Tuesday, December 6, 2016

அட! இதயமே இமயமா? தொடர்-5


slmc-ashraff-biography-05       
இமயம்
     
1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி.
அன்று இரவு
தனது மக்களை விட்டுப் பிரிந்து அஞ்ஞாதவாசத்தில் இருந்த தலைவனின் இல்லக் கதவினை சிலர் தட்டினார்கள்.
அவர்களின் தட்டல்; காலத்தின் அழைப்பு.
அங்கே திறந்து கொண்டன காலத்தின் கதவுகள்.
தரிசனமானதோ, காலம் வெளிப்படுத்தி நின்ற வரலாற்று நாயகன்.
அவர்தம் மக்கள் சமூகத்தின் இனி எழுதப்படப்போகும் புதிய கதைகளின் கதாநாயகன்.
தமது காணாமற்போன குழந்தையினைக் கண்டு கொண்ட அன்பான பெற்றோரின் ஆர்ப்பரிப்பான மகிழ்ச்சி; அதுகாறும் நெஞ்சத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமைகளின் வெளியேற்றம், அதனாலான சுகமான பெருமூச்சு.
அங்கே கதவைத் தட்டியவர்களுக்கு தோன்றியிருக்கும் என்பதில், இன்னுமேன் உங்களுக்குச் சந்தேகம்....?
அன்று -
'அவரும் இவரும் இல்லாமல் பேச்செதற்கு' என்றார்கள்.
இன்று -
'தொண்டர்கள் நாம் இருக்கின்றோம். தலைவர்தான்....?'
என்கிறார்களே. ஆனால்,
தலைவன் -
அவன் அன்றும் தலைவன்; இன்றும் தலைவன்;
இனிமேலும் தலைவனே!
வழிகாட்டும் தலைவன்.
அன்று -
மக்கள் தன்னை வெறுக்கிறார்களே, தூற்றுகிறார்களே என்பதற்காக மக்களைப் புறக்கணித்தானா?
இல்லவே இல்லை!
இன்னும் சத்தமாகச் சொல்லுங்கள் -
இல்லவே இல்லை!!
இன்று -
அதே மக்களை தன்னைத் தேடி - நாடி வந்துவிட்டார்களே என்பதற்காக, இறுமாந்துவிட்டானா?
இல்லவே இல்லை!
இன்னும் சத்தமாகச் சொல்லுங்கள் -
இல்லவே இல்லை!!
ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைக்கின்றார்.
இனியாவது -
'மரணம் மட்டும் துணிந்து வருவீர்களா?'
இனியாவது -
அவரது மரணம் கடந்தும் -
துணிந்து செல்வீர்களா....?
இது தலைமைத்துவம்!
உச்சியை நிமிர்ந்து பார்க்கும் எத்தனத்தில் கழுத்து வலித்துப் போகிறதே; இமயம்!
இது காலக்கட்டுமானத்தினாலான கற்பாறையொன்றின் இமயமல்ல. மக்கள் சமூகம் ஒன்றின் கட்டுமானத்தினாலான இதயம் ஒன்றின் இமயம்.
அட! இதயமே இமயமா?
அதிலென்ன சந்தேகம்!
         தொடரும்....
எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
      ஓட்டமாவடி (கல்குடா)
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்.....)

SHARE THIS

0 comments: