Showing posts with label riyal. Show all posts
Showing posts with label riyal. Show all posts

Sunday, September 30, 2018

கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் CEO வாக பதவி உயர்வு!

கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் CEO வாக பதவி உயர்வு!


​கல்குடாத் தொகுதியில் மீராவோடை மண்ணில் பிறந்த கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் அவர்கள் தான் கற்ற கல்வியினாலும்,தன்னிடமுள்ள நேர்மையினாலும் முன்னெறிவருபவர் ஒருவர் என்பதை நாம் அறிந்ததே.
இலங்கையில் பல கோடி முதலீடு செய்துள்ள சர்வதேச வர்த்தக நிறுவனம் (Serendib Flour Mills(Pvt)Ltd.) நமது நாட்டில் அந் நிறுவனம் நஷ்ட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனை பொருப் பெடுத்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக றியாழ் அவர்கள் தனது திறமையாலும்,நேர்மையாலும் மாற்றிக் காட்டினார்.அப்போது அந்த நிறுவனத்தின் பிரதம நிதியியல் அதிகாரியாகவே (CFO)எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் கடமை புரிந்து கொண்டிருந்தார்.
இவ்வாறான காலப் பகுதியில் கல்குடா முஸ்லிம் பிரதேசம் ஆளுமை மிக்க,நேர்மையான தலைமைத்துவத்தை எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தில்தான் இவ்வாறான நல்ல திறமையான தன்னோடு இணைந்து சமூக பணி செய்யக்கூடிய நபராக றியாழ் அவர்களை அடையாளம் கண்ட கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரசியலுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆரம்பத்தில் அதை மறுத்த றியாழ் அவர்கள் பின்னர் கல்குடா சமூகத்திற்கு தலைமை தாங்கவேண்டியதன் அவசியத்தை பிரதேச முக்கியஸ்தர்கள் அவருக்கு உணர்த்தியபோது அதனை ஏற்றுத்தான் கடந்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு இருந்தார்.
இதன் பின்னர் தனது நிறுவனத்தில் இயக்குனராக பதவி பெற்று தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தார்.
தற்போது அவரின் தீவிர செயற்பாடுகள் காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருக்கும் பணிப்பாளர் சபையினால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக(CEO) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் பிறந்த கல்குடா மண்ணுக்கும் பிரதேசத்திற்கும் பெறுமை சேர்த்து தந்திருக்கிறார்.
குறுகிய காலத்திற்குள் அந் நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்ற இளம் நபராக எச்.எம்.எம்.றியாழ் தென்படுவதோடு அரசியலிலும் அவர் பிரவேசித்து கல்குடா மக்களின் நீண்ட கால தேவையாக இருத்த பல்வேறு விடயங்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்கும் நோக்கில் அபிவிருத்தி திட்டங்களை எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவராவார்.
இவ்வாறானவர்கள்தான் நம் சமூகத்திற்கு தேவையானவர்கள் இவர்களின் ஆளுமைகளை நாம் சரியாக பயன் படுத்தி எமது சமூக முன்னேற்றத்திற்காக இவருடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
   ஓட்டமாவடி.

Wednesday, May 17, 2017

கல்குடாவின் சுத்தமான குடிநீர் கனவை நனவாக்க றியாழ் முயற்சி: தலைவர் சீனா பயணம்

கல்குடாவின் சுத்தமான குடிநீர் கனவை நனவாக்க றியாழ் முயற்சி: தலைவர் சீனா பயணம்

வை.எம்.பைறூஸ்
hmm-riyal-goes-to-china-to-implement-water-project-in-kalkudah




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் பிரேரணையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கிமின் அமைச்சினூடாகவும் ஏனைய பல நிறுவனங்களின் ஒத்துழைப்பினாலும் கல்குடாத்தொகுதிக்கான சுத்தமான குடிநீர்த் திட்டமானது சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு, கல்குடாப் பிரதேசத்தில் ஒரு சில முக்கிய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கல்குடாத்தொகுதி முழுவதுமாக சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான நிதியானது மிகப்பெரும் தொகையாகும். ஏறத்தாழ இருபதினாயிரம் பில்லியன் ரூபாவாகும் ஒட்டு மொத்த தொகை நிதியையும் நீர் வழங்கல் அமைச்சினூடாகவோ, எமது நாட்டின் அரசாங்கத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்வதென்பது சாத்தியமில்லாதவொன்றாகும்.
மாறாக, அந்நிதியை அந்திய நாட்டு உதவியுடன் மூலமே பெற வேண்டிய நிலையேற்பட்டது. அதனை கருத்திற்கொண்ட கணக்கறிஞர் றியாழ் அவர்கள் வெவ்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, எவ்வாறாயினும் கல்குடா மக்களின் நீண்ட நாள் கனவும் தனதூர் மக்களின் அத்தியாவசிய தேவையுமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.
அதனடிப்படையில், இக்குடிநீர்த் திட்டத்தினை முதல் முதலாக ஆரம்பித்து வைத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும்  நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களிடத்தில் பல முறை வேண்டிக் கொண்டதற்கமையவும் எவ்வாறாயினும், கல்குடாத்தொகுதி பூராகவும் சுத்தமான குடிநீர்த் திட்டத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று தலைவரை வேண்டிக் கொண்டார். அதற்கமைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் அந்நிதியைப் பெற்றுத்தருவதாக கணக்கறிஞர் றியாழுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.
அந்த வகையில், கடந்த 13-05-17ம் திகதி எமது நாட்டின் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏனைய  அமைச்சர் குழுக்களுடன் சீனாவில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டுப்பாதை தொடர்பிலான மாநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குடிநீர்த் திட்டத்துக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார் என தலைவரின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
உண்மையில் ஒட்டு மொத்த கல்குடாவுக்குமான சுத்தமான குடிநீர்த் திட்டத்தை ஆரம்பிக்கும் போது, ரவூப் ஹக்கீமினால் கல்குடாவுக்கு போத்தலில் அடைத்த தண்ணீரைக்கூட கொண்டு வரமுடியாது எனக்கூறியவர்கள், இன்று வாயடைத்துப் போயுள்ளார்கள். அந்த வகையில் இத்திட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்து கல்குடா மஜ்லிஸ் சூரா சபை முன்னெடுத்தாலும் காலப்போக்கில் அவர்களும் சற்று பின் வாங்கிருந்தார்கள்.
ஆனால், கணக்கறிஞர் றியாழ் அவர்கள் இத்திட்டத்தைக் கொண்டு வந்ததற்குப் பிற்பாடும் மாற்றுக்கட்சிக்காரர்களினால் பல விமர்சனங்களையும் பொருட்படுத்தாது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொடுத்த வாக்கின்படி செய்து தருவார் என்ற நம்பிக்கையிலிருந்தார்.
தற்போது கணக்கறிஞர் றியாழின் நம்பிக்கை நிறை வேறியுள்ளதோடு, அவரின் முயற்சிக்கான வெற்றியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது கௌரவ தலைவர் ரவூப்ஹக்கீம் அவர்களுக்கு கல்குடா சமூகம் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, கணக்கறிஞர் றியாழ் அவர்களினால் எமது சமூகம் இன்னும் அளப்பெரிய நன்மைகளைப் பெற வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

Wednesday, May 3, 2017

 கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழின் முயற்சியால் காவத்தமுனை வண்ணாங்கனியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு...!!!

கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழின் முயற்சியால் காவத்தமுனை வண்ணாங்கனியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு...!!!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், கல்குடா தொகுதி அமைப்பாளரும், கணக்கறிஞருமான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் பிரேரணையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர  திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கிமீன் அமைச்சினூடாக கல்குடா தொகுதிக்கான சுத்தமான குடி நீர் திட்டமானது முதற்கட்டமாக பூரணமடைந்த  நிலையில் இரண்டாம் கட்ட நடவடிக்கையும் துரித கதியில் நடை பெற்ற வண்ணமுள்ளது.



இது ஒரு புரமிருக்க கடந்த வருடம் கல்குடா தொகுதியின் பாடசாலை,வீதி,மைதானம்,சிறுவர் பூங்கா மற்றும் இன்னொறன்ன பொது வேலைகள் புனர் நிர்மாணம் செய்தல், மீள் அமைத்தல் போன்ற இன்னொறன்ன  அபிவிருத்தி திட்டத்துக்கென  கல்குடா தொகுதிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் 150 மில்லியன்   ஒதுக்கித் தருவதாக கூறியிருந்தார்.




ஆனால் அது கடந்த வருடம் அது கை நலுவ விடப்பட்ட நிலையில் இவ் வருடம்  குறிப்பிட்ட கல்குடா தொகுதிக்கான அபிவிருத்தியை  கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவ் வேலைத்திட்டத்துக்கான வரைபு திட்டமிடல்  கணக்கறிஞர் றியாழ் அவர்களின் மூலம் மேற் கொள்ளப்பட்டு அதற்கான நிதியாக சுமார் 76 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும்  அந்நிதியை    பெற்றுத் தருமாறும் கணக்கறிஞர் றியாழ் அவர்கள் மெம் மேலும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஊக்கப்படுத்தியதோடு அதனை ஒரு சவாலாகவும் எடுத்துக் கொண்டார்.




அதற்கமையவே 
கல்குடா பிரதேசத்தில் கோறளை பற்று மேற்கு பிரதேச சபையின் பிரிவுற்குற்பட்ட காவத்தமுனை வண்ணாங்கனி பிரதேசத்ததில் ஏற்கனவே போட்ட திட்டத்திற்கமையவும் றியாழ் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்கவும் காவத்தமுனை வண்ணாங்கனி பிரதேசத்தில் சிறுவர் பூங்க அமைப்பதற்காக வேண்டி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக  தற்போது 5,139,844 .50 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.



கோறளை பற்று மேற்கு பிரதேச சபையினூடாகவே குறித்த அபிவிருத்தி திட்டங்கள்  மேற் கொள்ளவிருப்பதோடு கணக்கறிஞர் றியாழ் அவர்களின் மேற் பார்வையின் கீழ்தான் அனைத்து வேளைத் திட்டங்களும் நடைபெறும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதோடு குறித்த  நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான அனுமதிப்பத்திரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பல சவால்களுக்கு மத்தியில் கல்குடா பிரதேசத்தின் அபிவிருத்தியில் தன்னால் முடியுமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் தனது நடவடிக்கையை மேற் கொண்டு வரும் றியாழ் அவர்களுக்கு 
சிலர் முட்டுக்கட்டாக இருந்த போதிலும் அதனையும் அவர் பொருட்படுத்தாமல் தனது பணியை மேற் கொண்டு வருகிறார்

 வை.எம்.பைரூஸ் 
  

kawathamunai-wannankerni-park-proposal-got-approved-by-hmm-riyal-slmc
kawathamunai-wannankerni-park-proposal-got-approved-by-hmm-riyal-slmc 

Saturday, April 8, 2017

ஓட்டமாவடி நௌவ்பலிடமிருந்து கணக்கறிஞர் றியாழுக்கு திறந்த மடல்.....!!!

ஓட்டமாவடி நௌவ்பலிடமிருந்து கணக்கறிஞர் றியாழுக்கு திறந்த மடல்.....!!!

a-letter-to-hmm-riyal





அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் றியாழ் அவர்களே  இன்னும் நான் உங்களை நேரடியாக சந்தித்ததுமில்லை இருந்தும்
உங்களுக்கு இப்படியொரு கடிதம் எழுத வேண்டுமென்றும் நான் நினைத்திருக்கவுமில்லை. கடந்த பொதுத் தேர்தலில் நீங்கள் வேட்பாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு துரதிர்ஷ்டவசமாக நீங்கள் தோல்வியினை சந்தித்த போதும் உங்களுக்கு தேசியப்பட்டியல் தருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வாக்குறுதியளித்த போது நான் அதனை தற்போதைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவர்கள் யுவதிகளுக்கு சுவிங்கம் கொடுத்த கதை போலாகுமென்று அப்போதே சொல்லியிருந்தேன். 



இருந்தும் உங்களைப்போன்ற ஒழுக்கமிகுந்த ,கற்றறிந்த இளைஞர் ஒருவர் இதுவரையிலும் கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக இருந்திருக்கவில்லை என்றொரு சந்தோஷமும் என்மனதில் இல்லாமலில்லை. 




இவ்வளவு காலமாக தேசியப்பட்டியல் உங்களுக்கு தருவதாக சொல்லப்பட்ட கதை பொய்யாகிப்போன ஒரு சந்தர்ப்பத்திலும்,கல்குடாத் தொகுதிக்கான குடிநீர் திட்டத்தில் நீங்கள் முழுமனதுடன் முயற்சி செய்து அதனை ஆரம்பித்து வைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிழக்கு முதலமைச்சர் அதனை தடுத்து நிறுத்தி அவருடைய அபிவிருத்தி திட்டம் போன்று அடிக்கல் நாட்டவருவதும் தென்னிந்திய சினிமாப் படங்களில் வடிவேலின் நகைச்சுவைக் காட்சிகளுக்கே சவாலாகிப் போய்விடுமோ என்ற அச்சமும் என்னிடம் இருந்து வருகின்றது. 

றியாழ், அவர்களே...!!!  நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீட உறுப்பினராக இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் அதே கட்சியின் உபதலைவர் அல்லது மாகாண முதலமைச்சர் எட்டி உதைக்கின்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் அதனை பகிரங்கமாக முறையிட்டும் அந்த தலைமையினால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் மூச்சுத்திணறினால் நீங்கள் ஏன் தொடர்ந்தும் அரசியல் அதியுயர்பீடத்தில் இருக்க வேண்டும்?

தன்னுடைய திறமையினால் நல்லதோர் தொழிலில் கொழுத்த சம்பளத்துடன் இருக்கும் நீங்கள் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கோ அல்லது உங்களுக்கோ எவ்வித  பிரயோசனமுமற்ற அதியுயர்பீடத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்? 


 பொதுத்தேர்தல் முடிந்து இவ்வளவு காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்காக தங்களை அர்ப்பணித்த ஒரு இளைஞனுக்காவது ஒரு அரசாங்க நிறுவனத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் பிஓன் தொழில்கூட வழங்கப்பட்டுள்ளதா?  



இப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கப்பட்ட  9500 வாக்குகளுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஒரு ஆசிரியரும்,அதிபருமான சகோதரர் சமீம் அவர்களை தாருஸ் ஸலாத்தில் ஒரு காரியாலய உதவியாளராக நியமித்ததுதான்  எமக்கு கிடைத்த சர்வதேச பட்டியலாகும். அதனை நாங்களும் சகோதரர் சமீம் அவர்களும் ஆசைக்காக ஆங்கிலத்தில் coordinator என்று சொல்லி வருகின்றோம்.  



கணக்கறிஞர் றியாழ் அவர்களே....!!! ஏறாவூர் பிரதேச அரசியல் வாதிகளின் காலணித்துவ ஆட்சியின் கீழ் கல்குடாப் பிரதேசம் இருக்கின்றது என்றொரு வெகுளித்தனமான கோட்பாட்டிற்கும் சிந்தனைக்கும் முடிவு கட்டவேண்டும். 


அல்லாஹ்வுக்காக நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்திலிருந்து விலகி ஒரு சாதாரண அங்கத்தவராக இருந்துவிடுங்கள். தாருஸ்ஸலாத்தில் உங்களை ஏமாற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள அறையிலிருந்து வெளியேறிவிடுங்கள் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இந்த கல்குடாத்தொகுதியின் வாக்குகளை சூரையாடி இம்மக்களுக்கே வேட்டுவைக்கும் அசிங்கத்திற்கு இறுதிவேட்டுவைக்கும் ஒரு போராளியாக நீங்கள் மாற்றம் பெறுங்கள்.


M.H.M.NAWFAL
ODDAMAVADY 

Friday, March 31, 2017

பட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை.

பட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை.

hmm-riyal-donates-on-lakh-for-meeravodai-al-hidaya-mv-prize-giving-ceremonyபட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை.
1932 இல் ஆரம்பிக்கப்பட்ட மட்/ம.ம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் 85 வருடங்களை கடந்து நிற்கும் இவ்வேளையில் பாடசாலையின் இந்த நீண்ட தூர பயணத்தின் போது பாடசாலைக்கு பெருமையினை அவ்வப்போது ஈட்டித்தந்துள்ள பல்கலைகழகம், மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவ,மாணவிகளையும் ஏனைய புறக்கீர்த்திய செயற்பாடுகளில் சாதனை படைத்துள்ள எமது பாடசாலையின் மாணவா்களையும்,பழைய மாணவா்களையும் பாடசாலையின் வளா்ச்சிக்காக நீண்ட காலம் ஆர்வத்தோடு பணியாற்றிய அதிபா்களையும்,ஆசிரியா்களையும் நலன் விரும்பிகளையும் கௌரவப்படுத்தும் ஒரு பொன்னான சந்தர்ப்பம் இந்த பரிசளிப்பு விழாவின் ஊடாக கிடைத்துள்ளது.
கடந்த 30.05.2007 ஆம் திகதி அன்று பாடசாலையில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவின் பின்னர் எந்தவொரு விழாவும் வெகுவிமர்சையாக நடை பெறவில்லை என்ற குறைபாடு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
இந்நீண்ட கால குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு
இந்த வருடம் ஏப்ரல் மாதம் பிரமாண்டமான பரிசளிப்பு விழா ஒனறினை நடாத்த பாடசாலை திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வை நடாத்துவதாயின் பாரிய அளவான நிதி தேவைப்படுகின்றது. இந்த வகையில் பாடசாலையின் பழைய மாணவரும் கல்குடாவின் முதலாவது பட்டயக் கணக்காளருமான றியாழ் அவர்களினால் ரூபா ஒரு இலட்சம் நன்கொடையாக கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் HMM.றியாழ் அவர்கள் சார்பாக வைத்திய மாணவன் ஸில்மி, பழைய மாணவர் சங்க செயலாளர் அல் அஸ்ஹர் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் அய்யூப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

hmm-riyal-donates-on-lakh-for-meeravodai-al-hidaya-mv-prize-giving-ceremony