நேற்று(18-12-2016) நாடெங்கிலும் நடைபெற்று முடிவடைந்த 4வது இலங்கை இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியிலிருந்து போட்டியிட்ட செல்வன். JM.திபாஸ் அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.
இத்தேர்தலானது தொகுதி வாரியாக நடைபெற்றதுடன் கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் 3 தமிழ் உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவாகினர். அத்துடன் இன விகிதாசார வாக்குகள் அடிப்படையில் போனஸ் ஆசனமாகக் கிடைத்த ஒரு பிரதிநிதித்துவத்தை கல்குடா பெற்றுக்கொண்டது. இதன்மூலம் கல்குடாத் தேர்தல் தொகுதியிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர்.
காத்தான்குடியிலிருந்து போட்டியிட்ட வேட்பாளருக்கும் கல்குடா தொகுதியிலுள்ள ஓட்டமாவடி + வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து போட்டியிட்ட வேட்பாளருக்கும் கடும் போட்டி நிலவுமென எதிர்பார்த்தபோதிலும் கல்குடாத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய செல்வன். JM.திபாஸ் அதிகப்படியான வாக்குகளைப்பெற்று வெற்றியைத் தனதாக்கினார்.
அத்தோடு தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகள் ஒற்றுமையாக வேலை செய்தமையின் பலனாக கல்குடா தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் கிடைக்கப் பெற்று தமிழ்,முஸ்லிம் இன நல்லுரவையும் எடுத்துக்காட்டுகின்றது.
கல்குடா தொகுதியில் வெற்றி பெற்ற J.M.திபாஸ் முஸ்லிம்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கல்குடா தமிழ் பிரதேசத்தில் வெற்றி பெற்ற மனோகரன் சுரேஸ்காந்த் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை
0 comments: