Tuesday, October 3, 2017

கம்பராமாயணமும்,பிரதி அமைச்சர் அமீர் அலியும்....!!!!

வீரம்,வலிமை என்பது வெற்றுக் கோசமாக இருக்க முடியாது. அது செயலில் இருக்க வேண்டும்.
தனது வீரம் என்பது உண்மை எனில்,தான் சக்தி மிக்கவன்தான் என்பது உண்மை எனில் அதை நிரூபிக்க போட்டி போட வேண்டும். அப்போதுதான் அது ஏனையவர்களுக்கும் நிரூபனமாகும். மேலும் தனது வீரத்தை வெளிக்காட்ட வேண்டுமெனில் தனது வீரத்திற்குச் சமமான பிரிதொரு வீரனிடம் அவனும் அதே வலிமை உள்ளவனாக இருக்கும் போதே போட்டியிட வேண்டும்.


அதாவது எமது பிரதேசமான ஓட்டமாவடியில் நேற்று 30.09.2017 அன்று பிரதி அமைச்சர் தனது சொந்த செலவில் தனது ஆதரவாளர்களைப் பயன்படுத்தி பட்டாசு கொழுத்தி ஒரு வகையான வெற்றிக்களிப்பில் ஈடுபட்டார். உண்மையில் அது வெற்றிக்களிப்பல்ல! தனது பயம் தெளிந்து விட்டது என்பதை பறைசாற்றிய ஒரு வெளிப்பாடு. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு விட்டதனால் இனிமேல் எனக்கு எந்த எதிரிகளும் இல்லை. இனி நான்தான் தனிஒருவன் , தான் நினைத்ததை சாதித்துவிடுவேன் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
அண்மைக் காலங்களாக கிழக்கு முதல்வருக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையில் அதிகாரப் போட்டி நிலவி வந்ததை எல்லோரும் அறிவீர்கள். அந்தப் போட்டியிலே எந்த ஒன்றிலும் பிரதி அமைச்சரால் வெற்றி பெறவே முடியவில்லை. முதலமைச்சர் தனது அதிகாரங்களை சரியாகவும் கட்சிதமாகவும் பயன்டுபத்திக் கொண்டதனால் பிரதி அமைச்சரால் முதல்வர் முன்னிலையில் மூச்சு விடவும் முடியாமல் போனது. இந்த தாக்கத்தினால் அவஸ்த்தைப்பட்ட பிரதி அமைச்சர் அடிக்கடி சொல்லி வந்த வார்த்தைதான் “கிழக்கு மாகாண சபை கலையட்டும்”என்று. இங்கேதான் நாம் சிந்திக்க வேண்டிய நிறைய விடயங்கள் இருக்கிறது. 

போட்டி என்றால் இரு வீரர்களும் சரி சம பலத்துடன் இருக்கவேண்டும். அப்போதுதான் அது போட்டியாகப் பார்க்கப்படும். இரு கால்களையும் இழந்த ஒருவனைப் பார்த்து ஒரு ஓட்ட வீரன் தன்னோடு போட்டிக்கு வருகிறாயா? என்று கேட்க மாட்டான்.
அப்படிக் கேட்டால் அவன் யாராக இருக்க முடியும்?


இப்போது பிரதி அமைச்சரும் இப்படியான கேள்வி ஒன்றையே முதலமைச்சரைப் பார்த்து எழுப்பியுள்ளார். அதிகாரமில்லாத ஒருவரைப் பார்த்து அதிகாரப் போட்டிக்கு அறைகூவல் விடுத்துள்ள பிரதி அமைச்சரின் செயல்ப்பாடுகளைப் பார்க்கின்ற போது சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.


கம்பராமாயணத்திலே இராமனுக்கும், இராவணனுக்கும் இடையில் உக்கிரமாக போர் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்திலே இராவணன் நிராயுதபாணியாகின்றான். இராமன் நினைத்திருந்தால் இராவணனை அப்போதே கொண்டிருக்க முடியும். ஆனால் இராமன் வீரனல்லவா? உடனே இராவணனைப் பார்த்துச் சொன்னான்.“இன்று போய் போருக்கு நாளை வா!” என்று. இது தான் வீரனுக்கு அழகு. அதிகாரத்திலே இருந்த முதல்வரோடு போட்டி போட முடியாமல் அதிகாரம் இறக்கப்பட்டவுடன் பட்டாசு கொழுத்தி கொண்டாடி போட்டிக்கு அறைகூவல் விடுப்பதென்பது அறியாமையும்,அடிமட்ட முட்டாள் தனமும்,கோழைத்தனமுமாகும்.


இறுதியாக.. பிரதி அமைச்சர் அவர்களே! இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளைச் செய்வதனால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. இது மேலும் தனது இயலாமையையே வெளிப்படுத்தும். முதல்வரோடு ஆயிரம் முறண்பாடுகள் அனேகமாணவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவற்றைத் தீர்த்துக் கொள்வதென்பது இப்படியான செயல்பாடுகளினால் அல்ல! அதிகாரத்தை அதிகாரத்தால் வெல்ல முயற்சி செய்யுங்கள். எப்பொழுதும் நல்ல ஆலோசகர்களை கூடவே வை
த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் இருந்து விடுபடமுடியும்.



எஸ்.ஜ.முஹாஜிரீன் (ஆசிரியர்) ஓட்டமாவடி

SHARE THIS

0 comments: