Friday, March 3, 2017

சொந்த மண்ணில் மூக்குடைக்கப்பட்டார் பிரதி அமைச்சர் அமீர் அலி...!!!

worst-behavier-of-ameer-ali-mp-in-oddamavady


ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின்  இறுதி நாள் நிகழ்வு இன்று மாலை அதாவது 28-02-17 ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் கோலாகலமாக    பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம் அஜ்மீர் தலைமையில் இடம்பெற்றது.

worst-behavier-of-ameer-ali-mp-in-oddamavady இந் நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார  பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.அவர் அங்கு பேசுகையில் பாடசாலையின் வளர்ச்சியையோ,அல்லது அப் பாடசாலையை உருவாக்குவதில் முக்கிய காரணகர்த்தாவான மர்ஹூம் ஷரீப் அலி ஆசிரியரையோ, அவரின் அரப்பணிப்புக்களையா பற்றி பேசாமல்  அங்கும் தனது கீழ்த்தரமான அரசியலை கொண்டு வந்து  கல்குடாவிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் மூத்த போராளிகளை விமர்சித்தது மாத்திரமன்றி தாம் வந்த நிகழ்வு எதுவென்றே அறியாமல் தனது எதிர்கால அரசியலை பாதுகாப்பதற்காக வேண்டியோ தாந்தோடித்தனமாக பேசிக் கொண்டு சென்றார்.

பிரதி அமைச்சர் அமீர் அலியின் இவ்வாறன வங்குராத்து அரசியல் பேச்சானது அங்கு  வந்திருந்த அப்பாடசாலை மாணவர்களின்  பெற்றோர்களை கோபத்துக்குள்ளாக்கியது.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் குறித்த நிகழ்வுக்கு வந்திருந்த அப்பாடசாலையில் கற்பித்து கொடுக்கும் ஆசிரியரும் முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபையின்  உறுப்பினருமான முஹாஜிரீன் ஆசிரியர் மேடையிலிருந்து வீற்றெழுந்து பிரதிஅமைச்சர் அமீர் அலியை தாருமறாக ஏச துவங்கினார் அத்தோடு  அங்கிருந்த பெண்களும் அமைச்சரை தகாத வார்த்தைகளால் ஏச நிகழ்வு கலகலப்பானதோடு அங்கு மேடையில் வீற்றிருந்த அனைவரும் வாய் மூடி மௌனியாக வேடிக்கை பார்க்க தனது சொந்த மண்ணிலயே  பிரதி அமைச்சர் அமீர் அலி மூக்குடைக்கப்பட்டார்.

உண்மையில் அப்பாடசாலையின் குறித்த நிகழ்வுக்கான நிதியை எந்தவொரு அரசியல் வாதியோ,அல்லது தனிமனிதனோ கொடுக்கவில்லை.மாறாக அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிடத்திருந்தே மிகவும் கஷ்ட்டத்துக்கு மத்தியில் சேகரிக்கப்பட்டு அப்பாடசாலையின் முதலாவது இல்ல விளையாட்டு போட்டி என்பதற்காக குறித்த இறுதி நிகழ்வும் மிகவும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 தங்கள் ஊரின் ஒரு அரசியல் ஞானி என்பதற்காகவே அங்கு  அமைச்சர  அமீர் அலியும் அங்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அங்கு பிரதியமைச்சர் அமீர் அலியின் பேச்சானது அந்நிகழ்வையே நிலை குலைய வைத்ததோடு அந் நிகழ்வில் அமைச்சரோரு மேடையில் வீற்றிருந்த 
 மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்  அஷ்ரப், கோட்டக் கல்வி அதிகாரி ஜூனைட்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றியாஸ்  மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கும் தலை குணிவை ஏற்படுத்தியதோடு எதிர்பார்ப்போடு வந்த பெற்றோர்களுக்கும் ஏமாற்றமாக நிகழ்வு முடிவடைந்தது.

வாழைச்சேனை வை.எம். பைரூஸ்

SHARE THIS

0 comments: