வை.எல்.மன்சூர்
ஓட்டமாவடி பிரதேச செயலகம்,சபையின் எல்லைகள் நிர்ணயம் தொடர்பாக 1997 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் முன் பகுதியையும்,
நிலவளவைப் படங்களையும்,கோறளைப்பற்று - மேற்கு - ஓட்டமாவடி பிரதேச செயலகம்,சபைக்கான
தெற்கு எல்லையாக இந்தப் போட்டோக்களில் நாங்கள் நடமாடிக் காட்சி தரும் காயானோடை,காயனோட
ை,காசானோடை தெற்கு எல்லையாக வெளியிடப்பட்டுள
்ளன.
இந்த வர்த்தமானி புலிகள் அறிவிக்கப்படாத ஆட்சி நடாத்தும் காலத்தில் வெளியிடப்பட்டன.புலிகள் சொல்வதையே அரச நிருவாகிகள் செய்ய வேண்டியிருந்ததை அனைவரும் அறிவோம்.
அதனால் எந்தப் பிரதேச செயலாளரும் தமது எல்லை எதுவென்பதை அரசாங்கம் நிர்ணயித்ததை நடைமுறைப்படுத்த முடியாது?
தற்போது தமிழ் - முஸ்லிம் உறவைப்பலப்படுத்
த,முஸ்லிம்களின் உரிமைகளை வழங்கி வட-கிழக்கு இணைப்பை கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம் தனியலகு,கரையோர மாவட்டம் தருவோம் என்று கூறும் தாங்கள் முதலில் இந்த அரசாங்க வர்த்தமானியில் குறிப்பிடப்படும் ஓட்டமாவடி பிரதேச செயலகம்,சபைக்கான தெற்கு எல்லையை விட்டுத்தர முடியுமா?
ஓட்டமாவடி பிரதேச செயலாளரே? இந்த வர்த்தமானியை வைத்து நீதிமன்றில் வழக்குத் தொடருங்கள்.!
காலவிதிப்புச் சட்டம் என்ன பதில் தரும் என்று பார்ப்போம்!
0 comments: