(தொடர்-04)
புதிய வெளிச்சம்
=======================
'ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப சந்தோஷப்படுகின்றான் அல்லது வேதனைப்படுகின்றான் என்ற கூற்றின் போக்கில்
=======================
'ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப சந்தோஷப்படுகின்றான் அல்லது வேதனைப்படுகின்றான் என்ற கூற்றின் போக்கில்
அஷ்ரஃப் தனது முடிவுகளால் எத்தகைய அனுபவங்களுக்கு ஆளானார் என்பது தெரியாது போனாலும்
அவர் நிச்சயமாக தனது சொந்த முடிவுகளால் தனது வாழ்க்கையின் போக்குகளை தானே மாற்றிக் கொண்டார் என்பது மட்டும் திண்ணம்
கல்வியின் நிலைப்பாட்டில் அவர் எடுத்த முடிவு
எப்படியாவது நான் பரீட்சை எழுதுவன் தயவு செய்து என்னைத் தடுக்க வேண்டாம் எனக்கொரு சந்தர்ப்பம் கொடுங்கள்
சாரன் வியாபாரத்தின் போது சைக்கிள் ரிப்பேர்காரனின் பேச்சுக்கு செவி சாய்த்து
பிஸினஸ் மேன் ஆவதெல்லாம் நமக்கு வேண்டாம். கல்வியைத் தொடர வேண்டும்
வாழ்க்கையின் தொழில்சார் அம்சம் எதுவென்ற எண்ணத்தில்
'நான் சட்டத்தரணியாகத்தான் தொழில் செய்ய வேண்டும்'
சட்டக்கல்லூரிக்குள் நுழைந்த போது
இனியாவது நான் படிக்க வேண்டும்
அஷ்ரஃப் பல்வேறு ஸ்தாபனங்களிலும், கட்சிகளிலும் உறவு கொண்டிருந்திருக்கிறார் அவற்றுக்கென இரவு பகலாக உழைத்துமிருக்கிறார்
ஆனால், முடிவு....!
நம் சமூகத்திற்கென்று தனியானதோர் ஸ்தாபனம் கட்சி உருவாக்கப்பட வேண்டும்
தனது சமூகத்துக்கு இருள் சூழும் அந்த அந்திக் கருக்கலில் அவர் எடுத்த முடிவு
சரியானது என்பது நிரூபிக்கப்பட்டது!
அதோ!
அந்தக் கருக்கலின் கனிந்த இருள் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. இன்னும் சில கணத்தில் அது நம்மை விட்டுப் பிரியப் போகிறது
அப்போது, தோன்றப் போவது
புதிய வெளிச்சம்
தொடரும்.......!
எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
ஓட்டமாவடி
ஓட்டமாவடி
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் நூலிலிருந்து)
0 comments: