Yakoob mohamed fairoos
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 2017ம் ஆண்டிற்கான பன்முகப் படுத்தப்பட்ட நிதியில் மேற் கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று அதாவது 03-01-17 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கிம் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
இதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைம கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இக் கலந்துரையாடலில் கல்குடா தொகுதி அமைப்பாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த வருட நிதி ஒதுக்கீட்டு மூலம் கல்குடா தொகுதியில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியதோடு கல்குடா பிரதேச மக்களின் உணர்வுகளையும் காட்டமாக தலைமையிடம் அறிவுறுத்தி கூறினார்.
அதே போல் இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் கணிசமான அளவு நிதியினை கல்குடா அபிவிருத்திக்கு ஒதுக்கவேண்டும் என்ற முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இவ் வருட நிதி ஒதுக்கீட்டில் கல்குடா தொகுதியின் அபிவிருத்திக்கு அமைப்பாளர் றியாழ் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க அவர் முன் மொழிந்திருக்கும் திட்டங்களுக்கு தம் அமைச்சினூடாகவும் இவ்வருடத்தின் கட்சியி்ன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன் முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும் ஒதுக்கப் படும் என உறுதியளித்தார்.
தகவல்: எம்.எம்.எம்.சமீம்




0 comments: