Thursday, July 21, 2016

தமிழ் தேசியத்தின் தலைமையால் கௌரவிக்கப்பட்ட முஸ்லிம் தேசியத்தின் தலைமை.


(எம்.என்.எம்.யஸீர் அறபாத்)
யாழ்ப்பாணத்தில் நேற்று (19) நடைபெற்ற தமிழர் விடுதலை கூட்டமைப்பின் முன்னாள் காலம் சென்ற தலைவர் எம்.சிவசிதம்பரம் அவர்களின் 93 பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் வைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்களினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்,முஸ்லிம் காங்ரஸின் தலைவர்,நகர திட்டமிடல்,நீர்வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

இது போன்ற நிகழ்வுகள் கிழக்கின் எழுச்சி, தன்னை தானே தேசிய தலைவராக பிரகடனம் செய்தவர்கள், கட்சிக்குள் இருந்து குழிபறிக்க  திட்டம் தீட்டுபவர்கள், தலைமையை மாற்ற வேண்டும் என வேற்று கோசங்களை எழுப்புவர்களுக்கு இந்த முஸ்லிம் காங்ரஸின் தலைமையின் ஆளுமையை சர்வதேசம்,தேசியம் என்று எல்லோரும் ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதை பல நிகழ்வுகள் ஊடாக நிருபிக்கலாம்.

இவ்வான வேற்று கோசங்களை எழுப்புவர்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதையும் இந்த சமூக போராட்டத்தில் தலைமையின் கரத்தை பலப்படுத்த இளைஞர்களும் அணிதிரண்டு இருக்கிறார்கள் என்பதையும்  பல சதிகளை முறியடித்த தலைவரும் அவருக்கு பக்க பலமாக இருக்கின்றே போராளிகளும் இறைவன் உதவி கொண்டு தற்போது எழுந்திருக்கும் அத்தனை சதிகளையும் முறியடிப்பார்கள்.


SHARE THIS

Author:

0 comments: