Monday, December 19, 2016

செயலாளர் விவகாரமும் ஏமாற்றப்படும் கல்குடாவும்

will-slmc-secretary-problem-clash-with-national-list-of-kalkudah ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் தொடர்பாக சில நாட்களாக கட்சிக்குள் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் அறிந்ததே.



அதாவது கடந்த பேராளர் மாநாட்டில் செயலாளராக இருந்த ஹஸன் அலி அவர்களின் வேலைப் பழுவை குறைக்கும் நோக்கில் அன்று உச்ச பீட செயலாளராக மன்சூர் ஏ காதர் அவர்கள் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற விவகாரம் மற்றும் உச்சபீட கூட்டம் தொடர்பான மற்றும் தேர்தல் செயலகம் தொடர்பான கட்சி தொடர்பில் செயற்படுவதற்கான  அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. 



அன்றைய பேராளர் மாநாட்டிலயே இந்த தீர்மானம்  அறிவிக்கப்பட்டு கட்சியின் உயர் பீட உறுப்பினர்களினால்  ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றும் போது அங்கு  ஹஸன் அலியும் உடன் இருந்தார். ஆனால் அங்கு ஹசன் அலி தனக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலோ அவர் அங்கு இது  தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லை.

இது ஒரு புறம் இருக்க கடந்த நாடாளு மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம்  முஸ்லிம் காங்கிரஸுக்கு  இரண்டு தேசிய பட்டியல் கிடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு தற்காலிகமாக இருவர் நியமிக்கப்பட்டும் இருந்தார்கள்.


இவ்வாறான ஒரு சூழ் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தேசியபட்டியல் தொடர்பாக அட்டாளைச் சேனை, திருகோணமலை,கல்குடா,வன்னி போன்ற பிரதேசங்களே அதனை அதிகமாக  எதிர்பார்த்தும் இருந்தன அது மட்டுமன்றி கட்சியின்  தலைவராலும் இதனை சுழட்சி முறையில் வழங்குவதாக   இதில் சில பிரதேசங்களுக்கு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

அந்த வகையில் பேராளர் மாநாட்டின் பிற்பாடு திருகோணமலைக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்த  வேளையில் அத் தேசிய பட்டியல்  தனக்கு  கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்த ஹஸன் அலி தான் தலைமையால் ஏமாற்றப்பட்டதாக கருதி நேரடியாக தேசிய பட்டியலை கோராது செயலாளருக்கான அதிகாரங்களை திரும்ப தருமாறு கோரி  மறைமுகமாக பல அழுத்தங்களை   தலைமைக்கு  வழங்கிய வண்ணம் இருந்தார்.




இறுதியில் செயலாளர் தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக் குழுவிற்கு சென்றடைந்த நிலையில் அதன் பிற்பாடு தேர்தல் ஆணைக்குழு கட்சி தலைமைக்கு கட்சி செயலாளர் தொடர்பாக இறுதி முடிவை கடந்த பதினைந்தாம் திகதிக்கு முன்னர் அறிவிக்கும் படி ஆணையிட்டது.


இந்த பிரச்சினையில் இருந்து விடுபடவும்,  தலைமையை இதிலிருந்து பாதுகாக்கவும் தேர்தல் ஆணையாளருக்கு கட்சியின்  செயளாலர் நாயகத்தை உறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணத்தினாலும்  மீண்டும் ஹஸன் அலிக்கு தேசிய பட்டியல் தருவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்காக சல்மான் விரைவில் தனது பாராளுமன்ற உறுப்பினரையும் இராஜினாமா செய்ய உள்ளதாக கட்சியின் தற்கால நிகழ்வுகள் மூலம் எமக்கு அறியக் கிடைக்கின்றது.


 ஹஸன் அலி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக   நியமிக்கப்படுாராக இருந்தால்  அத்தோடு  அவர் செயலாளருக்கான முழுமையான  அதிகாரம் கேட்டு தொடர்ந்த  போராட்டமும்  முற்றுப் பெற்று விடும். ஆனால் அதன் பிற்பாடு    தேசிய பட்டியலை எதிர்பார்த பிரதேசங்களும்  மற்றும் தலைவரால் வாக்குறுதி வழங்கிய பிரதேசங்களினதும் நிலை என்ன......? 


 கடந்த 2010 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் கல்குடாவுக்கு தேசிய பட்டியல் எம்.பி தருவதாக வாக்களிக்கப்பட்டு அது ஏமாற்ற பட்டதுடன்  ஆதலால் அதன் பிற்பாடு நடந்ந தேர்தல்களில் கட்சி பல  ஆயிரக்கணக்கான வாக்குகளையும் இழந்தது. 



2015ல் நடந்த பொதுத் தேர்தலிலும் புது முக வேற்பாளர் றியாழ் களமிறக்கப்பட்டாலும் அவரின் சாதுர்யத்தாலும்,அவரின் நன்னடத்தைகளினாலும் கவரப்பட்ட மக்கள் பலர் கட்சிக்காக வாக்குகளை வாரி வழங்கினர். இருந்தும் எமது வாக்குகள் போதாமின்மையால் அயலூருக்கே அன்றும் பாராளு மன்ற  பிரதிநிதித்துவம் போகும் நிர்ப்பந்த சூழ் நிலை வந்தது.


எவ்வாறாயினும் இம் முறையும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தேர்தலுக்கு பிற்பாடு கட்சியின்  கல்குடா பிரமுகர்களையும்,மூத்த போரிகளையும் சந்தித்து கல்குடாவுக்கு இம்முறை எவ்வாறாயினும் தேசியப் பட்டியல் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அவ்வாக்குறுதி இம்முறையும் மீறப்படுமாக இருந்தால் நிச்சயம் கல்குடா மக்கள் குட்ட குட்ட குனிபவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு பாடமாக அமையும் என்பதில் எவ்வீத மாற்றுக் கருத்துமில்லை.



யூ.எல்.றிபாஸ்
பிறைந்துறைச்சேனை

SHARE THIS

0 comments: