Wednesday, December 21, 2016

சிரியா யுத்தத்தின் பின்னனியும் மௌனம் காக்கும் அரபுலகமும்...!!!

சிரியா யுத்தத்தின் பின்னனியும் மௌனம் காக்கும் அரபுலகமும்...!!!


கடந்த ஜந்து வருடங்களுக்கு  சிரியாவில் மிகப் பெரும் உள் நாட்டு போர் நடந்தேறிய வண்ணமுள்ளது. இப் போரின் மூல காரணி பசருல் அசாத் என்ற கொடுங் கோல் மன்னனின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டாம் நடத்த ஆரம்பித்ததே.


அரபுலக வசந்தம் என்ற பேரில் ஆரம்பித்த இந்த மக்கள் கிளர்ச்சியானது 2010 இல் ஆரம்பித்த தூனிசியா புரட்சி போன்று பொது மக்களுக்கு சாதகமாக அமைந்து சிரியா தேசத்திலும்  ஐக்கியம்,சுபீட்சம்,சமாதானம் என ஒரு நல்லாட்சி ஏற்படும்  என எதிர்பார்த்தது  சிரியாவில் முற்று முழுதாக அது தலை கீழாக மாறி ஜனநாயக புரட்சியாக மாறிய இப் புரட்சியானது தற்காலத்தில் கொள்கை ரீதியான அடக்கு முறையாக மாறியுள்ளது.


 பஷாரின்  53 வருட குடும்ப ஆட்சியின்  கொடுமைகளையும்  ஊழல்களையும்  சகிக்க முடியாத சிரியா மக்களே 2011இல் பஷாரின் ஊழல் நிறைந்த  குடும்ப ஆட்சிக்கு எதிராக    கொந்தழிக்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 53 வருடங்கள் சிறுபான்மையான ஷீஆக்கள் பெரும் பான்மை முஸ்லிம்களை அடக்கி ஆழ்ந்து வருகிறார்கள்.



சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு  முதல் நடைபெற்றும் வரும்  இவ் உள் நாட்டு போரில் பல இலட்ச்சத்திற்கும் அதிகமானோர்   உயிரிழந்துள்ளதுடன் பல இலட்சக் கணக்கானோர் இன்று வரைக்கும் அகதிகளாக நாட்டைவிட்டு அயல் நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்த வண்ணம் உள்ளனர்.


இது ஒரு புரம் இருக்க  நான்கு வருடங்களாக சிரியா போராளிகள் வசம் இருந்த சிரியாவின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றான அலெப்பா நகரம் ஒரு சில மாதங்களாக இராணுவத்தினால் முற்றுகையிடப்பட்டு கடந்த 13ம் திகதி முதல் அலெப்பா நகரம் மீது அத்து மீறலான வான் வலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலை உடன் நிறுத்தி அங்கிருக்கும் மக்களை பாது காப்பான இடத்துக்கு அனுப்பக் கோரி துருக்கி அரசாங்கம் ரஷ்யவுடன் நடத்திய பேச்சு வார்த்தையினால் ஒரு நாள் யுத்த நிருத்தம் கை சாத்திடப்பட்டது.ஆனால் மீண்டும் 15ம் திகதி முதல் பசாருல் அசாத்தின் ராணுவமும், ஈரானின் ராணுவமும் கைகோர்த்து அலெப்பா மீது தாந் தோண்டித்தனமான,மனிதநேயமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது.





இத் தாக்குதலை கண்டித்து இன,மத,மொழிக்கு அப்பால் மனித நேயமுள்ள அனைத்துலக  மக்களும் தங்களது எதிர்ப்புக்களை பசருல் அசாத்துக்கெதிராகவும்,ரஷ்யா அதிபர் புட்டினுக்கு எதிராகவும் வெளிக் காட்டிக் கொண்டுள்ளனர்.இன்னும் பல அரபுலக நாடுகள் தங்களது  பொருளாதார உதவிகளை சிரியா  மக்களுக்கு அனுப்பிக் கொண்டுள்ளனர்.


இருந்தும் கூட ஐக்கிய நாடுகள் சபை உற்பட அரபுலக நாடுகள் சிரியாவின் முஸ்லிம்களை  பசருல் அசாத்தின் கொடுமைகளிலிருந்து எவ்வாறன கையாள்தல்களின் மூலம் கட்டுப்படுத்த முடியுமோ அதனை செய்யாமல் வெறுமனே மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எங்கிடத்தில் எழும்பாமல் இல்லை....!


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் மிகப் பெரும் சாம்ராஜ்யமான சவூதி அரேபியா போன்ற பொருளாதார,ஆயுத பலமிக்க நாடுகள் உலகின் இராணுவ பலமிக்க நாடுகளில் ஒன்றான துருக்கி போன்ற நாடுகளும் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற் கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதென்பது கவலைக்குறிய விடயமாகும்.





எவ்வாறாயினும் பசருல்  அசாத்தின் இவ் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி   மாலிக்கியின்  அரசாங்கம்,லெபனானிலுள்ள ஷீஆக்களின்  ஹிஸ்புல்லாஹ் என்ற அமைப்பும  தீவிரமாக ஆதரவளித்து வருகின்றதோடு ரஷ்யாவின் அதிபர் புட்டினும் ஈரானும் அவ்விராணுவத்திற்கு ஆயுத உதவிகளை மெம் மேலும் செய்து வருகின்றது.


 அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற  மேற்குலக நாடுகளும் சவூதி அரேபியா,  கத்தார் போன்ற அரபுலக நாடுகளும் கடந்த காலங்களில் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதாரவளித்து வந்ததுடன்  ஆயுத உதவிகளும்  செய்து வந்துள்ளனர்.ஆனால்  தற்போதய சூழ் நிலையில் அனைத்துமே மதி மயங்கிய நிலையில் தான் தென்படுகின்றது.எவ்வாறாயினும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இது சாதுவாகவே அமையும்.

இவை அனைத்திற்கும் முக்கிய சூழ்ச்சி தாரி தான் ஈரான்ஆனால் அது தனது செயற்பாட்டை அநேகமாக மறைமுகமாகவே சிரியா இராணுவத்திற்கு செய்து வருகின்றது.முஸ்லிம் நாடு என்ற போர்வையில் ஈரானை ஆதரிக்கும் உலக முஸ்லிம்கள் இனியாவது ஈரானின் இரட்டை முகத்தை தெறிந்து கொள்ள வேண்டும்.


இனி வரும் காலங்களிலாவது அரபுலக நாடுகள்  அமெரிக்காவின் கை பொம்மைகளாக இருப்பதை விட்டு  சிரியா வாழ்  முஸ்லிம்களின் உரிமைக்காக தனது இராணுவ பலத்தை வெளிக் கொண்டு வர வேண்டும். என்பதே அநேகரின்  எதிர்பார்ப்பாகவுள்ளது.



வைeஎம்.பைரூஸ்











SHARE THIS

Author:

0 comments: