Wednesday, January 4, 2017

மாதுளம்பழத்தின் பயன்கள்




மாதுளையில் இனிப்பு
புளிப்புதுவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும்மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
இதில் புரதம்கொழுப்புமாவுதாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.
மாதுளம்பழத்தின் பயன்கள்..
1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி:
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும்அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும்சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும்மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர்டியோடினல் அல்சர்கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால்அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்துநாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குஇந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது.
2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்:
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால்ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போதுஇரத்த வாந்திஇரத்த மூலம் வயிற்றுக் கடுப்புஉடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும்இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால்இருமல் நிற்கும்.
3. ஆண்மை பெருக:
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள்இதய பலகீனம்நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.
சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்உடல் எடை கூடும். தொண்டைமார்பகங்கள் நுரையீரல்,குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
4. கடுமையான இதய வலி நிற்க:
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
5. வயிற்றுப் புண்கள் குணமாக:
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதைகாலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல்,சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக:
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலைமாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால்தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை,வேர்ப்பட்டைமரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டுவேளைக்கு 5கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க:
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல்மிளகுசீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டுவேளைக்கு 30மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால்இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.
8.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.

09.வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்னை போன்றவற்றிற்கு சிறந்தது. பிளட் சர்குலேசனுக்கு ஏற்றது மாதுளை. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் தினமும் சாப்பிடுவோம்.

தொகுப்பு
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் 
வாழைச்சேனை 
9-healthy-Benefits-of-adding-pomegranate-to-your-daily-fruit

SHARE THIS

0 comments: