புற்று நோயால் பாதிக்கப்பட்டு நலிவடைந்து போயுள்ள உறவுகளை அன்பாக ஆதரிக்கும் முகமாக கிழக்கு மண்ணில் ஏறாவூரில் அமைக்கப் பெறவிருக்கும் புற்று நோயாளர் இல்லமானது உண்மையில் முழு கிழக்கு மக்களும் பயனைடயக் கூடியதாக அமையவிருக்கின்றது.
மற்றும் இவ் புணர் நிர்மானமானது பொது மக்களின் நிதிகளை வசூலித்து அவர்களே பயனடையக் கூடியதாக அமையவிருப்பதானது உண்மையில் ஏனைய பிரதேசங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.
இவ் கட்டிட நிர்மாண பணிக்கான நிதி திரட்டல் நிகழ்வானது முதல் முதலாக கடந்த வெள்ளிக் கிழமை அதாவது 30-12-16 மாலை முழு ஏறாவூர் பிரதேசத்தையும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
அவ் நிதி திரட்டல் பணியின் போது ஏறாவூர் மக்களிடமிருந்து சுமாராக 1250
000 ரூபாய் மட்டுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இவ் நிதி சேகரிப்புக்காக தங்களது நேர காலங்களை ஒதுக்கிய சகோதரர்கள்
ஒவ்வொருவரினதும் உழைப்பும், சிந்திய வியர்வையும் தியாக உணர்வும் ஒருபோதும் வீணாகிவிடாது அதற்கான பயனை அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.
அது மட்டுமன்றி அதற்காக தனது பொருளாதார உதவிகளை வழங்கிய சகோதர,சகோதரிகளுக்கும் பல மடங்கு நன்மை உண்டு.
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத மறுமைநாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளான்.
அதில் ஒரு பகுதியினர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தருமம் செய்பவர் ஆவார்.
சராசரியாக நீங்கள் வழங்கிய ஒவ்வொரு தொகையிலும் ஆண்டாண்டு கால மனித நேயப்பணி இடம்பெற்றுக் கொண்டே இருக்கும் என்பதை மனதில் இடை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இதே வேளை கடல் கடந்து வெளி நாடுகளில் வாழும் எம் உறவுகளின் பணி மிகவும் சிரமத்துக்கு மத்தியிலும் தொடர்ந்த வண்ணம் இருப்பது எமக்கு இன்னும் வலுவூட்டக்கூடிய அம்சமாகும்.

அந்த வகையில்,
EAQ ,நமக்காக நாம் ,UAE MAJLIS, SAUDI MAJLIS போன்றவற்றுடன் குவைத்திலுள்ள எமது சகோதரர்களும் இணைந்து பாரிய நிதி திரட்டலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களது குடும்பச் சுமைகளை சுமந்து தங்களது வாழ்வை வளமாக்க ஊரைவிட்டு உறவுகளை விட்டு நொடிப்பொழுதும் வீணாக விடாது இலட்சியத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் அடுத்தவர்களின் துயர் துடைக்க அவர்களின் சுகத்தில் அக்கறையோடு இரவு பகலாக சில நேரங்களில் கால் நடையாக அலைந்து திரிந்து நிதி சேகரிப்பதானது உண்மையில் அவர்களின் மனிதநேய தியாக உணர்வையே பரை சாற்றுகிறது.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் எமது பணிக்காக தங்களைஅர்ப்பணித்த தியாக உள்ளங்களே இன்ஷா அல்லாஹ்
விரைவில் எமது கனவு கைகூடும் நாள் வெகு விரைவில் இல்லை என்பதை மனதில் வைத்து உங்கள் மனித நேய பணிகளை
பின் தொடருங்கள்.
தகவல் = ஏரூர் இஹ்கான்
0 comments: