கல்குடாத் தொகுதியில் மீராவோடை மண்ணில் பிறந்த கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் அவர்கள் தான் கற்ற கல்வியினாலும்,தன்னிடமுள்ள நேர்மையினாலும் முன்னெறிவருபவர் ஒருவர் என்பதை நாம் அறிந்ததே.
இலங்கையில் பல கோடி முதலீடு செய்துள்ள சர்வதேச வர்த்தக நிறுவனம் (Serendib Flour Mills(Pvt)Ltd.) நமது நாட்டில் அந் நிறுவனம் நஷ்ட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனை பொருப் பெடுத்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக றியாழ் அவர்கள் தனது திறமையாலும்,நேர்மையாலும் மாற்றிக் காட்டினார்.அப்போது அந்த நிறுவனத்தின் பிரதம நிதியியல் அதிகாரியாகவே (CFO)எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் கடமை புரிந்து கொண்டிருந்தார்.
இவ்வாறான காலப் பகுதியில் கல்குடா முஸ்லிம் பிரதேசம் ஆளுமை மிக்க,நேர்மையான தலைமைத்துவத்தை எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தில்தான் இவ்வாறான நல்ல திறமையான தன்னோடு இணைந்து சமூக பணி செய்யக்கூடிய நபராக றியாழ் அவர்களை அடையாளம் கண்ட கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரசியலுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆரம்பத்தில் அதை மறுத்த றியாழ் அவர்கள் பின்னர் கல்குடா சமூகத்திற்கு தலைமை தாங்கவேண்டியதன் அவசியத்தை பிரதேச முக்கியஸ்தர்கள் அவருக்கு உணர்த்தியபோது அதனை ஏற்றுத்தான் கடந்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு இருந்தார்.
இதன் பின்னர் தனது நிறுவனத்தில் இயக்குனராக பதவி பெற்று தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தார்.
தற்போது அவரின் தீவிர செயற்பாடுகள் காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருக்கும் பணிப்பாளர் சபையினால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக(CEO) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் பிறந்த கல்குடா மண்ணுக்கும் பிரதேசத்திற்கும் பெறுமை சேர்த்து தந்திருக்கிறார்.
குறுகிய காலத்திற்குள் அந் நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்ற இளம் நபராக எச்.எம்.எம்.றியாழ் தென்படுவதோடு அரசியலிலும் அவர் பிரவேசித்து கல்குடா மக்களின் நீண்ட கால தேவையாக இருத்த பல்வேறு விடயங்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்கும் நோக்கில் அபிவிருத்தி திட்டங்களை எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவராவார்.
குறுகிய காலத்திற்குள் அந் நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்ற இளம் நபராக எச்.எம்.எம்.றியாழ் தென்படுவதோடு அரசியலிலும் அவர் பிரவேசித்து கல்குடா மக்களின் நீண்ட கால தேவையாக இருத்த பல்வேறு விடயங்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்கும் நோக்கில் அபிவிருத்தி திட்டங்களை எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவராவார்.
இவ்வாறானவர்கள்தான் நம் சமூகத்திற்கு தேவையானவர்கள் இவர்களின் ஆளுமைகளை நாம் சரியாக பயன் படுத்தி எமது சமூக முன்னேற்றத்திற்காக இவருடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
ஓட்டமாவடி.
0 comments: