எம்.என்.எம்.யஸீர் அறபாத்-
ஓட்டமாவடி
ஒரு சிலர் வரலாற்றை எழுதுகிறார்கள் ஒரு சிலர் வரலாற்றை படிக்கிறார்கள் ஆனால் வரலாற்றில் ஒரு சிலரால் மாத்திரமே தடம் பதிக்க முடிகின்றது அவ்வாறு தனது அரசியல் ஆளுமையினால் கல்குடா சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை எதிர்காலத்தில் வென்றெடுக்க கூடிய ஒரு புது முக அரசியல் வாதியை பற்றியே நாம் பார்க்கவிருக்கின்றோம்.
கல்குடா மண்ணில் மீராவோடை கிராமத்தில் ஹயாத்து முஹம்மது தம்பதியினருக்கு
மகனாகப் பிறந்தவர் தான் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள். பாடசாலைக் காலங்களில் மிவும்
கெட்டிக்காரராகத் திகழ்ந்தார். அதனாலேயே ஐந்தாம் தரப்புலமைப்பரீட்சையில்
அதிகூடிய புள்ளிகளைப் பெற்று, இப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற முதலாவது
மாணவனாகத் திகழ்ந்தார்.
அதனுடாக தான் கற்ற பாடசாலையான மீராவோடை அல்-ஹிதாயாவுக்கும், தான் பிறந்த
மீராவோடை மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். அத்தோடு, அவருக்கு கொழும்பு றோயல்
கல்லூரிக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் கிட்டியது. றோயல் கல்லூரியில்
நுழைவுக்கென நடாத்தப்பட்ட தேர்வுப்பரீட்சையிலும் அதிகூடிய புள்ளிகளைப்
பெற்றார்.
இவ்வாறு தமது திறமைகளை கல்வி ரீதியாக வெளிப்படுத்தி, தனது முன்னெற்றத்தை
ஆரம்பித்தார். சிறு வயதில் தந்தையை இழந்த போதும், வறுமையிலும் தனது தாயின்
வழிகாட்டலில் கல்வி நடவடிக்கையில் முன்னேறிச் சென்றார். இவ்வாறான நிலைமைகளில்
அவருக்கு பக்க பலமாக இருந்து அவரின் முன்னேற்றத்துக்கு பெரிதும் பாடுபட்டவர்
அவரின் தாய்.
ஒரு கட்டத்தில் கல்வியை இடைநிறுத்தி விட்டு குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு
வேலைக்குச் செல்வதற்கு முற்பட்ட போது, அதனை அவரின் தாயார் மறுத்து கல்வியைத்
தொடருமாறே வலியுறுத்தினார். தாயின் கட்டளையை ஏற்று கல்வியைத் தொடர்ந்தார்.
அதனாலேயே பல பட்டங்கள் பெற்று கல்வி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் உயர்
பதவிகளைப் பெற்று பொருளாதார ரீதியில் முன்னெற்றம் கண்டார்.
அன்று அவர் கல்வியைத் தொடராது விட்டிருந்தால், இந்நிலையை அடைந்திருக்க
முடியாது. கஷ்டமான நிலையாக குடும்ப நிலை இருந்த போதும், அவைகளைச் சவாலாகக்
கொண்டு பொறுமையாக தனது உயர் கல்வியைத் தொடர்ந்து, இன்று சாதனையாளனாக ஊர்
பெறுமைப்படும் ஒரு கணக்கறிஞராகத் திகழ்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு
முன்னுதாரணமாகவும் இருக்கிறார்.
பதவி, பட்டம், பணம், அந்தஸ்து, கௌரவம் என எல்லாம் அல்லாஹ்வின் உதவியால்
பெற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவ்வாறான வெற்றிக்கு காரணம் அவர்
நம்பிக்கை விசுவாசியாகவும், பணிவுடனும் எந்த கர்வமும் இல்லாது அல்லாஹ்வுக்கு
அடி பணிந்து நடப்பதினாலேயே தான். நான் தான் பெரியவன் என்ற மன நிலையோ,
மற்றவர்களை ஏளனமாகப் பார்க்கும் தன்மையோ அவரிடமில்லை. எல்லோருடனும் எவ்வித
வித்தியாசங்களும் பார்க்காமல் தனது பழைய நிலைமைகளை மறக்காது, அன்பாகப்
பழகக்கூடியவராகவே இருந்தார். இவர் கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பிற்குச்
சென்று, பின்னர் தொழிலும் அங்கு அமையே, அங்கேயே திருமணமும் செய்து கொண்டார்.
அவ்வாறு அங்கு இருந்தாலும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழமையாக இருந்தது.
இவ்வாறு ஒரு ஆளுமை இருப்பது அன்று கல்குடா மக்கள் அறிந்திருக்கவில்லை. அவரும்
தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளவும் முட்படவில்லை. தன்னாலான உதவிகளை
அன்றும் சமூகத்திற்கு மறைமுகமாகச் செய்து வந்தார். இன்றும் பல உதவிகளை
மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவைகளை வெளியில் சொல்ல அவர் ஒரு போதும்
விரும்பியதும் இல்லை. அவரிடம் உதவிகள் பெறுபவர்கள் சொல்லித்தான் சிலதை நாங்கள்
அறிந்து கொண்டோம்.
*அரசியலுக்கு அவரின் வருகை:-*
றியாழ் அவர்களைப் பொறுத்தளவில் அரசியலுக்கு வந்து அதிகாரம் பெற்றுத்தான்
பட்டம், பதவி, பணம், கௌரவம் பெற வேண்டியதொரு தேவை இருக்கவில்லை. அவைகளை
அல்லாஹ் அவருக்கு முன் கூட்டியே கொடுத்து விட்டான். இவ்வாறு தன்னிறைவு பெற்று
வாழ்ந்தவர் தன்னாலான சமூகப் பணிகளையும் செய்து வந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில் முக்கியமான நிகழ்வொன்றில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் அவர்கள் சந்திக்கிறார்கள். இவரின் பணிவைக் கண்ட அவர், இவரிடம்
விசாரிக்கிறார். அப்போது இவர் கல்குடாத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதை
அறிந்து, இவரின் பண்பாட்டு ஒழுக்கங்களைப் பார்த்தவுடன் தலைவர் இவர் தொடர்பாக
தனக்கு நெருக்கமானவர்களை வைத்து, தனது விசாரணையைத் தொடர்கிறார்.
இவ்வாறான ஆளுமைகளை கட்சிக்குள் உள்வாங்கி, கட்சியை வளப்படுத்துவதிலும், சமூக
விடயங்களைக் கையாள்வதிலும் பயன்படுத்த தலைவர் முடிவு செய்திருப்பார். இருந்த
போதும், ரவூப் ஹக்கீம் தலைவரைப் பொறுத்தளவில் கல்குடாவிற்கு நல்ல
தலைமைத்துவங்களை அறிமுகம் செய்ய வேண்டுமென்பதோடு, தனக்கு நம்பிக்கை விசுவாசமான
ஒருவரைப் பெற வேண்டுமென்ற அவாவும் இருந்திருக்கும்.
தலைவர் இவரை அரசியலுக்கு வர அழைத்த போது, முதலில் அதனை மறுக்கிறார். பின்னர்
கல்குடாவில் நிலைமைகளை ஆராய்கிறார்.
கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் சரிவடைந்திருக்கிறது. அதனை நம்பி
வாக்களிக்கும் மக்களுக்கும் மாற்று அரசியல்வாதியின் நடவடிக்கையில்
அதிருப்தியுற்ற மக்களும் தங்களுக்கான தலைமை வராதா? என்று ஏங்கிக்
கொண்டிருக்கும் நிலைமையும் மாற்று அரசியல்வாதி தன்னைத் தாண்டி தலைவர்கள்
கல்குடாவில் உருவாகி விடக்கூடாது என்ற நிலையில், அவரின் அராஜக நடவடிக்கைகளை
முன்னெடுத்த வேளையில், அவருக்கு அஞ்சி பலரும் தங்களின் பதவிகளைப்
பாதுகாக்கவும் அவரின் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாக்கவும் ஒதுங்கிச்
செயற்பட்டுக் கொண்டிருப்பதையும், பாமரர் கூட அரசியல்வாதியின் அராஜகத்திற்கு
பயந்து அரசியல் பேச முடியாத ஒரு அடக்குமுறைக்குள் கல்குடா அகப்பட்டிருப்பதை
அறிந்தார்.
இறுதியில் 2015ம் ஆண்டு பொதுத்தேர்தல் நெருங்கியது. வேட்பு மனுத்தாக்கல்
ஆரம்பம் கல்குடாவிலிருக்கும் தலைமைக்கெதிராக மாற்றுத் தலைமை அவசியம்
வேண்டுமென்ற நிலைமை முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட ஆசனத்தைப் பாதுகாக்க
வேண்டுமென்ற நிலைமை அதற்கு நல்ல தகுதியான ஆளுமையை களமிறக்க வேண்டுமென்ற
நிலைப்பாடு.
இப்போது றியாழ் அவர்கள் கல்குடாவின் மாற்றுத்தலைமையைப்
பொறுப்பெடுக்காவிட்டால், கல்குடாவிலிருந்த அரசியல் சூழ்நிலைக்கு தலைமைத்துவ
வெற்றிடம் தொடரும் நிலைமை காணப்பட்டது.
எனவே தான் கல்குடா சமூகத்தில் எதிர்காலத்தில் புதிய தலைமைகளை உருவாக்கவும்
அச்சப்பட்டிருந்தவர்களுக்கு அவர்களின் அச்சத்தைப் போக்கவும், கல்குடாவின்
பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், கல்குடா சமூகத்திற்கு சிறந்த அரசியல்
காலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் றியாழ் அவர்கள் வேட்பு மனுவில்
கையெழுத்திட்டு வேட்பாளராக வந்தார்.
கல்குடாவில் கடந்த காலத்தேர்தல்கள் வன்முறைகள் நிறைந்ததாகவும், தேர்தல்
முடிந்து இன்னுமோர் தேர்தல் வந்திடும் பொலிஸ் வழக்குகள் முடியாது. அவ்வாறான
நிலைமை இவரின் தேர்தல் காலத்தில் இடம்பெற இவர் அனுமதியளிக்கவில்லை. இவரின்
நட்பண்புகளை மக்களுக்கு வெளிப்படுத்தினார். தேர்தல் காலங்களில் மேடைகளில்
பேசும் போது, தனக்கு கள்ளவோட்டுப் போட வேண்டாம் என்று வலியுறுத்தி கூறியிருந்தார்.
யார் பலயீனத்தையும் பயன்படுத்தி வாக்குக்கேட்க வேண்டாம். வெடில் வெடித்தல்,
பரீட்சை காலமாக இருந்ததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல்
ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதையும் தடுத்திருந்தார்.
இவ்வாறு நல்ல பல பண்புகளை வெளிப்படுத்தியமையினால் அராஜக அரசியல் செய்தவர்களும்
தங்களை அடக்கி சாதுவான அரசியல் செய்யும் நிலமையை ஏற்படுத்தினார். அவரின்
ஒழுக்கமான அரசியல் செயற்பாட்டால் வெற்றி பெற்று விடுவார் என்று பயந்த எதிரணி
அரசியல்வாதி, இறுதி நேரத்தில் கொலைப்பழியையும் பகிரங்கமாகச் சுமத்தினார்.
அப்போதும் சிறு புன்னகைபூத்தவராக அவர் அப்படிச் சொல்லி இருக்கமாட்டார். யாரோ
அவரை பிழையாக வழிநடாத்தியிருப்பார்கள் என்று கூறி, ஆதரவாளர்களை
அமைதிப்படுத்தினார். சாந்தமாக தனது செயற்பாட்டிலும், தீர்மானங்களை
மேற்கொள்வதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் அவசரப்படும் ஆதரவாளர்களை தனது
கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் தனது ஆளுமையை வெளிக்காட்டினார்.
குறைந்த நாட்களில் அறிமுகமாகி, குறைந்த நாட்கள் அரசியல் செய்து, கட்சிக்கு
முன்னர் இருந்த வாக்குகளை விட வாக்குகளை அதிகரித்துக் காட்டினார்.
அதனுடாக கட்சி ஆசனமொன்றை மட்டு மாவட்டத்தில் பெற்ற போதும், இவரால் வெற்றி பெற
முடியவில்லை. இதற்குக் காரணம் இவர் புதியவராக இருந்ததாலும், இவரை நிறைய மக்கள்
அறிந்திருக்கவில்லை. எதிரணியினர் இவர் கல்குடாவைச் சேர்ந்தவரல்ல. கொழும்பைச்
சேர்ந்தவர் என்ற பிரசாரம் மற்றும் கொலைப்பழி என்பவைகளை முன்னெடுத்ததுடன்,
கடந்த கால முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்றிருந்த ஒரு
பகுதியினர் வாக்களிக்காமையினாலும், இந்த வெற்றிவாய்ப்பு கைநழுவிப் போனது.
கடந்த காலத்தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸில் தேர்தல் கேட்பவர்கள் தோல்வியைத்
தழுவினால் கட்சிச் செயற்பாடுகளிலும் சமூகப் பணிகளிலும் இருந்து ஒதுங்கி விடும்
செயற்பாடே காணப்பட்டது. அது இந்த முறை மாற்றப்பட்டது. றியாழ் அவர்கள்
மாற்றிக்காட்டினார்.
தர்தலில் தோற்றாலும் கட்சியையோ சமூகத்தையோ விட்டு தூரமாகவில்லை. அவர் தனது
பணிகளை இன்று வரை பல சிரமங்களுக்கு மத்தியில் மெற்கொண்டு வருகிறார். அவர்
கல்குடா மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அடையாளங்கண்டு அதற்குறிய தீர்வுகளைப்
பெறவும், அபிவிருத்தியில் பின்தங்கிக் காணப்படும் பிரதேசங்களை அபிவிருத்தி
செய்யவும், கல்குடா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுத்தமான குடிநீரை
கல்குடா பூராகவும் பெற்றுக் கொடுக்கவும் தலைவருடன் சேர்ந்து முயற்சிக்கிறார்.
அதுமாத்திரமின்றி, இளைஞசர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்கவும் இளம்
தலைமைத்துவங்களை உருவாக்கவும், அவர்களை சமூக நலன்களுக்குப் பயன்படுத்தவும்
அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கிறார். தற்போது சிலர் இவரை விமர்சித்தாலும்
அதிகாரமுள்ளவர்கள் அபிவிருத்திகள் செய்கிறார்கள். நீங்கள் எதுவும்
செய்யவில்லையே என்று கூறுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
றியாழ் அவர்களுக்கு அதிகாரமில்லை. அவரால் அவர்கள் போல் செயற்பட முடியாது.
ஆனால் அதிகாரமுள்ளவர்களைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளைச் செய்ய
முற்படுகிறார். அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தி,
அதற்குரிய ஆவணங்களைத் தயாரித்து உரியவர்களின் மேசைக்கும் சில ஆவணங்கள் போய்
விட்டது.
அது தொடர்பாக அடிக்கடி பேசிக்கொண்டு தான் இருக்கிறார். அவர்கள் அதனை ஒதுக்கிக்
கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மிக விரைவில் அபிவிருத்திகள்
ஆரம்பிக்கப்படும். மற்றவர்களைப் போல் றியாழ் அவர்கள் படம் காட்டுவதை
விரும்பாதவர். அல்லாஹ் தனக்கு பல நிஹ்மத்துக்களை தந்திருக்கிறான். இதனைக்
கொண்டு சமூகத்திற்கு என்ன செய்தாய் என்று மறுமையில் கேட்டால், அதற்கு
பதிலாளிக்கவே இந்த பணியைத் தொடர்கிறார்.
வல்ல இறைவன் அவருக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கி, அவரின்
முயற்சிகளுக்கு உதவி செய்வானாக! அவரை நேரான வழியில் நடத்துவானாக! நல்லவர்களை
அவருக்கு நெருக்கமானவராகவும் தீயவர்களின் தீங்கிலிருந்தும் பாதுகாத்து அருள்
புரிவானாக எனப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
0 comments: