Friday, March 31, 2017

பட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை.

hmm-riyal-donates-on-lakh-for-meeravodai-al-hidaya-mv-prize-giving-ceremonyபட்டயக்கணக்காளர் HMM.றியாழ் அவர்களினால் மீராவோடை அல்-ஹிதாயா ம.வி. ற்கு ரூபா ஒரு இலட்சம் நன்கொடை.
1932 இல் ஆரம்பிக்கப்பட்ட மட்/ம.ம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் 85 வருடங்களை கடந்து நிற்கும் இவ்வேளையில் பாடசாலையின் இந்த நீண்ட தூர பயணத்தின் போது பாடசாலைக்கு பெருமையினை அவ்வப்போது ஈட்டித்தந்துள்ள பல்கலைகழகம், மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவ,மாணவிகளையும் ஏனைய புறக்கீர்த்திய செயற்பாடுகளில் சாதனை படைத்துள்ள எமது பாடசாலையின் மாணவா்களையும்,பழைய மாணவா்களையும் பாடசாலையின் வளா்ச்சிக்காக நீண்ட காலம் ஆர்வத்தோடு பணியாற்றிய அதிபா்களையும்,ஆசிரியா்களையும் நலன் விரும்பிகளையும் கௌரவப்படுத்தும் ஒரு பொன்னான சந்தர்ப்பம் இந்த பரிசளிப்பு விழாவின் ஊடாக கிடைத்துள்ளது.
கடந்த 30.05.2007 ஆம் திகதி அன்று பாடசாலையில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவின் பின்னர் எந்தவொரு விழாவும் வெகுவிமர்சையாக நடை பெறவில்லை என்ற குறைபாடு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
இந்நீண்ட கால குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு
இந்த வருடம் ஏப்ரல் மாதம் பிரமாண்டமான பரிசளிப்பு விழா ஒனறினை நடாத்த பாடசாலை திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வை நடாத்துவதாயின் பாரிய அளவான நிதி தேவைப்படுகின்றது. இந்த வகையில் பாடசாலையின் பழைய மாணவரும் கல்குடாவின் முதலாவது பட்டயக் கணக்காளருமான றியாழ் அவர்களினால் ரூபா ஒரு இலட்சம் நன்கொடையாக கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் HMM.றியாழ் அவர்கள் சார்பாக வைத்திய மாணவன் ஸில்மி, பழைய மாணவர் சங்க செயலாளர் அல் அஸ்ஹர் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் அய்யூப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

hmm-riyal-donates-on-lakh-for-meeravodai-al-hidaya-mv-prize-giving-ceremony






SHARE THIS

0 comments: