Monday, January 2, 2017

ECCH யின் புனர் நிர்மானத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து வரும் கத்தார் வாழ் சகோதரர்கள்....!!!

qatar-brothres-contribute-to-ecch
முழு கிழக்கு மாகாணத்துக்குமான புற்றுநோய் பராமரிப்பு இல்லம் அமைப்பதற்கான நிதி சேகரிப்புத் திட்டத்தில்   
எமது கத்தார் வாழ்  சகோதரர்கள்  இரவு பகல் பாரமால் அயராது செய்து வரும் சேவை நல்ல படியாக  நடைபெற்று முடிய வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு நலிவடைந்து போயுள்ள உறவுகளை அன்பாக ஆதரிக்கும் இல்லமே இதுவாகும் ஆனால்
இது ஒரு தனி ஊருக்கான ஒன்று அல்ல மாறாக ஒட்டு மொத்த கிழக்கு மக்களுக்குமே சொந்தமானது...!!!


இதன்  நிர்மாணம் மக்களால் இடம்பெறவிருப்பது ஏனைய பிரதேசங்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
இதற்கான நிதிகளை வழங்க வேண்டிய தேவைப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது...!!!


இ்வ் நிதிகளை திரட்டுவதற்காக கத்தாரில் உள்ள நமக்காக நாம்  மற்றும் Eravur Association of qater ஆகிய அமைப்புகள் ஒன்றினைந்து பாரிய நிதிசேகரிப்பு ஒன்றில் ஈடுபட்டு வருகின்றது.


இது வரையில் இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் சகோதரர்கள்  ஆகியோரின் உதவியும் மிருதுவாக கிடைக்கப்பெற்று வருகின்றது.


 
மேலும் இவ் அமைப்பு உறுப்பினர்கள் தங்களது நேர காலங்களை மற்றும் கத்தாரின் சட்டதிட்டங்களை மதித்து களப்பணியில் இஹ்லாஸனா முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இறைவன் இவர்களுடைய பணியை ஏற்றுக்கொள்ள தொழுகையில் பிராத்தனைகளை மேற்கொள்ளோம. 

மேலும் இவ்வமைப்பின் வசூலிப்பில் முதற்கட்டமாக கத்தாரில் வாழும் சகோதரர்களின் வீடுகளுக்கு சென்று இரவு பகல் பனி மழை என்று பாராது தர்மப் பணி  செய்து கொண்டு இருக்கிறார்கள். கத்தார் நாட்டில் உங்களை தேடி வரும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று  உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை வழியனுப்புங்கள்.

அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான்.
அதில் ஒரு பகுதியினர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தருமம் செய்பவர் ஆவார்.

(நபி மொழி)

ஆதமின் மகனே மற்றவர்களுக்காக செலவிடு உனக்கு நான் செலவிடுவேன்.என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்...!!

சராசரியாக நீங்கள் வழங்கும் ஒவ்வொரு தொகையிலும் ஆண்டாண்டு கால மனித நேயப்பணி இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்...!!!

மரணம் தாண்டி பயனளிக்கும் நிலையான தருமத்தின் பங்காளியாகுவோம்...!!!

நமக்காக நம் உறவுகளுக்காக கைகோர்ப்போம்...!!!

தகவல் =ஏரூர் இஹ்கான்

SHARE THIS

0 comments: