ஓட்டாமாவடி பிரசேத்தில் உள்ள பிரபல விளையாட்டு கழகமான யங்சோல்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் நேற்று அதாவது 03-02-17 கழக காரியாலயத்தில் வைத்து வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் உதைப்பந்தாட்ட அணிக்கு சீருடை வழங்கும் வைபவமொன்று கழகத் தலைவர் பர்சான் தலைமையில் நடைபெற்றது.

குறித்த இந் நிகழ்வில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கற்பித்த ஆசிரியர் அஹ்சாப் அவர்கள் பிரதி அதிபராக தெரிவானததற்கு கௌரவிக்கப்பட்டதோடு, மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கடந்த கால பாடசாலை பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற ஒரு சில மாணவர்களுக்கு சிறு தொகை ஊக்கு விப்பு பணத் தொகையொன்றும் பாடசாலையின் அதிபர் ஹலீம் இஸ்ஹாக் அவர்களால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் அந்-நூர் தேசிய பாடசாலையின் அதிபர் தாஹிர், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் ஹலீம் இஸ்ஹாக், பிரதி அதிபர் அஹ்சாப், மற்றும் கழகத்தின் ஆலோசகரும், சுகாதார பரிசோதகருமான நௌபல் , ஏனைய கழக நிர்வாக உறுப்பினர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
தகவல்:றிபாஸ் YSSC
0 comments: