Friday, August 14, 2015

ஓட்டமாவடியில் தோ்தல் வன்முறை: பிரதியமைச்சர் அமீா் அலியின் ஆதரவாளர்களால் தாக்குதல்

ஓட்டமாவடி விஷேட செய்தியாளர்













 மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தோ்தல் தொகுதியில் ஓட்டமாவடி-03ல் முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளர் HMM. றியாழ் அவா்களை ஆதரித்து கூட்டமொன்றை நடாத்த அவரது ஆதரவாளா் உமர் ஹசன் ஏற்பாடு செய்திருந்தார். இதனைக் கேள்வியுற்ற ஐ.தே. கட்சி வேட்பாளரின் ஆதரவாளா்களால் அச்சுறுத்தலுக்குள்ளானதுடன், அங்கிருந்த உமா் ஹசனும், மனைவி மற்றும் 02 வயது குழந்தையையும் தாக்குதலுக்குள்ளான நிலையில், மூவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்படி தாக்குதல் சம்பவத்தில் அவரது மனைவியின் விரல் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தைக் கேள்வியுற்று இஸ்தலத்திற்கு விரைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளா் கணக்கறிஞா் HMM. றியாழ் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.


SHARE THIS

Author:

0 comments: