வை.எம்.பைரூஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக அரசியல் முகவரி பெற்று அரசியலுக்குள் தரிசித்த கௌரவ அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்கள், கட்சியின் தலைமையின் மீது கொண்ட சில கருத்து முரண்பாடுகளால் வேண்டத்தகாத பழிகளைக்கூறி கட்சியை விட்டு விலகிச் சென்றார்.
கட்சியை விட்டு விலகிச்சென்றது மாத்திரமின்றி, கட்சியையும் தலைமையையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற நோக்கில் அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்கள், கடந்த காலந்தொட்டு சில ஊடகங்களை விலைக்கு வாங்கி, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாக, இல்லாத பொல்லாதவைகளை தலைமையின் மீது கட்டவிழ்த்து வருவதை நாம் கண்கூடாகக்கண்டு வருகிறோம்.
இது ஒரு புறமிருக்க, நேற்று 3ம் திகதி நடந்த பாராளுமன்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிசாத் அவர்கள் பேசுகையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய செய்தியை அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இயக்கப்படும் இணையத்தளம் திரிவுபடுத்தி, தன் மீது அபாண்டமான பழி சுமத்தியுள்ளதாக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை. ஆனால், இங்கு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தன் மீது சுமத்திய குற்றத்துக்காக தனது முறைப்பாட்டை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமோ அல்லது கட்சியின் முக்கியஸ்தர்களிடமோ எடுத்துக்கூறி, அதற்கு சுமூகமான வழியைத்தேடுவதை விட்டு, அதனை பாராளுமன்றம் வரை எடுத்துச்சென்றிருப்பது இவரின் முதிர்ச்சியற்ற அரசியலைப் பிரதிபலிக்கின்றது.
எவ்வாறாயினும், கடந்த சில காலங்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீதான சில வதந்தியான செய்திகளும் சில ஊடகங்களில் வெளி வந்த வண்ணமேயுள்ளன. இதனை அமைச்சர் றிசாத்தின் சில ஆதாரவாளர்களே திரிவுபடுத்தி, கட்டவிழ்த்து விடுகின்றனர் என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.
உண்மையில் அமைச்சர் றிசாத் மீதான வெளிச்சம் இணையத்தளம் வெளியிட்ட செய்தி றிசாத்தின் மீதுள்ள கட்சிப் பகைமையினால் வெளியிட்டிருந்தது என்று கூறினாலும், அதனை அமைச்சர் றிசாத் பாராளுமன்றம் வரை கொண்டு சென்றிருப்பது இவரின் கையாலாகாத தனத்தையே வெளிக்காட்டுகின்றது.
உண்மையான மக்களின் தலைவன் என்பவன் இவ்வாறு தன் மீது வரும் விமர்சனங்களுக்கு பயப்பட்டு, அதனை பொறுப்பு வாய்ந்த அமைச்சிலிருந்து கொண்டு, அதனைப்பாராளுமன்றம் வரை கொண்டு சென்றிருக்கமாட்டான் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
அமைச்சர் றிசாத் அவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களின் கட்சியின் செயளாலர் YLS.ஹமீட் அவர்கள் உங்கள் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். அதற்கெல்லாம் பதிலளிக்க திராணியற்ற நீங்கள், எவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கிமீன் மீதும் அவரினால் இயக்கப்படும் என்று நீங்கள் கூறும் SLMC VELICHEM இணையத்தளம் மீதும் பழி போடுவீர்கள்?
நீங்கள் அவசரப்பட்டு இதனை வெளியிட்டிருப்பது, நீங்கள் செய்த குற்றத்தை மறைப்பதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமே தற்போது அநேகரிடத்தில் கிழம்பியுள்ளது.
இனி வருங்காலங்களிலாவது தேசியத்தலைவன் என்று கூறித்திரியும் நீங்கள், இவ்வாறான சிறு பிள்ளைத்தனமான முறைப்பாடுகளை விட்டு விட்டு, உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளியுங்கள்.
0 comments: