக 1986 இல் பிரகடனப்படுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியின் இஸ்தாபகத் தலைவராகினார்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வாக 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையில் 1988 இல் நடைபெற்ற  மாகாண சபைத்தேர்தலில் வடகிழக்கிற்கு வெளியில் முதன்முதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு, 12 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

அத்தோடு, இணைந்த வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலிலும் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போட்டியிட்டு, 17 ஆசனங்களைக் கைப்பற்றி, வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைமையையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரமதாசா அவர்களுடனான பேச்சுவார்தையின் போது, பாராளுமன்றத்தேர்தல் வெட்டுப்புள்ளி 12.5% வீதமாக இருந்ததை 5% வீதமாக குறைத்து சிறுபான்மை, சிறிய கட்சிகளும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழியமைத்தார். 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலாக பாராளுமன்றம் பிரவேசித்தார்.

இவ்வாறு தனது அரசியல் பயணத்தை தூரநோக்கோடு நன்கு திட்டமிட்டு முன்னெடுத்திருந்தார். அரசியல் அதிகாரங்களாக கப்பல், துறைமுகங்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரவை அமைச்சராகப் பதவி வகித்தார். இக்குறுகிய காலப்பகுதில் இன்றும் பேர் சொல்லும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், துறைமுக வேலைவாய்ப்புகள் இன்றும் பேசப்படும் விடயங்களாகும்.

இவ்வாறு அரசியலில் அன்றைய சூழ்நிலைக்கேற்ப பல்வேறு கருமங்களை ஆற்றிருந்தார். இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் போது, முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கான பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன், நிர்வாக மாவட்டம், தென் கிழக்கு அலகு போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

ஆயுதப்போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்திய தலைவராக மர்ஹும் அஷ்ரப் காணப்படுகிறார். முஸ்லிம் சமூகத்தை ஒரு கட்சியில் ஒற்றுமைப்படுத்தி அதனூடாக உரிமைகளை வென்றெடுக்கவே முயற்சித்தார். 

அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வுகளை அடையாளப்படுத்தி அவைகளுக்கான கொள்கைகளை வகுப்பதில் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல புத்திஜீவிகள் அஷ்ரப் அவர்களுக்கு துணையாகச் செயற்பட்டார்கள். 

தனது அரசியல் பயணத்தில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிலேயே முக்கிய அரசியல் பதிவிகளைப் பெறும் நிலையை தனது சாணக்கியத்தால் உருவாக்கவும், அன்றைய இனவாத சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி திருப்பப்படுவதில் அதன் எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து அதற்குத் தீர்வாகவும் எல்லா சமூகத்தவர்களையும் இணைத்துக் கொண்டு தனது அரசியலை முன்னெடுக்க 1999 இல் புதிய பாதையை 2012 ஐ நோக்கியதாக அமைத்துக் கொண்டார்.

1999 ஆம் ஆண்டு தூரநோக்கு சிந்தனையில் அஷ்ரப் அவர்களால்  தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது. 

இதனூடாக பல நகர்வுகளை மேற்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த தலைவர் அஷ்ரப், 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 நாள் ஹெலிகப்டர் விபத்தினூடாக நீங்கா துயரில் எம்மனைவரையும் ஆழ்த்தி விட்டுச் சென்றார். இன்று 20 வது வருடங்கள் பூர்த்தியாகின்றது.

அஷ்ரப் என்ற பல்துறை ஆளுமையின் அனுபவங்களைப் பாடமாகக்கற்று, இன்றைய சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை வகுத்து, உரிமைக்கான போராட்டங்களை சமூக மட்டத்தில் புத்திஜீவிகளின் வழிகாட்டுதல்களைப் பெற்று நகர வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

அன்றைய இனவாதத்தீயை அணைப்பதற்கான  தீர்வாக எல்லா இனங்களையும் ஒன்றிணைத்து அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் ரீதியாக முன்னெடுக்கத்தயாரானார். இன்று இனவாதம் முஸ்லிம் சமூகத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இனவாதிகளுக்கு உச்சாகம் கொடுக்கும் அரசாங்கம் பலமாக அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலமிழந்திருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தம் மாற்றியமைக்கப்படத் தயாரிகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், ஒரே நாடு,ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது.  எனவே, இந்த இக்கட்டான காலப்பகுதியில் தான் மர்ஹும் அஷ்ரப்பை நினைவுகூர்கிறோம்.  அஷ்ரப் எனும் ஆத்மா சமூகத்தைப் பாடமாகக் கற்றதன் விளைவாகவே தூரநோக்கோடு சமூக அரசியலை முன்னெடுக்க முடிந்தது.

2000 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல் பல கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறு அரசியல் பிரிப்பின் காரணமாக முஸ்லிம் சமூகமும் பிரிந்து காணப்படுகிறது. தாய்க்கட்சி பலமாக இருந்த காலப்பகுதில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது. 

இவைகளைப் பார்துக்கொண்டிருந்த பேரினவாதம் நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஆனால்,  ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக சிறுபான்மையான இவர்கள் இருக்கிறார்கள் என்ற குரோதத்தின் வெளிப்பாடு தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தவர்களை ஆளுந்தரப்பு தங்களின் வாசிக்காக அன்று பிரித்து, அரசியல் அதிகாரங்களை வழங்கி பல கட்சிகளை உருவாக்கி மக்களையும் பிரித்து,  இன்று முஸ்லிம் சமூகத்தில் அரசியல் ரீதியாக பிரிவினை வருவதற்கு காரணமாக இருந்தார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், அரசியல் ரீதியாக வேற்றுமை மறந்து ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்திலும், தங்களின் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக குறுநில மன்னர்களான பிராந்திய அரசியல்வாதிகள் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமைக்குப் பாதகமாகவே செயற்படுவதைக் காணலாம். இவை தேர்தலை இலக்காகக் கொண்டு தாங்கள் வெற்றி பெற்று அதிகாரங்களைப் பெற வேண்டுமென்ற குறுகிய நோக்கமேயன்றி, சமூக நோக்கமல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.

அஷ்ரப் மரணித்ததன் பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளில் அரசியலை முன்னெடுத்துச் சென்றவர்களுள் இன்றும் ஒரு பிரச்சனை வரும் போது அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து வழிநடாத்திச் செல்லக்கூடியவராக ரவூப் ஹக்கீம் காணப்படுவதை கடந்த நிகழ்வுகள் எமக்கு உணர்த்துகின்றது.

தேர்தல் இலக்கிலிருந்து வெளியேறி புதிய அரசியலமைப்பில் எமது உரிமைகளைப் பாதுகாக்கவும், இனப்பிரச்சனைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாகவிருந்தால், அதில் முஸ்லிம் சமூகத்தின் பங்கை சரியாகப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒன்றுபட்டு ஒரு அணியாக கட்சி வேறுபாடுகளுக்கப்பால் செயற்பட வேண்டும்.

எனவே, மர்ஹும் அஷ்ரப்  மரணித்து 20 வது வருடப்பூர்த்தியில், அவர் விரும்பிய சமூக ஒற்றுமையையும், அவரின் கடந்த கால அரசியல் நகர்வுகளையும் பாடமாகக்கற்று, வேற்றுமைகளைக்களைந்து சமூகத்திற்கான அரசியலை முன்னெடுக்க அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சமூகத்தின் எதிர்காலம் கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

Tuesday, August 18, 2020

தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது. SLMC அரசாங்கத்துடன் இணையுமா??

தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது. SLMC அரசாங்கத்துடன் இணையுமா??


தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.

தற்போது நாட்டில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்று அரசு அறுதிப்பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டதாக அமைந்திருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் கடந்த கால நிகழ்வுகள், பேரினவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கோசம், தற்போதைய அரசாங்கமும் பேரினவாதிகளின் கோசத்தை வலுவடையச்செய்து தான் இவ்வாறான வெற்றியை அடைந்திருக்கிறது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் சார்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளும், இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளுமா? என்ற அச்சங்களும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  அதனோடு இணைந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியில் போட்டியிட்டிருந்தது.

இவ்வாறு முஸ்லிம் தரப்பு எதிரணியில் இருந்ததனாலும், கடந்த காலங்களில் தங்களுக்குத் தேவை ஏற்பட்ட போது, தங்களுக்கான ஆதரவை தரவில்லை என்பதோடு, தங்களை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் என்ற கோபம் ஆட்சியாளர்களுக்குண்டு. இக்கோபம் காரணமாக முஸ்லிம் சமூகம் தண்டிக்கப்பட்டு விடுமென்ற அச்சம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் உண்டு. 

இவ்வச்சம் காரணமாகவும், இன்னும்  ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும், மேற்சொன்ன இரு முஸ்லிம் கட்சி மீதான காழ்புணர்விலும் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சிலர் மேற்சொன்ன இரு முஸ்லிம் கட்சிகளாலும் தான் முஸ்லிம்களுக்கு இந்நிலைமை என்ற கோசத்தை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்.

ஆளுங்கட்சி அதிக பெரும்பான்மையுடன் வென்று விட்டதென்பதற்காக அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான கடந்த காலப்பார்வையை நாம் மறக்க முடியாது. அத்தோடு, பயந்து கொண்டு அவர்களோடு சரணாகதி அரசியலைச் செய்யவும் முடியாது. எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறதென்பதை வைத்துத்தான் ஆதரவு கொடுப்பதா? இல்லையா? என முஸ்லிம் சமூகம் முடிவு செய்யலாம்.

இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் 2/3 பெரும்பான்மைப் பலத்தோடு தாங்கள் நினைத்த விடயங்களைச் சாதிக்கலாம் என்ற நிலை இருக்கும் போது, தங்களை எதிர்த்து அரசியல் செய்த சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு பயணிக்கும் அவசியமில்லை. மேலும், இந்த அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதாக இருந்தால், எவ்வித உடன்பாடுகளுமின்றி இணைந்து கொள்ள வேண்டியது தான். உரிய கௌரவமும் கிடைப்பது சந்தேகம்.

அதை விட, எதிரணியில் இருந்து கொண்டு நாட்டிற்கு நன்மையான விடயங்களில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதும், பாதகமான விடயங்களின் போது அரசாங்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் எதிர்த்து கருத்துகளை வெளியிடுவதோடு, மக்களை விழிப்படையச்செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். 
தங்களின் சமூகத்திற்கெதிரான விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் போது, அவற்றுக்கெதிராக குரல் கொடுப்பதோடு, அதன் நியாயங்களை தேசிய, சர்வதேச மயப்படுத்தி தீர்வுகளைக் காண முடியும். முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது இன்று பெரும்பான்மை இன மக்கள் கொண்டுள்ள தப்பான அபிப்பாராயங்களை இல்லாமலாக்கி,  அவர்களின் ஆதரவையும் எதிர்காலத்தில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவை இவ்வாறிருக்கத்தக்கதாக முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆளும் தரப்போடு இணையவிருப்பதாக பல கருத்துக்கள் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

சஜித் அணியினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் வாக்குறுதி நிறைவேற்றப்படாமை போன்ற காரணங்களைச் சொல்லி முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சஜித் பிரமதாசவை கடுமையாகச்சாடி ஊடக அறிக்கைகள் வெளிட்டதும், இவ்விருவரும் ஆளுந்தரப்புக்கு ஆதரவான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை வைத்தும் பல கருத்துக்கள் சமூக மட்டத்தில் பேசப்படுகிறது. இதனைப்பலரும் விமர்சிப்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறான விமர்சனங்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீதான தவறான புரிதலை மென்மேலும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் விதைத்து விடுமென்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

பதவிகளுக்காக சோரம் போன சமூகமில்லை முஸ்லிம் சமூகம் என்பதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கமும் பதவிகளுக்காக சோரம் போனதுமில்லை என்பதை கடந்த காலங்களில் நிரூபித்திருக்கிறது.

எனவே, இவ்வாறான கருத்துக்கள் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பேசப்படுவது, தலைவர் இருக்கத்தக்கதாக கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுவதால் ஏற்பட்டதாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்திற்கு ஒரு கட்டுக்கோப்பிருக்கிறது. முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பில்லாத தீர்மானங்களை கட்சி என்ற அடிப்படையில் சகலரது அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து, கட்சியின் உயர்பீடத்தைக்கூட்டி மக்களின் அபிப்பிராயம், தற்போதைய சூழ்நிலை, சாதக, பாதகங்களை ஆராய்ந்து இறுதி முடிவை தலைமை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

அவ்வாறின்றி, ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது சமூகத்திற்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு, மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான நன்மதிப்பும் இழக்கப்படும் நிலை தோன்றும்.

எனவே, தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது. அவ்வாறு ஆடும் போது, விரும்பத்தகாக விளைவுகள் ஏற்படுவதோடு, கட்சியின் ஒழுக்கமும் கேள்விக்குறியாகி விடும். இது விடயத்தில், பொறுப்புள்ளவர்கள்  பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

Friday, May 15, 2020

காய்க்கின்ற மரத்துக்கே கல்லடி

காய்க்கின்ற மரத்துக்கே கல்லடி

எம்.என்.எம். யஸீர் அறபாத், ஓட்டமாவடி.

உலக நாடுகள் கொவிட்–19 எனும் கொரோனா நோயினால் மரண பீதியிலிருக்க, இலங்கையில் கொரோனாவின் பெயரால் முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் சமூகம் இன்று சோதனைகளாலும் வேதனைகளாலும் சிக்குண்டு காணப்படுகிறது. கொவிட்–19 தொற்றினால் மரணிப்பது என்ற சோதனையைவிட, மரணித்த ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற வேதனையை ஜீரணிக்க முடியாதது.

இலங்கையில் கொவிட்–19 தொற்று ஆரம்பித்த காலப்பகுதியில், முஸ்லிம் ஒருவர் மரணிக்க நேர்ந்தால் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்யவேண்டும் என்ற அடிப்படையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அரசுக்கு மிக நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி போன்றோரின் முயற்சியினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின்படி அடக்கம் செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது.

கொவிட்–19 தொற்றினால் முதலாவது முஸ்லிம் ஒருவர் மரணிக்கும் வரை, ஜனாஸாவை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கவில்லை. சுற்றுநிரும் வெளியிடப்பட்டிருப்பதால், அரசாங்கத்துடன் அவை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கான தேவையும் அரசியல் தலைவர்களுக்கு ஏற்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில்தான் கொவிட்–19 தொற்றினால் முதலாவது முஸ்லிம் சகோதரர் ஒருவர் மரணிக்கிறார். ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் இந்த ஜனாஸா செய்தி கிடைக்கின்றது. அப்போது ஏற்கனவே எரிப்பதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு அனுமதி இருப்பதால் அதை யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ஜனாஸாவை அடக்கம்செய்ய அனுமதிக்காமல் எரிக்கப்போகிறார்கள் என்ற செய்தி கடைசி நேரத்தில்தான் தெரியவருகிறது.

இந்த நிலமையை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அரச உயர்மட்டங்களோடு அவசர அவசரமாக பேசிக்கொண்டிருக்கும்போதே, ஜனாஸா எரிக்கப்பட்டதாக துக்ககரமான செய்தி வந்தடைகிறது.

இறந்த உடல்களை எரிப்பது என்பது, முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜீரணிக்க முடியாததொரு விடயம். முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் அதன் நியாயங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஜனாஸாவை அடக்குவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. 

இதன்பின்னர், கொவிட்–19 தொற்றினால் இறந்த உடல்களை எரித்தல் அல்லது புதைத்தல் என்ற அரசாங்கத்தின் சுற்றுநிருபம், இறக்கும் அனைவரையும் எரிக்கவேண்டும் என ஒரேயடியாக மாற்றப்படுகிறது. அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்களை எடுத்துவைத்து, அரசாங்கத்தின் ஈனச் செயலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முதல் மனிதனாக பகிரங்கமாக தட்டிக்கேட்கிறார்.

அரச உயர்மட்டங்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தின் கவனத்துக்கும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தை எத்திவைக்கிறார். இனியாவது ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல், அடக்கம் செய்வதற்கான அனுதியைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் செல்வாக்குமிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களுடனும் பேசி, இவ்விடயத்தை சாதிக்கும் முயற்சிகளில் மும்முரமாக செயற்பட்டார்.

அத்துடன் இது தேர்தல் காலமாக இருப்பதால், ஒவ்வொருவரும் தங்களதும் தான்சார்ந்த கட்சியினதும் வெற்றியை இலக்காக கொண்டு மக்கள் மத்தியில் புள்ளிபோட்டுக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ரவூப் ஹக்கீம், அரசியலை ஒதுக்கிவைத்து விட்டு, எதிர்முகாம் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு சமூகத்தின் முக்கிய பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி குழு கூட்டம் கூட்டப்பட்டபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதமருடன் பேசுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் குழு தீர்மானித்தது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் பிரத்தியேகமாக பேசுவதற்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு பிரதமரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அனைவரும் இருக்கத்தக்க நிலையில், பகிரங்கமாக பேசுவதற்கே பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

ஜனாஸா எரிப்பு விவகாரம் அரசில் நோக்கோடு, இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இக்கூட்டத்தில் அவ்வாறானவர்களும் கலந்துகொண்டிருக்கும்போது இதன் நியாயங்கள் புரிந்துகொள்ளப்படாது எதிர்க்கப்படலாம் என்பதாலேயே தனித்துப் பேச அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஜனாஸாவை அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்கள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள், ஏனைய நாடுகளில் இவ்வாறு மரணிப்பவர்களை அடக்குவதற்கான அனுமதி, இறந்த உடலிலிருந்து வைரஸ் கிருமிகள் பரவாது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் போன்றன முஸ்லிம் தரப்பில் இக்கூட்டத்தில் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன. 

இந்த விடயத்தை ஆராய்வதற்கு, நிபுணத்துவமிக்க குழுவொன்றை நியமித்து தீர்க்கமானதொரு முடிவை எட்டுவதற்கான கருத்தாடல்கள் இடம்பெற்றாலும், அதையும் இனவாத அரசியலாக்கும் முயற்சிகளில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் ஈடுபட்டனர். அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்களை புரிந்துகொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாஸாக்களை அடக்கம் செய்தால் சிங்கள மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பதை காரணம்காட்டி, ஜனாஸாக்கள் எரிக்கப்பட ஆரம்பித்தன.

தனது சிங்கள வாக்குவங்கியைப் பற்றி கவலைப்படாமல், ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் தைரியமாக குரல்கொடுத்த ரவூப் ஹக்கீமுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்தன. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் சில முஸ்லிம் தரப்பினரும், ரவூப் ஹக்கீமின் போராட்டத்தை மலினப்படுத்தி ஜனாஸா எரிப்புக்கு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தினர். ஒருசிலர் பகிரங்கமாகவே ஜனாஸா எரிப்பை நியாயப்படுத்தியும் இருந்தனர்.

இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை ரவூப் ஹக்கீமுக்கு இல்லை. பர்ளு கிபாயாவான ஜனாஸாவுக்குரிய கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்களின் பிரதிநிதியாக குரல்கொடுத்தார். பர்ளு கிபாயா கடமையை அவர் செய்யாவிட்டால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இறைவனிடத்தில் குற்றவாளிகளாக நிற்கவேண்டியேற்படும். 

இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீம் அரசியல் செய்பவராக இருந்திருந்தால், மற்றவர்களை விட அவர்தான் அமைதியாக இருந்திருக்கவேண்டும். காரணம், அவர் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதால் அதிகளவான சிங்கள வாக்குளை நம்பியிருக்கிறார். தனது வாக்குவங்கியை தக்கவைப்பதற்கு நினைத்திருந்தால், சிங்கள மக்களை உசுப்பேற்றுவதாக நம்பப்படும் இந்த விடயத்தில் அவர் மெளனம் காத்திருக்கலாம்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் ரவூப் ஹக்கீம் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமையையே செய்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரும் மௌனித்திருந்தபோது, வெதும்பிய உள்ளங்களுக்கு ஆறுதலாக ரவூப் ஹக்கீமின் குரல் ஒலித்தது சற்று நிம்மதியைத் தந்தது. ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்கும் நோக்கில் அவர் இன்றுவரை வெளிப்படையாகும் மறைமுகமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூகத்துக்கு இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, ரவூப் ஹக்கீம் முதல் மனிதனாக முன்வந்து குரல்கொடுக்கும்போது அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாகுகின்றார். அதுவும் குறிப்பாக இது தேர்தல் காலம் என்பதால், ஜனாஸா எரிப்பை நியாயப்படுத்தி அவரின் செயற்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசுவது மிகவும் வேதனையான விடயம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொருத்தளவில், ஸ்தாபத் தலைவர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வெளிநாடுகளுடனான தனது இராஜதந்திர உறவுகளை தொடங்கினார். அதனை இன்றும் பலப்படுத்திக் கொண்டிருப்பவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார். முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, சர்வதேச சமூகத்திடம் தைரியமாக எத்திவைப்பத்தில் அவரின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

ரவூப் ஹக்கீம் ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, சமூகம் பாதிக்கப்படும்போது தனது இராஜதந்திர நகர்வுகள் ஊடாக ஆளும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து, முஸ்லிம்களின் விடயத்தில் கரிசணை கொள்ளச் செய்வதில் இராஜதந்திரமாக கடந்த காலங்களிலும் செயற்பட்டுள்ளார் என்பது வரலாறு.

இவ்விடயங்களில் பூரண தெளிவில்லாத ஒரு சிலரால் ரவூப் ஹக்கீம் விமர்சிக்கப்படுகிறார். ஆனாலும், தேர்தல் காலங்களில் நானும் தலைவர்தான் என்று முஸ்லிம் பிரதேசங்களுக்கு வருபவர்கள் மற்றும் இந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளோ, பிரமுகர்களோ விமர்சிக்கப்படவில்லை என்பது நமக்கு ஒரு விடயத்தை உணர்த்துகிறது. "காய்க்கும் மரத்துக்கே கல்லடி விழும்

Thursday, January 23, 2020

தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்
......................
(முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்)
.......................
இறப்புக்கு உணர்ச்சியூட்டுவதைத் தவிர்க்கவும்: 
உண்மைகளை உணர்ச்சியூட்டாமலும், தலைப்புச் செய்தியில் காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டாமலும் கூறவும். 
செயல்பாட்டின் விவரங்களைக் கூறும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 
தேவைப்பட்டால், அந்த நபரின் முந்தைய படங்களைப் பயன்படுத்தவும்
. உறவினர்களின் தனியுரிமையை மதிக்கவும்
.இறப்பிற்காக ஒற்றைக் காரணி மீது காரணம் கற்பிப்பதைத் தவிர்க்கவும்
: தற்கொலை ஒரு சிக்கலான நிகழ்வு, மேலும் அது பொதுவாகப் பல்வேறு காரணிகளின் கலவையால் நிகழ்கிறது. 
பொருள் சான்று இல்லாமல் தற்கொலையின் காரணத்தைக் குறைத்துப்பேசவேண்டாம். 
விரிவான விசாரணைக்குப் பிறகே காரணத்தைத் தீர்மானிக்கலாம், மேலும் தற்கொலை சிக்கலானது, பல காரணிகள் உடையது என்று குறிப்பிடவும்
. தற்கொலையை, உறவுப் பிரச்னைகள், நிதிச் சிக்கல்கள் அல்லது தோல்வியை எதிர்கொள்ளும் வழியாகக் குறிப்பிடவேண்டாம்.
செய்தியை முதற்பக்கத்தில் அல்லது குற்றப்பக்கத்தில் பதிப்பிப்பதைத் தவிர்க்கவும்: செய்தியை முதற்பக்கத்தில் பதிப்பிப்பது அதனை உணர்ச்சிப்பூர்வமாக்குகிறது, அஅதேவேளையில் குற்றப்பக்கத்தில் பதிப்பிடுவது தற்கொலை ஒரு 'தவறு' என குறிப்பிடுகிறது. செய்தியைப் பிற இறப்புகள் அல்லது இறப்பு அறிவிப்புகளுடன் பயன்படுத்தவும். தற்கொலையின் காரணத்தைத் தலைப்பில் குறிப்பிட வேண்டாம்.
நிகழ்வு குறித்து விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்கொலைக் குறிப்பைப் பகிர்தல், குறிப்பிட்ட முறை, அல்லது முன்தயாரிப்புகள், சூழ்நிலை, அல்லது அது நிகழ்ந்த இடத்தை குறிப்பிடுவதைத் தவிருங்கள். இந்த விவரங்களைப் பகிர்வது அதுபோன்ற தற்கொலைகளை அதிகரிக்கலாம்.
தற்கொலையை ஓர் அடையாளமாக,சின்னமாக,எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகக் காட்டுவதைத் தவிர்க்கவும். இதன்மூலம், அதுபோன்ற பிரச்னைகள் பொதுவில் பேசப்படும்போதெல்லாம் அந்தக் குறிப்பிட்ட நபரின் படங்கள் அல்லது செயல் பயன்படுத்தப்படக்கூடும். இது, சமூகத்தில் தற்கொலையின் விளிம்பில் இருக்கும் நபர்கள், அதனை ஒரு மரியாதையான பொருளாக, அங்கீகாரம், பொருள் தரக்கூடியதாகக் கருதக் காரணமாகலாம். 
கவனமானது இறந்த நபருக்கு வருந்துவதில் இருக்க வேண்டும், அவர்கள் இறந்த முறை குறித்து இருக்கக் கூடாது.நுண்ணுணர்வுடன் இருக்கவும்,குறிப்பாக பெரிய நபர்களுடைய தற்கொலை குறித்துப் பேசுகையில் இது அவசியம். மக்கள் பிரபலங்களில் தங்களை அடையாளம் காண்கிறார்கள், அவர்களை பின்பற்றுபவர்களில் தற்கொலையின் விளிம்பில் உள்ளவர்கள் அவர்களைப்போலவே தற்கொலையை முயற்சிசெய்ய வாய்ப்புள்ளது. மற்றவர்கள், 'எல்லாவற்றையும் கொண்டுள்ள நபர்களுக்கே தற்கொலை வெளியேறும் வழியாக இருக்கும்போது, அது தங்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்' எனக் கருதலாம். தவறான நேரத்தில் நிகழ்ந்த இறப்பு குறித்து விரிவான விளக்கம் கொடுத்து, அது தற்கொலையாக இருக்கலாம் என்று குறிப்பிடவும்.
பொதுமக்களுக்குத் தற்கொலை குறித்து விழிப்புணர்வூட்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தவும்: 
தற்கொலையிலிருந்து தப்பியவர்களுக்கான உதவி மையம் மற்றும் வளங்கள் குறித்த தகவல்களை வழங்கவும்.
 முன்பு உயிர் பிழைத்தவர்களுடைய கதைகளை வெளியிடலாம், அவர்கள் உதவியை நாடியது, சவாலை எதிர்கொள்ள அது அவர்களுக்கு எப்படி உதவியது என்ற விவரங்களுடன் பதிப்பிக்கலாம்.
 தற்கொலை அபாயம்பற்றிய அடையாளங்கள், மக்கள் தங்களுக்காக அல்லது பிறருக்காக எப்படி உதவியை நாடலாம் என்பதைப் பகிரலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால்,செய்தியை வெளியிடுமுன் மனநல நிபுணர்கள், மற்றும்/அல்லது அதிகாரிகளுடன் அதனைச் சரிபார்க்கவும்.
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்.
உசாத்துணைகள்:
https://tamil.whiteswanfoundation.org/article/media-advisory-reportingonsuicideதற்கொலை பற்றிய பத்திரிக்கைச் செய்திகள் தற்கொலைச் செய்தி வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா: http://www.nimhans.ac.in/
nimhans-centre-well-being/researchதற்கொலைய
ைத் தவிர்த்தல்,ஊடக நிபுணர்களுக்கான விவரங்கள்: http://www.who.int/mental_health/
prevention/suicide/resource_media.pdf