ஹிரா-2
ஓர் இனிய காலைப்பொழுதில் சந்திக்கின்றோம்.
காலைப் பொழுது சுகமானது சுபமானது
ஓர் இதமான சங்கீதத்தின் லயம் மிக்கது.
ஓர் இதமான சங்கீதத்தின் லயம் மிக்கது.
அன்றாடக் கடன்களை முடிக்கும் அவசரம்;
தொழிலுக்கான ஆயத்தம்;
அன்றைய பொழுதை எதிர்கொள்ளும் ஆரம்பம்; ஆனந்தம்.
தொழிலுக்கான ஆயத்தம்;
அன்றைய பொழுதை எதிர்கொள்ளும் ஆரம்பம்; ஆனந்தம்.
மாணவ மாணவியர் பாடசாலை செல்லவும் பூஞ்செடிகளில் புதிய மலர்களும், வண்ணக் குரோட்டன்களின் பசிய தளிர்களும் வெளிப்போந்திருக்குமான காலைப் பொழுதுகளில் இதுவும் ஒன்று.
இவைகளைத் தாண்டி,
ஒரு வீட்டின் முன்னே வந்து நிற்கின்றோம்.
ஒரு வீட்டின் முன்னே வந்து நிற்கின்றோம்.
அம்மன் கோயில் வீதி!
கேட்டின் தூணொன்றில் பிளாஸ்டிக் எழுத்துக்களில் பதியப்பட்டு 'பளிச்' சென்று தெரிவது இல்லத்தின் பெயர்.
'ஹிரா'
மக்கள் தத்தமது இல்லங்களுக்கு பெயர் சூட்டிச் சிறப்பிப்பது வழக்கம்;
பண்பாடு; ஓர் வாழ்வியல்.
பண்பாடு; ஓர் வாழ்வியல்.
ரசனைக்கேற்ப ஒவ்வோர் மாதிரியாக பெயர் சூட்டிக் கொள்வார்கள்.
இதில் எத்தனை அர்த்தமுள்ளதாக இருக்கின்றன?
அஷ்ரஃப் தமது இல்லத்திற்கு சூட்டியிருந்த பெயர் 'ஹிரா'.
ஹிரா நபிகள் நாயகம் தியானம் செய்யும் குகை.
அண்ணலுக்கு 'நபி' பட்டம் கிடைத்த இல்லம்.
உலகுக்கே பொதுவான திருமறை இறங்கிய இடம்.
அண்ணலுக்கு 'நபி' பட்டம் கிடைத்த இல்லம்.
உலகுக்கே பொதுவான திருமறை இறங்கிய இடம்.
ஹிரா எனும் இந்த இல்லத்திலிருந்துதான் -
'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அடித்தளம் இடப்பட்டது.
கட்சியின் பல கூட்டங்கள் நடந்திருக்கின்றன.
'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அடித்தளம் இடப்பட்டது.
கட்சியின் பல கூட்டங்கள் நடந்திருக்கின்றன.
தமிழ் தலைவர்களுடனான பல்வேறு பேச்சுவார்த்தைகளும் நடாத்தப்பட்டன.
பல்வேறு வகைப்பட்டோர் வந்திருக்கிறார்கள்;
பேசியிருக்கிறார்கள்;
சிரித்திரிக்கிறார்கள்;
சிந்தித்திருக்கிறார்கள்;
தேனீர் குடித்திருக்கிறார்கள்;
கூடிக் குலாவியிருக்கிறார்கள்;
பல்வகைக் கருத்துக்களுக்கும் முகம் கொடுத்திருக்கிறார்கள்;
முரண்பட்டதால் முகம் சுளித்துமிருக்கிறார்கள்.
பல்வேறு வகைப்பட்டோர் வந்திருக்கிறார்கள்;
பேசியிருக்கிறார்கள்;
சிரித்திரிக்கிறார்கள்;
சிந்தித்திருக்கிறார்கள்;
தேனீர் குடித்திருக்கிறார்கள்;
கூடிக் குலாவியிருக்கிறார்கள்;
பல்வகைக் கருத்துக்களுக்கும் முகம் கொடுத்திருக்கிறார்கள்;
முரண்பட்டதால் முகம் சுளித்துமிருக்கிறார்கள்.
ஹிரா அஷ்ரஃப் அவர்களின்
கலைக் கூடம்
பொதுச் சபை
பொதுச் சபை
அவரது கனவுகளின் சாம்ராஜ்யம்.
தொடரும்
தொடரும்
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் நூலில் இருந்து)
எம்.என்.எம்.யஸீர் அறபாத்
ஓட்டமாவடி கல்குடா
ஓட்டமாவடி கல்குடா
0 comments: