ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ரவூப் ஹக்கிம் அவர்களை பொறுத்தளவில் அவர் மேற் கொள்ளும் சில தீர்மானங்கள் சவால்களை முறியடிக்கும் திறமை வாய்ந்தது. அதனை பார்க்கும் கட்சி போராளிகள் தலைமையை சாணக்கிய தலைமை என்றுதான் அழைப்பார்கள்.
ஆனால் அன்மைக் காலமாக தலைமை மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் தோல்வியில் முடிவடைவதை பார்க்கும் போது சாணக்கியம் சருக்கி விட்டதா என்றே கேள்வி என்னத் தோன்றுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தளவில் தலைமைதானா சாணக்கியம் என்று பார்த்தால் இல்லை இன்னும் ஒருவர் சாணக்கியராக இருந்திருக்கிறார் என்பதையே தற்போது அறியக் கிடைக்கிறது.
தலைமையின் தீர்மானத்தை தனது சாணக்கியத்தால் முறியடித்து தலைமையின் சாணக்கியத்தை தோல்வி காணச் செய்ததன் மூலம் உண்மையான சாணக்கியனாக கௌரவ முன்னால் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.டி.ஹஸன் அலி அவர்கள் தன்னை உறுதிப்படித்துக் கொண்டார்.
எவ்வாறு எனின் தலைமை அரசியல் சார்ந்த நடவடிக்கையில் சமூகத்தின் உணர்வுகளை மதிப்பதில்லை என்பதால் தலைவருக்கு அவ் அப்போது சில விடயங்களில் செயலாளர் ஒத்துளைக்காமையினாலும் செயலாளர் நாயகத்திற்கு முக்கிய அதிகாரங்கள் கட்சி யாப்பில் வழங்கப் பட்டிருப்பதாலும் செயலாளரின் நடவடிக்கையில் அதிருப்தி உற்ற தலைமை அவரின் அதிகாரங்களை குறைக்க கடந்த பேராளர் மாநாட்டில் கட்சி யாப்பில் மாற்றங்களை கொண்டுவந்து செயலாளரின் அதிகாரத்தை உச்சபீட செயலாளர் என்ற பதவியை உருவாக்கி அதற்கு மன்சூர் ஏ காதரை நியமித்து வழங்கப்பட்டது.
இவைகளின் போது செயலாளர் ஹசன் அலி அதிருப்தி தெரிவிக்காமல் இருக்க அவருக்கு தேசிய பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
செயலாளர் ஹசனலியோ பாராளுமன்றம் சென்றால் போதும் என்ற நினைப்பில் இது தொடர்பாக ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளவில்லை.
தலைமை தேசிய பட்டியலை வேறு பிரதேசத்துக்கு வழங்கவே தலைமை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை உணர்ந்தவர் நேரடியாக தேசிய பட்டியலை கோராது செயலாளர் அதிகாரத்தை கேட்டு தனது போராட்டத்தை பல்வேறு கோணத்தில் தொடர்ந்தார். இதனால் தலைமை சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
தலைமை ஹசனலியை குறைத்து மதிப்பிட்டதன் விளைவாலும். தலைவரின் வயது ஹசனலியின் அனுபவம் என்பதாலும் தலைவரால் ஹசனலியை தோற்கடிக்க முடியவில்லை என்பதும் ஹசனலி சந்தர்ப்பம் பார்த்து தனது காயை சாணக்கியமாக நகர்த்தியதால் தலைமை தனது காய் நகர்தலில் தோல்வி கண்டுள்ளது.
எனவே செயலாளர் பிரச்சனை தேர்தல் ஆணைக்குழு முன் கொண்டு செல்லப்பட்டு சாணக்கிய தலைமை செயலாளர் ஹசன் அலி அவர்களுக்கு முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியும் மற்றும் தேசிய பட்டியலும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
அத்தோடு செயலாளர்க்கு அதிகாரம் யாப்பில் பேராளர் மாநாட்டை கூட்டியே செய்யவேண்டும் என தெரிவித்ததால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. ஹசனலியை பொறுத்தளவில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதனை கடந்த அதிர்வு தொலைகாட்சி நிகழ்வில் தலைமை மறைத்து பேசினாலும் ஹசனலி விடிவெள்ளி க்கு வழங்கிய செவ்வியில் தெளிவாக சொல்லி உள்ளார்.
சாணக்கியம் ரவூப் ஹக்கீம் செயலாளர் விடயத்தில் சறுக்கி செயலாளரிடம் குட்டுவாங்கியுள்ளது. எனவே தனது தோல்வியை ஒத்துக் கொண்டு ஜனநாயக முறைப்படி தலைவர் கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி ஆளுமை உள்ள சாணக்கியத்தை தலைவரிடமே உறுதிப்படுத்திய செயலாளரை தலைவராக நியமிக்க ரவூப் ஹக்கிம் அவர்கள் முன் வரவேண்டும்.
அது மட்டு மன்றி தேசிய பட்டியல் எம் பி பதவியானது செயளாலர் நாயகம் ஹஸன் அலியை சென்றடையும் விடத்து தலைவர் ஏனைய ஊர்களுக்கு வழங்கிய தேசிய பட்டியல் வாக்குறுதி மீறப்பட்டு நாணயம் பாழாக்கப்படுகிறது.
யூ.எல்.றிபாஸ்
SHARE THIS
0 comments: