|
எவ்வித ஆதாரவாளர்களையும் நாடாமல் தங்களுடை விடா முயற்சியினால் தங்களுடைய பிரதேசத்துக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களின் திறமைகளை மாவட்ட, மாகாண ரீதியிலும் கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டதே Dtsc விளையாட்டுக்கழகமாகும்.
கல்குடா தொகுதியில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட கழகங்கள் இருக்கின்றது. அதில் எத்தனையோ திறமை வாய்ந்த வீரர்கள் இருந்த போதிலும், அவர்களின் திறமைகள் கல்குடா பிரதேசத்துக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தது. அவ்வாறான வீரர்களை இனங்கண்டு மாகாண, தேசிய ரீதியில் கொண்டு செல்வதற்கான எவ்வித முயற்சிகளையும் கல்குடாவிலிருக்கும் எந்தவொரு அரசியல்வாதியோ, சமூக சேவையாளரோ முன்வரவில்லை.
அந்த வகையில் கல்குடா பிரதேசத்தில் Dtsc யின் வருகையானது, கல்குடா பிரதேசத்திலுள்ள ஏனைய கழகங்களின் திறமையான வீரர்களுக்கும் தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது என்றாலும் மிகையில்லை.
எவ்வாறாயினும், Dtsc விளையாட்டுக் கழகமானது, கடந்த காலங்களில் காத்தான்குடி, ஏறாவூர், கல்முனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் சென்று கடின, மென்பந்து போட்டிகளில் கலந்து கொண்டதுடன், பல வெற்றிகளையும் குவித்து, கல்குடா பிரதேசத்திலும் இவ்வாறான பல திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதைப் பறைசாற்றியுள்ளது.
எதிர்வரும் காலங்களிலும் விளையாட்டுத்துறையில் பல காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவிருக்கும் Dtsc கழகத்தை மென்மேலும் வலுப்படுத்த கல்குடாவிலுள்ள அரசியல்வாதிகள், சமூக சேவை நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
அதுமட்டுமன்றி, Dtsc கழக உறுப்பினர்கள் விளையாட்டுக்கப்பால் ஆன்மீகம், கல்வி, சமூகம் சார் பொது நிகழ்வுகளிலும் தங்கள் பங்களிப்புக்களை வழங்கி வருவதுடன், ஏனைய கழகங்களுக்கு முன்மாதிரியாக Dtsc மாற்றியமைக்கப்பட வேண்டும்
0 comments: