Wednesday, May 3, 2017

கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழின் முயற்சியால் காவத்தமுனை வண்ணாங்கனியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு...!!!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், கல்குடா தொகுதி அமைப்பாளரும், கணக்கறிஞருமான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் பிரேரணையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர  திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கிமீன் அமைச்சினூடாக கல்குடா தொகுதிக்கான சுத்தமான குடி நீர் திட்டமானது முதற்கட்டமாக பூரணமடைந்த  நிலையில் இரண்டாம் கட்ட நடவடிக்கையும் துரித கதியில் நடை பெற்ற வண்ணமுள்ளது.



இது ஒரு புரமிருக்க கடந்த வருடம் கல்குடா தொகுதியின் பாடசாலை,வீதி,மைதானம்,சிறுவர் பூங்கா மற்றும் இன்னொறன்ன பொது வேலைகள் புனர் நிர்மாணம் செய்தல், மீள் அமைத்தல் போன்ற இன்னொறன்ன  அபிவிருத்தி திட்டத்துக்கென  கல்குடா தொகுதிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் 150 மில்லியன்   ஒதுக்கித் தருவதாக கூறியிருந்தார்.




ஆனால் அது கடந்த வருடம் அது கை நலுவ விடப்பட்ட நிலையில் இவ் வருடம்  குறிப்பிட்ட கல்குடா தொகுதிக்கான அபிவிருத்தியை  கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவ் வேலைத்திட்டத்துக்கான வரைபு திட்டமிடல்  கணக்கறிஞர் றியாழ் அவர்களின் மூலம் மேற் கொள்ளப்பட்டு அதற்கான நிதியாக சுமார் 76 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும்  அந்நிதியை    பெற்றுத் தருமாறும் கணக்கறிஞர் றியாழ் அவர்கள் மெம் மேலும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஊக்கப்படுத்தியதோடு அதனை ஒரு சவாலாகவும் எடுத்துக் கொண்டார்.




அதற்கமையவே 
கல்குடா பிரதேசத்தில் கோறளை பற்று மேற்கு பிரதேச சபையின் பிரிவுற்குற்பட்ட காவத்தமுனை வண்ணாங்கனி பிரதேசத்ததில் ஏற்கனவே போட்ட திட்டத்திற்கமையவும் றியாழ் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்கவும் காவத்தமுனை வண்ணாங்கனி பிரதேசத்தில் சிறுவர் பூங்க அமைப்பதற்காக வேண்டி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக  தற்போது 5,139,844 .50 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.



கோறளை பற்று மேற்கு பிரதேச சபையினூடாகவே குறித்த அபிவிருத்தி திட்டங்கள்  மேற் கொள்ளவிருப்பதோடு கணக்கறிஞர் றியாழ் அவர்களின் மேற் பார்வையின் கீழ்தான் அனைத்து வேளைத் திட்டங்களும் நடைபெறும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதோடு குறித்த  நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான அனுமதிப்பத்திரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பல சவால்களுக்கு மத்தியில் கல்குடா பிரதேசத்தின் அபிவிருத்தியில் தன்னால் முடியுமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் தனது நடவடிக்கையை மேற் கொண்டு வரும் றியாழ் அவர்களுக்கு 
சிலர் முட்டுக்கட்டாக இருந்த போதிலும் அதனையும் அவர் பொருட்படுத்தாமல் தனது பணியை மேற் கொண்டு வருகிறார்

 வை.எம்.பைரூஸ் 
  

kawathamunai-wannankerni-park-proposal-got-approved-by-hmm-riyal-slmc
kawathamunai-wannankerni-park-proposal-got-approved-by-hmm-riyal-slmc 

SHARE THIS

0 comments: