அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சின்னம் கொக்கா குருவியா? இல்லை மயிலா என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் அதன் சின்னத்தை வருகின்ற தேர்தலிலாவது குறிப்பாக பிரதேச சபை தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கு திரை நீக்கம் செய்வார்களா என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
இது வரை எந்தவொரு தேர்தலிலும் தனது சொந்த சின்னத்தை வெளிப்படுத்தாத அந்தக் கட்சிக்கு அதன் சின்னம் மறந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தேசிய கட்சிகளோடு ஒட்டிக் கொண்டு ஒரு ஒட்டுண்ணிக் கட்சியாக வளம்வரும் அதன் தலைவரும் தவிசாளரும் வீராப்பு வசனங்களை் பேசுவதை நிருத்திவிட்டு தனது சின்னத்தின் ஊடாக ஒரு தேர்தலையாவது சந்தித்து காட்ட வேண்டும்....?
நடை பெற இருக்கின்ற பிரதேச சபை தேர்தலிலே அக்கட்சியின் தலைவரின் பிரதேசம் மற்றும் தவிசாளரின் பிரதேசத்திலே தாங்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்றால் தனது சொந்தக்கட்சியில் ,தனது சொந்த சின்னத்தில் தேர்தலை முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
இதை ஒரு சவாலாக ஏற்று நிரரூபித்துக் காட்ட வேண்டும். இல்லை என்றால் தேசிய கட்சிகளோடு எப்போதும் சங்கமிக்கின்ற ஒரு ஒட்டுண்ணிக் கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பதை நான் அல்ல மக்களே அதனை முடிவெடுத்துக் கொள்வார்கள்.
ஆசிரியர்: எஸ்.ஐ.முஹாஜிரீன்
ஓட்டமாவடி
|
SHARE THIS
0 comments: