Sunday, November 20, 2016

மர்ஹூம் அஷ்ரஃப்புக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது (தொடர்-03)

slmc ashraf
கருக்கல்
       ===========
கருக்கல்! மாலைக்கும் இரவுக்கும் இரவுக்கும் காலைக்குமான இடைத்தரகன்
கருக்கல் இல்லாமல் இரவு இல்லை பொழுது விடியாது
இதனுடைய பணிாசில கணங்களேயானாலும் கனதியானது
சமூகத்தை சூழவிருக்கும் இருட்டின் கனதி விளங்கியவராக அஷ்ரஃப் சோகத்தின் பிடியில் இறுகியிருந்தார்
என்ன இத்தனை சோகம்?
பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை என்றார் அஷ்ரஃப்
அவரின் குரலில் சலித்துப் போன வெறுப்பின் சாயல்.
"ஏன்? என்ன விடயம்?"
"சொல்ல வேண்டாம் என்று நினைக்கின்றேன்"
"அப்படி என்னதான் முடிவோ?"
"ஊரைவிட்டுக் கிளம்புவதுதான் முடிவு!"
"என்ன...!
"ஓம்! நான் கம்பளைக்குப் பயணம். அதுவும் இன்றிரவே..."
"ஆனா....?"
"ஆனா, ஆவன்னா என்ற பேச்சுக்கே இடமில்லை. பயணம் முடிவானது தயவுசெய்து இது யாருக்கும் தெரிய வேண்டாம்.
முக்கியமாக வாப்பா உம்மாவுக்கு..."
"நான் சொல்ல வந்தது அதுவல்ல....
உங்களுடைய வாப்பா சொல்லச் சொன்ன விடயம் ஒன்றிருக்கிறது. உங்களை மருதமுனைக்குப் போகச் சொன்னார். இல்லாட்டி கல்முனைக்குடிக்கு வரச்சொன்னார்....."
"இல்ல... இல்ல... நான் விடிய பயண....."
வார்த்தைகளை முடிக்கும் முன்பதாக அஷ்ரஃப்புக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது.
நீண்ட காலப் பழக்கம்; இருவரிடையே இருந்த நெருக்கம்; மருதூர்க்கனியையும் கனிய வைத்தது.
அஷ்ரஃப் நிதானித்தார்.
"எனக்கொரு உதவி செய்யுங்கள்....."
"கட்சியின் ஆவணங்களைப் பத்திரப்படுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்தச் சமூகமாக உணரும் வரை பணிகளை ஒத்திவைக்கத்தான் வேண்டும்."
அஷ்ரஃப் உள்ளே சென்றார். இரு கைகளும் சுமந்த தஸ்தாவேஜுகளுடன் திரும்பி வந்தார். மருதூர்க்கனியிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தக் கட்சி சம்பந்தப்பட்ட விபரங்கள்தான், ஒரு சன்லைட் பெட்டிக்குள் அடைக்கலமாகி,
பின்னர் -
ஹசனலி, இஸ்மாயில் என்பவர்களின் ஆர்வத்தில் பெட்டி திறக்கப்பட்டு.... -
அஷ்ரப் சகாப்த ஆரம்ப மைல்கல் நடப்பட்டது.
அஷ்ரஃப் அவர்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சிப் போக்குகள் அது கொண்டிருந்த நெருக்கடியான அம்சங்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள்
இந்த முடிவுகள்தான் அவரது வாழ்க்கை வளர்ச்சிப் படிகளா?
               தொடரும்.....
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் எனும் நூலிலிருந்து)
எம்.என்.எம்.யஸீர் அறபாத்
கல்குடா

SHARE THIS

Author:

0 comments: