Thursday, October 27, 2016

ஆளுமையுள்ள தலைவர்களின் தர வரிசையில் ரவூப் ஹக்கீமுக்கு தனி இடமுண்டு....! #slmc

இன்றைய அரசியல் வாதிகள்  ஒரு செயலை செய்துவிட்டால் ஊருக்கே தம்பாட்டம் அடித்து
புகழைத் தேடிக் கொள்ளும் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அரசியல் என்றாலே
இப்படிதான் என்று சர்வசாதாரணமாக அனைவரின் மனதிலும் தற்போது தோன்றக் கூடியதாகி விட்டது.

இவ்வாரான அரசியல் வாதிகளிலும் சிலர் விதி விளக்காகவே இருக்கின்றார்கள். அவ்வாறு
விதிவிளக்காக இருப்பவர்களுள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்
ஹக்கிமும் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

கடந்த கால முஸ்லிம் அரசியல் தலைவர்களை எடுத்துக் கொண்டால்
அவர்களில் அநேகர் பெரும்பான்மை கட்சிகளில் செல்வாக்கான பதவிகளில் இருந்ததையும்
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுகளை பெற்றிருந்ததையும் நாம் அறியாமல் ஒன்றுமில்லை.

இவ்வாறான தங்களின் அரசியல் அதிகாரங்களை வைத்துக் கொண்டு அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக
பயன்படுத்தினார்கள். அன்று அவர்கள் பல செயற்பாடுகளை சமூக நோக்கமாகவே
முன்னெடுத்தார்களே தவிர அவர்களிடம் எந்தவீத அரசியல் இலாபங்களும்
இருக்கவில்லை.

அவர்களின் அன்றைய செயற்பாடுகளை எமது சமூகம் உடனடியாக விளங்கிக் கொள்வது மிகக்
கடினமாகவே இருந்தது. இதனால் அவர்கள் அன்று மக்களால் தூற்றப்பட்டார்கள். இருந்தும்
அவர்களின் மரணத்துக்கு பிற்பட்ட காலத்தில்தான் அவர்களின் அன்றையே முன்னெடுப்புகளை இன்று வரை எமது சமூகம் உணர்ந்து
பேசிக் கொண்டிருக்கின்றது.

யார்  சமூகத்தின்  உரிமைகளையும்,தேவைகளயும் நோக்கமாக கொண்டு அரசியல் செய்து தனது சுய லாபத்துக்காக சமூகத்தை இக்கட்டில் மாட்டிவிடாது தங்களது பணிகளை
முன்னெடுக்கின்றார்களோ அவர்களை சமூகம் விளங்கிக்கொள்வதற்கு நீண்ட காலம்
எடுக்கும் என்பதற்கு எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களே  ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்றைய அரசியல் சூழ் நிலையை பார்க்கும் போது  பலர் சமூக நோக்கமின்றி தங்களின் பதவிகளை தக்கவைத்துக்
கொள்வதற்காகவும், தங்களை மக்களின் தலைவராக காட்டிக் கொள்வதற்காகவும்,
தங்களின் அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் சமூகத்தை இக்கட்டில்
மாட்டிவிடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

அவர்கள் சமூகத்தின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காய
முற்படுகிறார்கள். இதனை பலர் விளங்கிக் கொள்ளாது தங்களுக்கு குரல் கொடுக்கும் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.சிலர் இவர்களின் உண்மை முகத்தை அறிந்து கை சேதப்பட்டும் உள்ளார்கள்.

இப்படியானவர்களால் தான் எம் முஸ்லிம் சமூகம் இக்கட்டான சூழ் நிலையில் மாட்டிக் கொண்டு
தங்களுக்கான நியாயமான உரிமைகளை பெறுவதிலும் சிக்கலுக்குள் மாட்டிக்
கொள்கிறது.

பல்லின சமூகம் வாழும் எம் நாட்டில் நடுநிலையானவர்களாகவும் மற்றைய
சமூகங்களுடன் நல் உறவைப் பேணியும் நாம் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.

எமது உரிமைகளைப் பெறுவது என்றால் அதனை பெரும்பான்மை சமூகங்களை பகைத்துக்
கொள்ளாமல் அவர்களின் புரிந்துணர்வுடனே நாம் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இதனை சிலர் புரிந்து கொள்ளாது தங்களின் அரசியல் இருப்பை
பலப்படுத்துவதற்காய் சமூகத்தின் உணர்வுககளோடு வீர வசனங்களை
பேசி சமூகத்திற்கு மத்தியில் உங்களுக்காக நான் எப்படியேல்லாம் பேசுகிறேன்
என்று காட்டிக் கொள்ளவே முற்படுகிறார்கள் என்பதை நடு நிலையாக சிந்திப்பவர்கள் யாரும் அறியாமலில்லை.

இவர்களால் சமூகம் எப் பயனையும்
அடைந்ததும் இல்லை இனியும் அடையப் போவதும் இல்லை. ஏனெனில் இவர்களின்
நோக்கம் உரிமைகளை வென்று கொடுப்பது அன்றி மாறாக மக்களை தங்களது  வீராப்பு
வசனங்களால் திருப்தி படுத்துவதே ஆகும்.

இத்தகையோரின் செயற்பாடுகளால்தான் எம் சமூகம் தங்களின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கும் தடையாக
இருக்கின்றது.

இவ்வாரானவர்களுக்கு மத்தியில் சமூகத்தின் உரிமை,பாதுகாப்பு விடயங்களில்
கரிசணையுடன் மிகவும் பக்குவமாகவும் சாணக்கியமாகவும் செயற்பட்டுக்
கொண்டிருக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம்
அவர்கள்.

உண்மையில் தனது சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தி அதனால் எம்
சமூகம் சிக்களுக்குள் மாட்டிக் கொள்வதை விரும்பாது யார் தன்னை
தூற்றினாலும் பரவாயில்லை சமூகத்தின் பாதுகாப்பு,உரிமை விடயங்களில்
பக்குவமாகவும் பகிரங்கப் படுத்தாமலும் சாதிக்க துடிக்கும் சாணக்கிய
தலைமையாகவே அவர் தற்காலத்தில் வளம் வருகிறார்  என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன.

உண்மையில் கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கும்,மார்க்க விழுமியங்களை பின்பற்றுவதில் பாரிய சிக்கல்களையும் மேற் கொண்டனர்.

உதாரணமாக அழுத்கம களவரம்,தம்புளை பள்ளிவாயல் இடிப்பு,பொதுபலசேன போன்ற பேரின இயக்கம் உருவாக்கம் என  அடிக்கிக் கொண்டே போகலாம் இவ்வாறான சூழ் நிலையில் மத்திய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டு ரவூப்ஹக்கிம்  மேற் கொண்ட செயற்பாடுகள் அவரின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

தனக்கோ,தமது கட்சிக்கோ இருக்கும் மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி இவரால் மீண்டும்மொரு பேரினவாத இயக்கத்தைப்போல் ஒரு போராட்டாத்தை நடத்த முடியாமல் இல்லை இருந்தும் அதன் பிரதி கூலங்கள்,அனுகூலங்கள் அனைத்தையும் நன்கு அறிந்த ரவூப் ஹக்கீம் தனது  சமூகத்தினதும்,நாட்டினதும் நலன் கருதி அதனை சூசகமாக மஹிந்த ராஜபக்ச  அரசாங்கத்துடன் அதனை முடிவுக்கு கொண்டு வருவற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

அது அனுவளவாக சரி வந்தாலும் ஆங்காங்கே மறைமுகமாக முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வந்தார்கள் ஆகவே அதனை அரசாங்கம் பொடுபோக்காக கை விட்டபோது தம் சமூகத்தின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு எட்டச் செய்து அரசாங்கத்துக்கு
அளுத்தத்தை கொடுத்தார்.

அதன் பிற்பாடு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எம் சமூகத்தின் நலன் கருதி மஹிந்த அணியை ஐக்கிய தேசிய கட்சியினால் தேர்வு செய்யப்பட்ட  பொது வேற்பாளரான மைத்திரி பால ஷி சேனாவுக்கு தனது முழு ஆதாரவையும் கொடுத்து அவருடைய வெற்றியில் தமது சமூகத்தின் பங்களிப்பையும் உறுதி செய்து கொண்டார்.

தற்போதய சூழ் நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கு புதிய அரசியல்
அமைப்பை உருவாக்கி தீர்வுகள் வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுத்துக்
கொண்டிருக்கும் வேலையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை தெளிவாக
முன்வைத்து சரியான தீர்வைப் பெறவேண்டிய காலத்தில் அதற்கான முன்னெடுப்புகளை
முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் முன்னேடுத்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.

இருந்தும் தலைமைத்துவதின் மீதுள்ள காழ்ப்புணர்வுகளாலும்,தனது அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கு இக் கட்சி தடையாக இருப்பதாலும் இதனை குழப்பவேண்டும் என்று மறைமுகமாக பல சக்திகள் செயற்படுவதையும் அதற்கு
ஆதரவாகவே கிழக்கின் எழுச்சி,என்ற போர்வையில் சில  அமைப்புக்கள் உறுவெடுத்து வருவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் தற்கால அரசியல் சூழ் நிலையில் ஆளுமையுள்ள தலைவரின் தர வரிசையில் ரவூப் ஹக்கீமுக்கும் தனி இடமுன்டு.உண்மையான தலைவரின் ஆளுமைகளுள்ள செயற்பாடுகள் அனைத்தும் அவரின் மரணத்தின் பின்பாடே அநேகர் புரிந்து கொள்வார்கள்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
    ஓட்டமாவடி


SHARE THIS

Author:

0 comments: