
இந்த வரிசையில் தவிசாளரும் இணைந்து கொள்கிறார்.
தவிசாளர் பசீரின் கூற்றிலிருந்து......
அன்று தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களை அதாவுல்லாஹ் போன்றவர்களின் சதியில் இருந்து பாதுகாத்தது ஏன் என்கின்ற போது அவர் இளமையானவராகவும் அனுபவம் குறைந்தவராகவும் இருந்ததால் அன்று அவரை பாதுகாப்பதன் மூலம் கட்சியை பாதுகாக்க முடியும் என்று நம்பியிருந்ததாக தவிசாளர் பசீர் சேகுதாவுத் அவர்களின் கருத்து இன்று காணப்படுகின்றது.
அதே போல் இப்போது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சியின் தலைமையிலிருந்து அகற்றுவதன் மூலமே கட்சியை பாதுகாக்கலாம் என்று கூறுகின்றார். அதே போன்று கட்சித் தலைவர் அவரின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த தவறொன்றிக்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறி இப்போது தலைவரை பகிரங்கமாக மிரட்டி வருகிறார். அது மட்டுமன்றி அதற்கு தானும் துணை போயுள்ளாதகவும் தான் ஒன்றும் சுத்தம் இல்லை என்பதையும் அவரே ஏற்றும் கொள்கிறார்.
இந்த நிலைக்கு நீங்கள் வர என்ன காரணம் உங்களின் கருத்துக்களில் இருந்து .
உங்கள் அரசியல் ஆரம்பம் துரோகத்தில் இருந்தே ஆரம்பித்தது ஆகவே அதன் முடிவும் துரோகத்திலேதான் முடிவடையும்.
உங்களை வளர்த்துக் கொள்ளவும் கட்சியில் உங்களுக்கென்று தனி இடத்தை பெற்றுக் கொள்ளவும், தொடர்த்தேச்சியாக அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளவும் ஒருத்தரின் பலவீனத்தை நீங்கள் பலமாக இத்தனை காலமும் பயன்படுத்தி வந்திருக்கிறிர்கள். இப்போது அதற்கு இடம் இல்லை என்றவுடன் பலிக்கு பலிவாங்க புரப்பட்டுவிட்டீர்கள். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போகனும் என்பதே தற்போது உங்களின் நிலை.....?
நீங்கள் கூறுவது போல் ரவூப் ஹக்கிம் உண்மையில் தவரு செய்திருந்தாலும்
அவரின் தவரை நீங்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு அது தொடர்பான தகவல்களை திரட்டிக் கொண்டு இவ்வளவு காலமாக அவரை மிரட்டி நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து வந்திருக்கிறீர்கள் அல்லவா.....?
இதனை உங்களால் மறுதலிக்க முடியுமா...?
கௌரவ தவிசாளர் அவர்களே...! உங்களின் கூற்று உண்மையாகவிருந்தால்
ரவூப் ஹக்கிம் அவர்களும் தனது தனிப்பட்ட தவரு வெளியில் வரும் பட்சத்தில் தனது கௌரவத்திற்கு ஏற்படும் இழுக்கை எண்ணி உங்களுக்கு அவர் இவ்வளவு காலமும் கட்டுப் பட்டு அரசியல் அதிகாரங்களை தொடராக தந்து வந்திருக்கிறார். இது நீங்கள் தனிப்பட்ட மனிதனுக்கு செய்த துரோகம் அல்ல மாறாக ஒட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் நீங்கள் செய்த துரோகம்...!!!
ரவூப் ஹக்கிம் அவர்களுக்கு நீங்கள் ஆரம்பத்தில் நம்பிக்கைக்குரியவராகவும் உற்ற தோழராகவும் விளங்கியிருக்கிறீர்கள். என்பது நாடறிந்த உண்மை ஆனால் போகப் போகதான் உங்களின் பதவி ஆசையும் அதற்காக தன்னை பயன்படுத்துவதையும் உங்களின் மிரட்டளையும் அவர் புரிந்திருக்க கூடும்.
இருந்த போதும் கடந்த காலங்களல் சமூக பிரச்சனை என்று வரும் போது அவர் உங்களின் சுயநலமான நிலைப்பாடுகளை நிராகரித்து சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனது காத்திரமான பங்களிப்புகளை வழங்கினார்.என்பதை எமது சமூகம் மறக்கவில்லை.
அப்போது நீங்கள் அவருடன் முரண்பட்டாலும் ஏன் ரகசிய ஆவணங்களை வெளியிட முன் வரவில்லை என்பதே எனது கேள்வி....? அரசியல் அதிகாரம் கிடைப்பதற்காக தலைமையும் சமூக கடமைகளின் போது உங்களின் மிரட்டல் களுக்கு அஞ்சவுமில்லை தான் வாழ சமூகம் அழிவதை விட தான் அழிந்தாலும் சமூகம் வாழவேண்டும் என்பதாலோ தன் தலையை கொடுக்க முன்வந்து உங்களின் மிரட்டல்களுக்கு செவிசாய்க்கது செயற்பட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
உங்களின் முரண்பாடான கருத்துக்கள் இவ்வாறு தொடர்ந்து சொல்வது எம் சமூகத்துக்கு நாகரிகமானதல்ல என்பதாலும் தொடர்ந்து எந்தப் பயனும் இல்லாதவருக்கு போராளிகளின் எதிர்பார்ப்புகளை மீறி தொடர்ந்தும் அரசியல் அதிகாரம் வழங்கக் கூடாது என்பதனாலுமே தலைவர் தேசியப் பட்டியலை தவிசாளர் பசீருக்கு வழங்குவதை நிறுத்தினார். என்பதை நாம் அறிந்ததே...!!!
போராளிகளும் தலைவர் தவிசாளரின் பிடியில் தலைவர் சிக்கி தவிக்கிறார் அவர் விரைவில் விடுபடவேண்டும் என்பதையே விரும்பியிமிருந்தார்கள்.
அன்று தலைமை இருந்த அனுபவங்களை விட இன்று நிறைய பக்குவங்களையும் அனுபவத்தையும் பெற்றதனால்தான் தவிசாளரின் விடாப் பிடியை அடக்க அவரின் சொந்த ஊரில் இருந்தே ஹாபீஸ் நசிரை கட்சிக்குள் உள்வாங்கி முதலமைச்சராகவும் ஆக்கினார். அதுமட்டு மன்றி அலி சாஹீர் மௌலானாவையும் உள்வாங்கி பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கினார். இவைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தவிசாளர் இவர்களை பழிவாங்குவதற்காகவே வீண் வாதம் பன்னுகிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
கடந்த காலம் வரைக்கும் வாய்திறக்காமல் இருந்து யார் தொடர்பிலும் தனிப்பட்ட ரகசிய ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்றும் கூறிவந்த தவிசாளர் பசீர் சேகுதாவூத் இறுதியில் தனது இறுதி மகளின் திருமணத்தை முடித்துவைத்துவிட்ட பின்னர் தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிருக்கிறார். இவர் பழிவாங்க துடிக்கும் நபர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு என்பதை மறந்து தனது வரட்டு கௌரவத்துக்காக தவிசாளர் இவ்வாறு மற்றவர்களின் மானத்தோடு விளையாட முனைவது தவிசாளர் சுயநலவாதி என்பதையே புடம்போட்டு காட்டுகின்றது.
மனிதன் மறதிக்கும் தவருக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்.
தலைவரும் அவ்வாறு தவருகள் செய்திருப்பின் அதனை தவரு என்று என்னி அதிலிருந்து விடுபட்டு வருந்தி தௌபா செய்து மீண்டு கொள்ள வேண்டும். உங்களின் தவரு அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் இறைவன் நாடு்ம் பட்சத்தில் உங்களை மன்னிக்க கூடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த தரை அந்த மனிதன் மன்னிக்காத பட்சத்தில் அல்லாஹ்வும் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.என்பதை நாமறிந்ததுவே எனவே உங்களின் தனிப்பட்ட தவரை மறைப்பதற்கு சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் அநிதி செய்திருந்தால் பொதுவாக மன்னிப்பு கேட்டு உங்கள் தவருகளை சீர் செய்து சமூக பணியை இதயசுத்தியுடன் முன்னெடுங்கள்.
உங்களை மண்ணிக்க சமூகம் என்ற அடிப்படையில் தயாராக இருக்கிறோம். இனியும் சமூக விடயங்களின் உங்களின் பலயீனங்கள் தாக்கம் செலுத்தக் கூடாது என்றும் உங்களை பாதுகாக்க , எம் சமூகத்தையும்,அவர்களின் உரிமைகளையும் ஒருபோதும் அடகுவைக்க விட மாட்டோம் என்பதனையும் காரசாரமாக இவ்விடத்தில் கட்சியின் உண்மை போராளியாக எடுத்துக் கூறுகிறேன்.
தவிசாளரே! இது உங்களின் கவனத்திற்கு...!
நீங்கள் ஒரு தனி நபரை பழிவாங்க துடிக்கவில்லை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தலைகுனியச் செய்கின்ற வேலையையே செய்கின்றிர். உங்களுக்கு உங்கள் ஊரிலயே எவ்வீத செல்வாக்கும் இல்லை என்பதை நாடறிந்த உண்மை...! அதனால் நீங்கள் உங்கள் தவறை எம் சமூகத்துக்கு புடம் போட்ட காட்டுவதால் எவ்வீத பிரச்சனையும் இல்லை ஆனால் நீங்கள் குற்றம் சாட்டும் நபர் சமூகத்திலும், தேசியத்திலும்,சர்வதேசத்திலும் அறியப்பட்ட நபர் என்பதை மறவாதீர்கள். பல மேடைகளில் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருப்பதாக கூறியிருக்கிறிர்கள் அவரின் மானத்தை போக்காட்டுவதுதான் உங்கள் நன்றி கடனா? என்பதை உங்கள் மனச்சாட்சியை தொட்டு கேளுங்கள்.
கட்சியின் உண்மை போராளிகளே....!
தவிசாளரின் அறிக்கை தொடர்பில் நீங்கள் அலட்டிக் கொள்ளவேண்டாம். இதனை பெறிதாக தூக்கி அலட்டிக் கொள்பவர்கள் கட்சியை அழிக்க துடிக்கும் எதிர் தரப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்களும்தான். என்பதை நடு நிலையானவர்கள் பலர் அறிந்து வைத்துள்ளார்கள்.
போராளிகளே தலைவர் தொடர்பா யாரும் பேசினால் உரக்க சொல்லுங்கள் தலைவரை நாங்கள் மன்னித்து விட்டோம் என்று
முகநூல்களில் தலைவரை கேவலமாக விமர்சிப்பவர்கள் உத்தமர்களா? அவர்களும் அவர்களின் சக்திக்கு ஏற்ப பாவங்கள் செய்தவர்கள்தான் என்பதை உணர்ந்து பிரரை விமர்சிக்குமுன் தங்களையும் ஒரு நிமிடம் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்று மிகத் பணிவுடன் வேண்டுகிறேன்.
எதிர்காலத் தலைவர்களே!
சமூக கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் ஈடுபட முன்வருபவர்களும் தலைமைத்துவங்களை வழங்கிக் கொண்டிருப்பவர்களும் வழங்குவதற்கு முன்வருபவர்களுக்கும் இவ்வாறான சம்பவங்களில் நிறைய படிப்பினைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்....!!!
தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களே....!!!!
உங்கள் கூட இருந்து அனுபவித்தவன் கூட உங்களை காட்டி கொடுக்க துனிந்து விட்டான் உங்களிடம் எதையும் அனுபவிக்காத சமூக அக்கறை உள்ளவர்கள் தான் உங்களை தற்போது பாதுகாக்க துனிந்து இருக்கிறார்கள். இனியும் காலம் தாழ்த்தாது சிறப்பான முடிவுகளை முன்னெடுத்து உறுதியாக போராடுங்கள் தலைவரே !
இறுதியாக!
இவைகள் தவிசாளரின் கூற்றிலிருந்து தலைவர் தவரு செய்தவர் உண்மையில் ரகசிய ஆவணங்கள் உண்டு என்ற கருத்தின் அடிப்படையிலயே எழுதப்பட்டது. மாறாக தலைவர் தவரு செய்யாது மக்கள் மத்தியில் அவர் தொடர்பான தவரான என்னங்களை ஏற்படுத்துவதற்கு முற்படுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் .
கல்குடா போராளி!
0 comments: