ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த 19 ம் திகதி கத்தாருக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார்.
இவ் விஜயத்தின் போது கத்தார் நாட்டின் தோஹா வங்கி ஏற்பாடு செய்து இருந்த இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு செயலமர்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கத்தாரிலுள்ள ஏனைய இலங்கை தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
அது மட்டு மன்றி கத்தார் நாட்டில் வீசா இன்றி வேலை வாய்ப்புக்கள இல்லாமல் அல்லலுறும் இலங்கைப் பெண்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்கள் அப் பெண்களை நாட்டு அனுப்ப துரித நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அவரின் விஜயத்தின் இறுதி நிகழ்வாகவே கத்தார் நாட்டிலுள்ள இலங்கை அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த ஓர் நிகழ்வு கத்தாரின்தலை நகரம் தோகாவிலுள்ள பனார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இவ் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம கால அரசியல் சூழ் நிலை சம்பந்நதமாக விரிவான உரை ஒன்றை நடத்தியதோடு இதில் கத்தார் வாழ் இலங்கையர்கள் அநேகரும் கலந்து கொண்டார்.
இவ்வுரையில் பேசும் போதேு தற்போது கை செய்து செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பினது பொதுச் செயலாளரும், பொது பல சேனாவினது எஜமானர்கள்களும் ஒரே இடத்தில் இருந்து செயற்படுகின்றார்களா என்ற கேள்வியை அமைச்சர் ரவூப் ஹக்கீம் எழுப்பியதாக சில எழுத்தார்கள் திரிவு படுத்தி சில செய்திகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
உண்மையில் அவர் அங்கு பேசுகையில் அண்மையில் கொழும்பில் கைது செய்யப்பட்ட ஒரு அமைப்பை சேர்ந்தவர் தொடர்பான விடயம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் அந்த இயக்கம் நல்ல நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஈடுபடுகின்ற இயக்கமாக இருந்தாலும் கூட அதன் செயற்பாடுகள், வார்த்தை பிரயோகங்கள் தேவையான விடயத்தை தேவையான நேரத்தில் செய்யாமால் நாட்டின் குழப்பகரமான ஒரு நேரத்தில் அவர்களும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பக்குவமில்லாமல் ஈடுபடும் போது இன்னும் மக்களிடத்தில் பதட்டத்தை அதிகறிக்க வைக்கும் போது மாற்று மத தீவிரவாத குழுக்களை சீண்டி விடுகின்ற விடயமாகவே இது தென்படுகின்றது.
இந்த இரு குழுக்களின் எஜமானர்கள் ஒரே இடத்தில் இருந்து செயற்படுகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுகின்ற பாங்கிலே தான் இவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன என்றுதான் கூறியிருந்தார் ஆனால் அவர் அங்கு மறைமுகமாக ஜமாத்தினரை த்தான் சுட்டிக் காட்டியிருந்தாலும் அவர் அதனை உறுதி பட கூறவில்லை
அமைச்சர் ஹக்கீமின் பேச்சின் இறுதியில் பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகளும் தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடுகளும் ஒரே வகையில் அமைந்துள்ளன என கூறியதன் மூலம் அவர் இரு அமைப்புகளையும் சரி சமமாக பார்கின்ற விடயத்தை அறிந்து கொள்ளலாம்.பொது பல சேனா தெளிவான இனவாதத்தை கக்கும் ஒரு அமைப்பு.அந்த அமைப்பின் செயற்பாடுகளோடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயற்பாடுகளை ஒப்பிடுவதை எக் காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது.இன்று தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த சகோதரர் ராசிக்கின் கைது அநியாயமாகவே பார்க்கப்படுகிறது.மு.காவை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ராஹ்மான் ஆகியோர் இதனை பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.இப்படி இருக்கையில் அமைச்சர் ஹக்கீமின் இப் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
0 comments: