Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Tuesday, July 4, 2017

இரு தினங்களில் சிறந்த மற்றும் மோசமான சாதனைகளை படைத்த டோனி

இரு தினங்களில் சிறந்த மற்றும் மோசமான சாதனைகளை படைத்த டோனி


    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்தது இருந்தார்.
டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.
indian-cricketer-ms-dhoni-worst-and-good-records-within-2-days

இதேவேளை இந்திய கிரிக்கெட் வரலாற்றின் கடைசி 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகம் குறைந்த அரை சதத்தை டோனி நேற்றைய போட்டியில் பதிவு செய்துள்ளார்.இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான நேற்று நடந்த நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓட்டங்களை பெற டோனி 108 பந்துகளை சந்தித்தார், 189 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை இந்தியா தொடமுடியாமல் போனதற்கு இந்த நத்தை வேக அரை சதம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த அரைசதம் மூலம் டோனி மோசமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.அதாவது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 16 வருடங்களில் எடுக்கப்பட்ட வேகம் குறைந்த அரை சதம் இதுவாகும்.
போட்டியின் சிறப்புக் காணொளி : https://goo.gl/i8XWFx
அறிமுக போட்டியில் சாதனை புரிந்த ஹஸரங்க பற்றிய பலர் அறியாத விடயம்(வீடியோ)

அறிமுக போட்டியில் சாதனை புரிந்த ஹஸரங்க பற்றிய பலர் அறியாத விடயம்(வீடியோ)


அறிமுக போட்டியில் சாதனை புரிந்த ஹஸரங்க பற்றிய பலர் அறியாத விடயம்(வீடியோ)



இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிது ஹஸரங்க  நேற்றைய சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்து அறிமுக போட்டியில் ஹெட்ரிக் பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்று இலங்கை கிரிக்கட் சாதனை புத்தகத்தை திருப்பி எழுதியுள்ளார்.
அத்தோடு சர்வதேச கிரிக்கட் அரங்கில் தென் ஆபிரிக்காவின் காகிஸோ ரபடா மற்றும் பங்களாதேஷ் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தமது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை நிலைநாட்டி இருந்ததோடு தற்போது வனிது ஹஸரங்க டி சில்வா இவர்களோடு அந்த சாதனை பட்டியலில் 3ஆவது வீரராக இணைந்து உள்ளார்.

காலி ரிச்மன்ட் கல்லூரியை சேர்ந்த வனிது ஹஸரங்க டி சில்வா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வணிகப் பிரிவில் பரீட்சை எழுத உள்ளார். அத்தோடு இலங்கை அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சதுரங்க டி சில்வா – வனிது ஹஸரங்க டி சில்வாவின் மூத்த சகோதரன் ஆவார்.
வனிதுவை பற்றிய குறிப்பு
முழுப் பெயர் : பின்னவடுகே வனிது ஹஸரங்க டி சில்வா
பிறந்த திகதி : 1997ஆம் ஆண்டு ஜூலை 29
பிறந்த இடம் : காலி
கல்லூரி : ரிச்மன்ட் கல்லூரி – காலி
துடுப்பாட்ட பாணி – வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு பாணி – லெக் பிரேக்
சகோதரர் – சதுரங்க டி சில்வா
துடுப்பாட்டம் 
unknown-facts-about-wanithu-hasaranga-sri-lankan-criceketer
வனிது ஹஸரங்க டி சில்வா இதுவரையில் 12 முதல்தர போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 775 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் ஒரு சதம், 5 அரைச்சதம் உள்ளடங்கும். அதிகபட்ச ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 116 ஓட்டங்களாகும். முதல்தர போட்டிகளின் சராசரி 45.58 ஆகக் காணப்படுகிறது. அத்தோடு அந்த 12 முதல்தர போட்டிகளில் 95 பவுண்டரிகளையும் 14 சிக்ஸர்களையும் விளாசி உள்ளார்.
பந்துவீச்சு
unknown-facts-about-wanithu-hasaranga-sri-lankan-criceketer
வனிது ஹஸரங்க டி சில்வா பந்துவீச்சில் 12 முதல்தர போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 16 விக்கட்டுகளை கைப்பற்றி உள்ளார். சிறந்த பந்து வீச்சு 15 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தமை ஆகும்.
களத்தடுப்பு
unknown-facts-about-wanithu-hasaranga-sri-lankan-criceketer
வனிது ஹஸரங்க டி சில்வா தற்போதுள்ள இலங்கை அணியில் மிகச்சிறந்த களத்தடுப்பாளர் என இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குர்சிங்க தெரிவித்து உள்ளார். வனிது விளையாடியுள்ள 12 முதல்தர போட்டிகளில் அவர் 10 பிடியெடுப்புகளை எடுத்துள்ளார்.

வீடியோ

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்திகளை கூறிய இலங்கை வீரர்கள் இவர்கள் தான்

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்திகளை கூறிய இலங்கை வீரர்கள் இவர்கள் தான்

 

அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது. இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்பதுடன், நோன்பானது ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக் கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீக பயிற்சியாகவும் அமைந்துள்ளது.
வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று இலங்கை மக்களால் கொண்டாடப்படுகின்றது.
புனித நோன்பு பெருநாளை இன்றைய தினம் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் Crictamil செய்தி சேவை தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
sri-lankan-cricket-players-who-wished-muslims-for-eid-festival



பிறந்தது ஒரு நாட்டில் – விளையாடியது இன்னுமொரு நாட்டில், யார் அந்த வீரர்கள்?

பிறந்தது ஒரு நாட்டில் – விளையாடியது இன்னுமொரு நாட்டில், யார் அந்த வீரர்கள்?

பிறந்தது ஒரு நாட்டில் – விளையாடியது இன்னுமொரு நாட்டில், யார் அந்த வீரர்கள்?



பென் ஸ்டோக்ஸ்
பிறந்த நாடு / இடம் : நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச், கென்டர்பரி
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 26
இம்ரான் தாஹிர்
பிறந்த நாடு / இடம் : பாகிஸ்தான், லாஹூர், பஞ்சாப்
விளையாடிய நாடு: தென் ஆபிரிக்கா
வயது : 38
கெவின் பீட்டர்சன்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, பிடெர்மாரிட்ஸ்பர்க், நட்டால்
விளையாடிய நாடு: இங்கிலாந்து
வயது : 37
எண்ட்ரூ ஸ்ட்ரோஸ்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, ஜொஹனஸ்பர்க், டிரான்ஸ்வால்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 40
கிராண்ட் எலியட்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, ஜொஹனஸ்பர்க், டிரான்ஸ்வால்
விளையாடிய நாடு : நியூசிலாந்து
வயது : 38
என்டி ப்ளவர்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, கேப் டவுன், கேப் மாகாணம்
விளையாடிய நாடு : சிம்பாப்வே
வயது : 49
ஜொனதன் டிரொட்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, கேப் டவுன், கேப் மாகாணம்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 36
எண்ட்ரூ சைமண்ட்ஸ்
பிறந்த நாடு / இடம் : இங்கிலாந்து, பர்மிங்ஹம், வார்விக்ஷையர்,
விளையாடிய நாடு : அவுஸ்ரேலியா
வயது : 42
சிக்கந்தர் ராசா
பிறந்த நாடு / இடம் : பாகிஸ்தான், சியல்கோட், பஞ்சாப்
விளையாடிய நாடு : சிம்பாப்வே
வயது : 31
நஸீர் ஹுசைன்
பிறந்த நாடு / இடம் : இந்தியா, சென்னை
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 49
ஜேசன் ரோய்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, டர்பன்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 26
இமாத் வசீம்
பிறந்த நாடு / இடம் : வேல்ஸ், ஸ்வான்சீ, கிளாமோர்கன்
விளையாடிய நாடு : பாகிஸ்தான்
வயது : 28
மெட் பிரயர்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, ஜொஹனஸ்பர்க், டிரான்ஸ்வால்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 35
கெரி பெலன்ஸ்
பிறந்த நாடு / இடம் : சிம்பாப்வே
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 27
ஜெஹென் முபாரக்
பிறந்த நாடு / இடம் : ஐக்கிய அமெரிக்கா, வொஷிங்டன்
விளையாடிய நாடு : இலங்கை
வயது : 36
கொலின் டி கிராண்ட்ஹாம்
பிறந்த நாடு / இடம் : சிம்பாப்வே, ஹராரே
விளையாடிய நாடு : நியூசிலாந்து
வயது : 30
நிக் கொம்ப்டன்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, டர்பன், நட்டால்
விளையாடிய நாடு: இங்கிலாந்து
வயது : 34
கிரேக் கீஸ்வெட்டர்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, ஜொஹனஸ்பர்க், டிரான்ஸ்வால்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 29
மைக்கேல் லம்ப்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, ஜொஹனஸ்பர்க், டிரான்ஸ்வால்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 37
இஷ் சோதி
பிறந்த நாடு / இடம் : இந்தியா, லூதியானா
விளையாடிய நாடு : நியூசிலாந்து
வயது : 24
ஓவிஸ் ஷா
பிறந்த நாடு / இடம் : பாகிஸ்தான், கராச்சி, சிந்து
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 38
உஸ்மான் கவாஜா
பிறந்த நாடு / இடம் : பாகிஸ்தான், இஸ்லாமாபாத்
விளையாடிய நாடு : அவுஸ்ரேலியா
வயது : 30
கிறிஸ் ஜோர்டன்
பிறந்த நாடு / இடம் : பார்படோஸ், கரிபியன் தீவு
விளையாடிய நாடு : இங்கிலாந்து
வயது : 28
ஸ்டீவ் ஓ’கேஃபீ
பிறந்த நாடு / இடம் : மலேசியா
விளையாடிய நாடு : அவுஸ்ரேலியா
வயது : 32
டோனி கிரேக்
பிறந்த நாடு / இடம் : தென் ஆபிரிக்கா, குயின்ஸ்டவுன், கேப் மாகாணம்
விளையாடிய நாடு : இங்கிலாந்து
இறக்கும் போது வயது : 66
ஷான் மசூத்
பிறந்த நாடு / இடம் : குவைத்
விளையாடிய நாடு : பாகிஸ்தான்
வயது : 27
ரிஸ்வான் ஷீமா
பிறந்த நாடு / இடம் : பாகிஸ்தான்
விளையாடிய நாடு : கெனடா
வயது : 38
டேவ் வட்மோர்
பிறந்த நாடு / இடம் : கொழும்பு, இலங்கை
விளையாடிய நாடு : அவுஸ்ரேலியா
வயது : 63
மொயிசஸ் ஹென்றிக்குஸ்
பிறந்த நாடு / இடம் : ஃபுஞ்சல், போர்த்துக்கல்
விளையாடிய நாடு : அவுஸ்ரேலியா
வயது : 30