Thursday, February 2, 2017

இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள்

இலங்கையின் சுதந்திர தினம்
******************************** 
 *********************************

#04.02.1948 ல் இலங்கை சுதந்திர ம் பெற்றது.

#இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள்,

போர்த்துக்கேயர்:
ஒல்லாந்தர்:
ஆங்கிலேயர்:

📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.

📝இலங்கையின் சுதந்திர த்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் உள்ளன.

#சுதந்திரம் கிடைத்து 69 ஆண்டுகளுக்குள்
சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம் தேசிய வீரர்களின் பெயர்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் இருந்து படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
 
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள்,
**********************************
#சேகு டீ டீ(தோப்பூர்),

#முகம்மது, சலாம் பட்டி உடையார்(குச்சவெளி),

#அபூபக்கர் ஈஸா(முகாந்தி ரம் சம்மாந்துறை),

#மீரா குசைன் காரியப்பர்(சம்மாந்துறை),

#உசன் லெப்பை உதுமாலெப்பை(சம்மாந்துறை),

#அனீஸ் லெப்பை(மருதமுனை),

👉📚இலங்கை சட்டக்கோவை பாகம் 1,பக்கம் 77,78.(1786-1833),

👉இலங்கையின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தேசிய வீரர்கள்.
**********************************

சட்ட வல்லுனர்:முகம்மது காசிம் சித்தி லெப்பை(M.C.Sithy Lebbai)

#சட்ட வல்லுனர்:I.L.M.Abdul Azeez,

👉1924 ல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் வெற்றியீட்டிய சட்டசபை உறுப்பினர்களான:

#சேர்:மாக்கான் மாக்கார்

#N.H.M.அப்துல்காதர்,

#கலாநிதி:துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya),

📝1939.03.05 ம்
திகதி முஸ்லிம் அரசியல் மாநாட்டில்
#கலாநிதி:பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார்.

👉1945.11.09 ல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில்

#சேர்:ராசீக் பரீட்

#டொக்டர்:M.C.M.கலீல்

#T.B.Jaya
போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.

😥 இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு
#M.C.சித்தி லெப்பை, #T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினர் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமை காரணமாக அவர்களின் பெயர்களை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

👉இது சுதந்திரத்திற்காக உயிர்நீத்த,போராடிய முஸ்லிம் தலைவர்களுக்கு நாம் செய்து வரும் வரலாற்றுத் துரோகமாகும்

தேசிய தினம் இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்.இதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குண்டு.

முஸ்லிம்களின் தேசிய வீர்ர்களை முஸ்லிம்கள்தான் நினைவு கூர வேண்டும்.இது எங்களின் கட்டாயக் கடமையாகும்.


😪😥😢வரலாற்றை மறந்து வாழும் சமூகம் இன்னொரு சமூகத்தினால் கட்டியாளப்படும் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட உண்மையாகும்.

SHARE THIS

3 comments:

  1. இலங்கையில் மட்டும் அல்ல முஸ்லீம்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் என்பதை மறைக்கும் செயல். என் தாய்நாடு இந்தியாவிலும் குறிப்பாக இப்பொது உள்ள பி ஜே பி பாசிச அரசு இதனை திட்டமிட்டே செய்கிறது.

    ReplyDelete
  2. இலங்கையின் சுதந்திரத்திற்காகப் போராடிய தேசிய வீரர்களின் பெயர்களை கூர முடியுமா?

    ReplyDelete