#stand_against_kalkudah_liquor_factory
###############################
கல்குடா பகுதியில் 19 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டுவரும், டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் தலைமைப் பதவியை அர்ஜூன் அலோசியஸ் வகிப்பதாக மென்டிஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர் மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனாவார்.
ஏற்கனவே இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலையை தடுக்குமாறு கோரி கிழக்குமாகாண சபையில் நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்கு அமைய கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தவிர பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இன மத பேதமின்றி பல்வேறு தர்ப்பினரும் இந்த தொழிற்சாலைக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்றும் மதுபான உற்பத்தி சாலையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
இதேவேளை ஏற்கனவே இந்த மதுபான உற்பத்திசாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பது நல்லாட்சியா?
0 comments: