Monday, December 12, 2016

ஏன் கல்குடா தொகுதி முஸ்லிம்கள் மீது ரவூப் ஹக்கீமுக்கு இந்த வெறுப்பு.....!!!

ஏன் கல்குடா தொகுதி முஸ்லிம்கள் மீது ரவூப் ஹக்கீமுக்கு இந்த வெறுப்பு.....!!!யூ.எல்.றிபாஸ்
பிறைந்துறைச்சேனை


மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதான ஊர்களில் கல்குடா தொகுதி அதிகலவான முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தமட்டில் கல்குடா தொகுதியில் உள்ள ஆதரவாளர்களின் வாக்குகளாலேயே மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அஷ்ரப் காலம் தொட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மட்டக்களப்பை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய பிரதேசங்களுக்கு கொடுக்கும் அதீத  அக்கறை கல்குடா  பிரதேசங்களுக்கு வழங்குவதில்லை என்பதை நானும் நீங்களும் கடந்த சில காலம் தொட்டு கண்டு வருகிறோம்.

அதாவது தலைவர் அஷ்ரப் காலத்தில் சுழற்சி முறையில் பாராளுமன்ற பிரதிநிதி என்ற வாக்குறுதி மீரப்பட்டது.அது அன்றைய சூழ் நிலையில் தலைவரிடம் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய வாக்குறுதியை மீறியதால் இந்த நிலமை ஏற்பட்டது. ஆனால் இன்றும் தலைவர் ரவூப் ஹக்கிம் காலத்திலும் கல்குடா தொகுதி புறக்கணிக்கப் படுவதன் மர்மம்தான் என்ன???? 


தலைவர் ரவூப் ஹக்கிமை பொறுத்தவரை ஏறாவூருக்கு அவர் தலைமையை பொறுப்பெடுத்தது முதல் இன்று வரை தொடராக அரசியல் அதிகாரம் வழங்குவதில் பாரிய பிரயத்தனத்தை மேற் கொண்டு வருகிறார். ஏறாவூருக்கு பல முறை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பிரதி அமைச்சி பின்னர் முழு அமைச்சு மற்றும் மாகாண சபை உறுப்பினர் அத்துடன் மாகாண அமைச்சு ஈற்றில் முதலமைச்சு இவ்வாறு ஏறாவூரில் தன் கட்சி சார்பாக போட்டியிடும் வேற்பாளர்களை வெற்றி பெறச் செய்வதில் ஏனைய பிரதேச வாக்குகளை அந்த பிரதிநிதிக்கு பெற்றுக் கொடுக்க தலைவரே நேரடியாக களம் இறங்கி செயற்படும் விதங்களை கடந்த காலங்களில் கண்ட அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும். 


ஏன் கல்குடா தொகுதி முஸ்லிம்கள் மீது ரவூப் ஹக்கீமுக்கு இந்த வெறுப்பு.....!!!
இவ்வாறு அரசியல் அதிகாரங்களை தொடராக ஏறாவூர் மக்களுக்கு வழங்கினாலும் இதில் அந்த மக்கள் கண்ட பலன் ஏதுமில்லை ஆனால் கட்சி அங்கு அதிகளவான வாக்குளை பெறுவதும் இல்லை இதனாலேயே அலிசாஹிர் மௌலானாவை உள்வாங்கும் நிலைக்கு கட்சி தள்ளப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை. 


இவ்வாறான அதிகாரங்கள் செயற்பட்ட போதும் தலைவர் தனது அமைச்சின் ஊடாகவும் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏறாவூரை மையம்படுத்தி நிதிகளை ஒதுக்கியுள்ளார் என்பதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக பார்க்கலாம். 


இவ்வாறு காத்தான் குடியை பொறுத்தளவில் முதலாவது முஸ்லிம் காங்கிரஸ் 
 பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட பிரதேசம் ஆகும். அங்கு ஹிஸ்புல்லாஹ் கட்சி மாறினாலும் தலைவரால் தொடர்த்து ஏதாவது வழிகளின் ஊடாக அரசியல் அதிகாரங்களை பயன்படுத்துமளவுக்கு அதிகாரங்கள் தொடராக வழங்கப்பட்டு வருகிறது. 

அதாவது ரவூப் ஹக்கிம் அவர் தனது அமைச்சின் இணைப்பு செயலாளராக கடந்த முறை சல்மா ஹம்சா நியமிக்கப்பட்டு இருந்தார்.மற்றும் முபீன் இவர் தற்போதும் இணைப்பு செயலாளராக அமைச்சரின் அமைச்சில் இருந்து வருகிறார் இவர் பஸீர் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாகவும் செயற்பட்டு வந்தவர்.  


அது மாத்திரமின்றி கட்சியுடன் அண்மையில் இணைந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களும் அங்கு  கட்சியில்  இருந்து கொண்டு மாகாண சபையூடாக பல்வேறு நிதிகளை கொண்டுவந்து அபிவிருத்திகளை மேற் கொள்கிறார். அவ்வாறு இருக்கத் தக்கதாக தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களும் முபீன் அவர்களின் ஊடாக பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்து கொடுத்து அதனை அன்மையில் முபீன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததை எல்லோரும் அறிவார்கள். 



இவ்வாறு தலைவரின் கரிசனை காத்தான் குடிமீது காட்டப்படுவது பாராட்டப்படவேண்டிய ஒன்றாக இருந்தாலும் கட்சி பெறும் வாக்குகளை பொறுத்தமட்டில் குறைவுதான் இதனாலேயே நல்லாட்சிக்கான மக்கள் முன்னனியை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தலைவர் கட்சிக்குள் உள்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இவைகள் இவ்வாறு இருக்க மேற் சொன்ன பிரகாரம் இரு ஊர்களும் கட்சியாலும் கட்சி தலைமையாலும் கவணிக்கப் பட கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசம் அன்று முதல் இன்று வரை புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான காரணம் என்ன?????



மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிரை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்வதில் எந்த வித எதிர்பார்ப்பும் சுயநலனும் இல்லாமல் எந்த வேற்பாளரை ஊரில் கட்சி தலைமை போட்டிருக்கார் என்று கூடா கருத்தில் கொள்ளது அன்று முதல் இன்று வரை தொடராக ஒரு கூட்டம் வாக்களித்து வருகிறதே இந்த கூட்டத்துற்கு கட்சியும் கட்சி தலைமையும் செய்த கைமாறுதான் என்ன????



கடந்த காலங்களில் கட்சி ஊடாக எவ்வித அரசியல் அதிகாரமும் இன்றி பல அடக்குமுறைக்கு மத்தியில் தலைவர் சொன்னார் என்பதற்காக கட்சிக்கு சவாலாக இருந்த அமீர் அலியை தோற்கடித்து அரசியல் அநாதையாக இருந்த சமூகத்திற்கு உங்களின் ஊடாக வழங்கப் பட்ட அதிகாரம் என்ன??? 


அரசியல் அதிகாரம்தான் வழங்க முடியாது போனாலும் ஏனைய பிரதேசத்திற்கு உங்கள் அமைச்சின் ஊடாக
வழங்கப் பட்ட அதிகாரம் ஏன் கல்குடா மக்களுக்கு நீங்கள் வழங்கவில்லை.....?கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மீது தலைமைக்கு ஏன் இந்த வெறுப்பு எதற்காக எங்களை பழிவாங்க துடிக்கிறீர்கள். கால காலமாக இந்த கட்சிக்கு வாக்களிப்பது தவரா அதனால்தானா எங்களை நீங்கள் பழிவாங்குகின்றீர்கள்....??



ஏனைய பிரதேசங்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையை கல்குடா மக்கள் மீது காட்டமறுப்பது தொகுதி முறை தேர்தல் வந்தால் இந்த தொகுதி முஸ்லிம்களின் கட்சி பிரதிநிதித்துவத்தை பெறமுடியாது என்பதற்காகவா??? அப்போது வாக்குகளுக்காகதான் நாங்கள் இந்த கட்சிக்கு தேவைப்பட்டோமா???????
எங்கள் உணர்வுகளுக்கு தலைமை மதிப்பளிக்காதா?????
எல்லா பிரதேசங்களுக்கும் கட்சிக்கு கணிசமான வாக்குகள் இல்லாத பிரதேசங்களுக்கும் கட்சி அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் உங்கள் அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்து வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்த உங்களுக்கு கட்சிக்காக தொடர்ந்து வாக்களிக்கும் பிற அதிகாரங்களுக்கு பின்னால் கட்சி மாறி செல்லாது மாவட்ட ஆசனத்தை பாதுகாப்பதில் அதிக பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் போராளிகள் உள்ள பிரதேசமான கல்குடாவில் எவ் வித அதிகாரங்களையும் கட்சி ஊடாக இல்லாத போதும் கல்குடாவுக்கு எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் தாங்கள் இதுவரை செய்யாது புறக்கணிப்பதன் நியாயம்தான் என்ன????  


இதனையும் யார் மீது பழியாக போடப்போரிங்கள் தலைவரே..!!!
இவ்வாரே ஒவ்வொறு முறையும் இவ்வாரான தவருகளை விட்டுவிட்டு மற்றவர்களின் மீது பழியைப் போட்டு தப்பிக்க முற்படுவது தலைமைத்துவத்திற்கு அழகில்லை. பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வை தேட முற்படாதீர்கள் பின்னர் அதில் மாட்டிக் கொள்வீர்கள் பல நெருக்கடிகளையும் எதிர் கொள்ளவேண்டிவரும் என்பதையும் கவனத்தில் கொண்டு இவ்வாறான கேள்விகளுக்கு சிறந்த பதிலை உங்களின் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் ஊடாக பதிலை எதிர்பார்கிறோம்.  


இறைவன் யாவையும் மிக்க நன்கு அறிந்தவன்! அவனின் பிடி மிகக் கடினமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.





SHARE THIS

Author:

0 comments: