Friday, December 9, 2016

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உரையும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டியவையும்...!!!

 M. L. A. M. Hizbullah, M.P.வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை 

நேற்று அதாவது 08-12-16 நடந்த பாராளுமன்ற பொதுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹிஸ்புல்லாஹ் அவர்கள்    இனவாதத்துக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு சார்பாகவும் ஒரு காரசாரமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளது  உண்மையில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் பாராட்டத்தக்க விடயமாகும்.
இராஜாங்க அமைச்சரின் உரையின் சாராம்சம் என்னவென்றால் அன்று இவ் நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் உழைத்த முஸ்லிம்கள்  பலர் இன்று நல்லாட்சியில் அதிருப்தி அடைந்துள்ளதே ஆகும்.
மேலும் அவர் அங்கு எவ்வாறு பேசியிருந்தார் என்றால் எங்களின் அல்லாஹ்வையும்,அல்குர் ஆனையும் சில இனவாத அமைப்புகள் வெற்று குற்றங்களை சுமத்தி கொச்சை படுத்தி வருவதாகவும்  அதனை செய்பவர்களை  அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருவதாகவும் இது தொடருமேயாக இருந்தால் எமது முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாத சூழ்நிலையே ஏற்படும் என்றும் அதனை ஒழிக்க இவ் அரசாங்கத்துக்கு ஐம்பது,அறுபது வருடங்களும் போதாது என்றும் கூறியுள்ளார்.
உண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பேச்சானது தற்போது முஸ்லிம்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை இங்கு யாரும் மறுதலிக்க முடியாது. ஏனெனில் இவ் நல்லாட்ச்சி அரசாங்கத்தின் வெற்றிக்காக  அயராது உழைத்த பெரும்பான்மை கட்சிகளின்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இருக்கத்தக்க இவ் நல்லாட்சியின் வெற்றியின் எந்த வீத பங்குமில்லாத அதே நல்லாட்சி அரசாங்கத்தின்  பெரும் பான்மை கட்சியின்  தேசிய பட்டியலினூடாக பாராளுமன்றம் சென்றிருக்கின்ற இரஜாங்க அமைச்சர் இவ்வாறு பேசுவதென்பது உண்மையில் பெருமைப் பட வேண்டிய விடயமாகும்.
இங்கு முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இராஜங்காஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவ்வுரையில்  பேசும்  போது முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என வெளிப்படையாக பேசியுள்ளதாவது உண்மையில் அதன் தாத்பரியம் எம்மவர்களுக்கு பெறிதாக தென்படா  விட்டாலும் பெரும் பான்மை இனத்தவர்களுக்கும்,குறிப்பாக இனவாதத்தை தூண்டி வருகின்ற பொதுபலசேன,சிங்ஹலோ போன்ற அமைப்புக்களுக்கும்  அது  ஒரு சாதகமாக அமையக் கூடும்.
ஏனெனில் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என்றால் அவர்களிடம் எங்கிருந்து ஆயுதம் வந்தது என்ற கேள்வியே மறு கணம் அவர்களை தட்டி எழுப்ப கூடியதாக இருக்கும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.குறிப்பாக இதனை முஸ்லிம்கள் என்ற போர்வையில் உலகளாவிய ரீதியில் இருக்கின்ற தீவிர வாத அமைப்புக்களோடே எம் நாட்டு முஸ்லிம்களை சம்பந்தபடுத்தி இவர்கள் பேசுக் கூடும்.
நாங்கள் ஒன்றை தெறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் முஸ்லிம்களின் உரிமை சம்பந்தமாகவோ,அவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவோ பாராளுமன்றத்தில் வெளிப்படையாக  பேசக் கூடிய உரிமை உள்ளது ஆனால் அதனை எமது சில முஸ்லிம்கள் உறுப்பினர்கள் பொருட்படுத்துவதில்லை என்பதே கவலைக்குறிய விடயமாகும்.
அந்த வகையில் ஹிஸ்புல்லாஹ் பேசியது ஒன்றும் சாதனையில்லை என்றாலும் அவர் இங்கு பேசியது ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு படிப்பினையே ஆகும்.
இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசிய அதே உரையை ஒரு தனி மனிதனோ, ஏனைய கொள்கை சார்ந்த அமைப்புக்கள் சாரந்தவர்களோ பகிரங்கமாக மேடை போட்டு ஊடங்களில் வெளிவரும் அளவுக்கு பேசியிருந்தால்  அவருக்கு எதிராக இவ் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அவற்றுக்கு எதிராக இனவாத அமைப்புகள் பேசியவரை கைது செய்து சிரையில் அடைக்கும் வரை போராட்டம் நடத்திவிருக்கும் என்பதை கடந்த கால நிகழ்வுகளே  எமக்கு பறை சாற்றுகின்றன.
குறிப்பாக இங்கு கூற வேண்டிய விடயம் என்ன வென்றால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு பேசுகையில முஸ்லிம்களின் மூச்சே இஸ்லாம் மா்க்கம் தான் என்றும் குர் ஆனே அவர்களின் வாழ்க்கையென்றும்
தெட்டத் தெளிவாக அந்திய ஆட்சியாளர்களின் சபையில் கூறியிருப்பது அவரின் தைரியத்தை எமக்கு ஊக்கு விப்பதாக தெறிந்தாலும் கூட அவர் அங்கு முஸ்லிம்கள் இந் நாட்டை  தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கின்றார்கள் என்று கூறியிருப்பது எமது மார்க்கத்துக்கு அவ்வளவு உகந்தல்ல என்பதனையும் அது பாரிய குற்றம் என்பதனையும் நாம் புரிந்து கொள்வதோடு அதனை கௌரவ இராஜாங்க அமைச்சருக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
எவ்வாறாயினும் பெரும் பான்மை மக்கள் செழிந்து வாழ்கின்ற எம் நாட்டில் எமது மார்க்கத்தையோ, எங்கள் இறைவனையோ,எமது இறை வேதத்தையோ கொச்சைப்படுத்தும் போதோ  எமது உரிமைகள் பறிக்கப்படும் போதோ அதனை ஆயுதம் ஏந்தித்தான் நாம் பெற வேண்டும் என்றல்ல.
அதனை பலம் வாய்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ,அல்லது அதே அமைச்சர்கள் அனைவரும் ஒன்றினைந்து சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுப்பதினுடாகவோ எமது அரசாங்கத்தினலயே அதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதே எனது அபிப்பிரயமாகும்.

SHARE THIS

0 comments: