முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் விடா முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் உரிமைக் குரலாக உருவாக்கப்பட்டது. ஆனால் அது காலப் போக்கில் ஒரு மாவட்டத்துக்குள் சுருங்கிச் செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளது.
தற்கால சூழ் நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற,மாகாண,கட்சி அதிகாரங்கள் குறிப்பாக ஒரு மாவட்டத்திற்குள் முடங்கிக் கிடப்பதைக் காணலாம். போதாக் குறைக்கு ஒவ்வொரு ஊருக்கும் அதிகாரம் வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் அதிகாரம் வேண்டும் எல்லாம் எங்கள் மாவட்டத்திற்கு மட்டும் வேண்டும் என்ற தோரணையில் சிலர் நடந்து கொள்வது உண்மையில் மனவேதனை அளிக்கின்றது.

அரசியல் நிலமைகள் மாற்றம் பெறுகின்ற ஒரு சூழ் நிலையில் அதனை விளங்கிக் கொண்டு தலைமைக்கு பக்கபலமாக இருக்காது எது நடந்தாலும் யாரின் தாழியை அறுத்தாவது எங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அடம்பிடிப்பது என்ன நியாயம்.
தங்களுடைய ஊரை விட மாவட்டம் மற்றும் தொகுதி போன்றவற்றில் ஏனைய பிரதேசங்கள் அதிகாரம் இழந்திருக்கும் நிலையில் இவ்வாறு நீங்கள் மாகாண அமைச்சை கொண்டிருக்கும் போதும் அவை கூட இல்லாத தொகுதி,மாவட்ட முஸ்லிம் சகோதரர்களின் நிலைமையை உணர மறுப்பது ஏன்?
உங்கள் மாவட்டத்தில் மு.கா.தலைவருக்கும் ஒரு இல்லத்தை வாங்கி அவரையும் அங்கு குடியமர்த்தி விடுங்கள் அப்போது முழு அமைச்சு அதிகாரமும் உங்களுக்கே கிடைத்துவிடும். பின்பு அதனை வைத்து உரிமை கொண்டாடுங்கள்.
யூ.எல்.றிபாஸ்
0 comments: