இன்று வாழைச்சேனை அல்-அக்ஸா வி.க நிருவாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் வாழைச்சேனை அந்-நூர் தே.பா கேட்போர் கூடத்தில் 23.12.2016 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தலைவர் MIM.இம்தியாஸ் தலைமையில் கிராஅத்துடன் ஆரம்பமானது.இந்நிகழ்வில் கழக ஆரம்ப மூத்த உறுப்பினர்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
பொருளாளர் அவர்களினால் கடந்த கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு சபையோரல் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இக்நிகழ்வில் கலந்து கொண்ட ஆரம்ப கால வீரர் அமீர் அலி(S.I)சேர் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். எமது இளைஞர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அத்தோடு முன்னால் தலைவர் ALM.லியாப்தீன்(JP)உரையாற்றினா ர். அதன் பிற்பாடு நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. செயலாளர் ஆக AM.வபாஸ் சபையோரால் ஏதமனதாக தெரிவானார். அதன் பிற்பாடு தலைவராக முன்னால் தலைவர் MIM.இம்தியாஸ் சயையோரால் ஏகமனதாக தெரிவானார். கடந்த காலங்களிலும் சிறப்பாக விளையாட்டு கழகத்தை தலைவர் இம்தியாஸ் வழி நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
உப செயலாளர் அக்ரம்,உப தலைவர் சலீம் நானா,SM.பைரூஸ்,உதைப்பந்தாட்ட தலைவர் இர்பான்,கிரிக்கட் தலைவர் பஸ்மி,கரப்பாந்தாட்ட தலைவராக தஸ்லீம்,எல்லை தலைவராக பஸ்லுன்,மெய்வல்லுனர் தலைவராக சப்ரீன் ஆசிரியர், உறுப்பினர்களாக அமீர் அலி சேர்,லியாப்தீன் JP,யாக்கத் அலி,இர்பான் நானா,அஸ்லிம்,அஸ்மான்,நாசர்,ரஸீ ட்,ஜமால்தீன்,ஜலீல்,இஸ்ஸத்தீன், அமீன்,பஸீர் ஆகியோர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அதன் பிற்பாடு புதிய நிருவாகத்தினர் நிருவாக கூட்டமும் இடம் பெற்றது. இனிதே!! அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை
0 comments: