(வை.எம்.பைரூஸ்-வாழைச்சேனை)
கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸினுடாக களமிறக்கப்பட்டிருக்கும் புதுமுக வேட்பாளர் றியாழ் அவர்களை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வி இன்று அதிகமான கல்குடா வாழ் முஸ்லிம்களிடத்தில் எழுந்துள்ளது….? சகோதரர் றியாழின் வாழ்க்கையை சற்று நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், இவர் கல்குடா மண்ணில் பிறந்து, வளர்ந்த ஹயாத்து முஹம்மது என்பவருக்கும் அலிமாக்கண்டு என்பவருக்கும் புதல்வராகப் பிறந்தவர் தான் இந்த றியாழாவார். இயற்கையிலயே அனைவரிடத்திலும் சுமூகமாகப் பழகக் கூடிய இந்த றியாழ், தனது ஆரம்பக் கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா மஹா வித்தியாலயத்தில் பயின்றார். தரம் ஐந்து வரை தனது சொந்த மண்ணிலயே தனது படிப்பைப் பின் தொடர்நதார்/ பிற்பாடு 1987ம் ஆண்டு நடை பெற்ற5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியெய்தியதன் காரணமாக இலங்கையில் பிரபல்யமான பாடசாலையான கொழும்பு றோயல் கல்லுரியிலும் படிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். அதன் பிற்பாடு தரம் ஆறு முதல் றோயல் கல்லுரியில் தனது படிப்பை ஆரம்பித்து பற்பால சாதனைகளும் படைத்தது மட்டுமன்றி, பல சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து சேவையாற்றி சிறந்த தலைமைத்துவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். பாடசாலை வாழ்க்கை முடிந்ததன் பிறகு தனது உயர் கல்விக்காக பட்டயக் கணக்கியல் துறையை தேர்ந்தெடுத்து, அதனையும் தனது இருபத்தி நான்கு இளம் வயதிலயே பூர்த்தி செய்தார். அதன் பின்பு முகாமைத்துவக்கணக்கியல் துறையில் CMA பட்டமும், ஐக்கிய இராச்சியத்தின் பிரபல்யமான பல்கலைக்கழகமான derby பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமாணிப்பட்டமும் பெற்று (MBA), நம் கல்குடா மண்ணுக்குப் பெருமை சேர்த்துத் தந்தவர் தான் இந்த றியாழ். அதன் பி்ன்பு தனது கணக்கியல் தொழிலை ஜந்து வருடம் உள் நாட்டில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த றியாழ், பின்பு சவூதி அரேபியா, துபாய், ஜேர்மனி, ஆபிரிக்கா போன்ற நாடுளிலும் உயர் பதவிகளைப் பெற்றுள்ளார். துபாயில் இவர் பணி செய்யும் போது ஏறாத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு திட்டமிடல், வரவு-செலவுத்திட்டம் தயாரித்தல் போன்றவற்றுக்கான பொறுப்பை ஏற்றதோடு, தான் பணியாற்றிய நிறுவனத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலை சிறந்த நிறுவனமாகவும் மாற்றியமைத்தார். இலங்கையிலிருக்கும் செரன்டிப் கோதுமை நிறுவனத்தில் பிரதம நிதி அதிகாரியாகக் கடமையேற்று இலங்கையின் முன்னனி நிறுவனமாக அதனை மாற்றியமைக்க அரும் பாடுபட்டு அல்லாஹ்வின் உதவியுடன் அதனையும் தனது சாதனையாக மாற்றியமைத்து எம் மண்ணுக்குப் பெருமையை சேர்த்துத் தந்தார் இவ்வாறான பல திறமைகளையும் தன்னகத்த கொண்ட றியாழ் எம் ஊரின் பிரதிநிதித்துவத்துக்கு தகுதியற்றவரா….? பணக்காரன், ஏழை, படித்தவன், பாமரன், சிறுவர், முதியோர் என்ற பாகுபாடின்றி சுமூகமாகப் பழகும் இந்த றியாழ் எம் ஊரின் தலைமைத்துவத்துக்கு தகுதியற்றவரா ….? கல்குடாவின் அரசியலலை முழு இலங்கைக்கும் உதாரணமாக்கி அனைவருக்கும் கருத்துச்சுதந்திரத்தையும் வழங்குவேன் என்று கூறும் சகோதரர் றியாழை விட சிறந்த பிரதிநிதித்ததுவம் கல்குடா வாழ் முஸ்லிம்களுக்கு கிடைப்பதென்பது பகல் கனவே. கல் குடா வாழ் முஸ்லிம்களே! சற்று சிந்தியுங்கள்! எம் உரிமைக்கான குரல். றியாழுக்காக நாம் ஒன்றிணைவோம். றியாழின் வெற்றி கல்குடா வாழ் முஸ்லிம்களின் வெற்றியே இன்ஷா அல்லாஹ்.

0 comments: