Tuesday, November 1, 2016

(Poem) விரைவாய் புறப்படு தம்பி!

poem-on-riyal-slmc-kalkudah
தம்பி
உன் வரவு
சமூகத்தின் விடிவு
படம் காட்டும்
அரசியலுக்கு முடிவு.
சமூகத்தின்
கண்ணீரை
உன்னால்
துடைக்க முடியும்
விரைவாய் புறப்படு தம்பி.
ஏமாற்றி
காலம் தள்ளும்
போலிகளுக்கு
சாவுமணி
நேரிய பாதையில்
கூரிய முள்ளில்
காலடி பதிக்கிறாய்
கவனமாய்
எட்டுக்களை எடுத்துவை
எனை போன்ற
தொண்டர்கள்
உன்னோடு பயணிக்க
என்றும் தயார்
வரலாறு
உன் பெயரை எழுதும்
ஊழலற்ற
உன் பாதையில்-தடுக்கி
தடுமாறி
விழுகிறார்கள்
இங்கே சில பேர்
ஒரு வகையில்
இது போராட்டம்
இருமுனைத் தாக்குதலில்
எதிர் கொண்டு
தடம் பதிக்கிறாய்
செயல் வீரன்
உனை கண்டு
வியப்பில்
மூழ்கி கிடக்கிறோம்
தொடரட்டும்
உன் சேவை
ஆடிய ஆட்டமெலாம்
அடங்கி விட்டது
நல்லாட்சி வந்து
ஆப்படித்ததால்
ஆடத் தெரியாமல்
ஆடினார்கள்
இப்போ
மேடை கோணலென்று
முகங் சுழிக்கிறார்கள்
  -மீராவோடை சுபைர்-

SHARE THIS

Author:

0 comments: