Sunday, April 30, 2017

துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கலுக்கான பணிகளை கல்குடாத்தொகுதி அமைப்பாளர் HMM.றியாழ் பார்வையிட்டார்

Yakoob mohamed fairoos
 கல்குடா மக்களின் மிக நீண்ட காலத்தேவையாக இருந்த சுத்தமான குடிநீர்த் தேவையை நிவர்த்திக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் அங்கீகாரத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் அதியுயர் பீட உறுப்பினருமான கணக்கறிஞர் HMM.றியாழ் அவர்களின் அயராத முயற்சியினாலும் முதற்கட்ட நீர் வழங்கல் வெற்றிகரமாக முடிவுற்றது. 



இந்நிலையில், இரண்டாம் கட்ட குடிநீர் வழங்கல் திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும், அதனூடாக மிக மிக அவசியமாக குடிநீர் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அத்திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் HMM.றியாழ் அவர்கள் வாக்குறுதி வழங்கியிருந்தார்கள். 


ஏனைய அரசியல்வாதிகள் போன்று பொய் வாக்குறுதி வழங்கி எமாற்றும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் றியாழ் அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமெனும் நோக்கில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அமைச்சர் ரவூப் அவர்களூடாக நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள், பணிப்பாளர்களின் அனுமதியைப் பெற்று இந்த இரண்டாம் கட்ட நீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியிலிருந்து MPCS வீதி வழியாக ஓட்டமாவடி, மாவடிச்சேனை, மீராவோடை, செம்மண்ணோடைப் பகுதிகளுக்கும் விஸ்தரித்து அதன் பூர்வாங்க வேலைகள் இடம்பெற்று வருகின்றன. 


குறிப்பாக, இப்பிரதேசத்திலுள்ள பொது நிறுவனங்களுக்கும் மற்றும் அத்தியாவசியமாக சுத்தமான குடிநீர் தேவைப்படும் இடங்களுக்கும் குடிநீரினை வழங்கத்தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். 


கல்குடா ஷூரா சபையால் அடையாளப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை எவரும் முன்னெடுத்துச் செயற்படுத்த முடியாமல் வெறும் வாய்ப்பேச்சளவில் இருந்து வந்த நிலையில், எப்படியாவது இக்குடிநீர்த்திட்டத்தை இப்பிரதேசத்திற்கு கொண்டு வந்தே தீருவேன் எனக்கூறிய பொழுது, இப்பிரதேசத்திற்கல்ல. ஒரு போத்தலிலாவது குடிநீர் கொண்டு வந்து காட்டுங்கள் என்று சவால் விட்டவர்கள் இப்போது வாயடைத்துப் போயுள்ளார்கள். 


எப்போதும் ஒரு திட்டம் நிறைவேறாமல் அது தொடர்பில் பேசுவதை விட நிறைவேற்றி விட்டு பேசுவது தான் ஒரு அரசியல்வாதிக்குரிய பண்பு. அதனை கணக்கறிஞர் HMM.றியாழ் அவர்கள் செய்து காட்டியுள்ளார். 


இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தில் சகலரும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளவும், அசுத்தமான குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாரிய நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான அத்தனை திட்டங்களையும் வகுத்து செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உருப்பினருமான கணக்கறிஞர் HMM.றியாழ் அவர்கள், நேற்று 27.04.2017ம் MPCS வீதியில் மாவடிச்சேனை, செம்மன்ணோடை எல்லைப்பகுதிகளில் துரித்தமாக இடம்பெற்று வரும் குடிநீர்க்குழாய் பதிக்கும் வேலைகளை நேரில் சென்று பார்வையிட்டு பிரதேச மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கினார். 

hmm-riyal-visited-and-watched-on-kalkudah-pure-water-project
தகவல்:கல்குடாநேசன்
hmm-riyal-visited-and-watched-on-kalkudah-pure-water-project

hmm-riyal-visited-and-watched-on-kalkudah-pure-water-project

SHARE THIS

0 comments: