Friday, January 1, 2016

As-Zafar ஒன்றியத்தின் முழுமையான ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.






As-Zafar ஒன்றியத்தின் முழுமையான ஏற்பாட்டில்
மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல், மீராவோடை "அல்-ஹிதாயா  மஹா வித்தியாலய" உயர்தர மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை வழங்கலும், "பாரத பிரதீபா" விருது பெற்ற ஆசிரியரை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கும்.
மேற்படி நிகழ்வானது அல்-ஹிதாயா மஹா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் 2015.12.25 ம் திகதி பிற்பகல் 03:30 மணியலவில் ஆரம்பிக்கப்பட்டு  இரவு 7:30 மணியளவில் நிறைவுக்கு வந்த இந்நிகழ்வில்
உதவிக் கல்வி பணிப்பாளர் (முன்பள்ளி) எச்.எம்.ஜெமிலுன் நிஷா, மௌலவி யு.எல்.எம்.இல்லியாஸ் (ஷர்கி),எச்.எம். பாகிர் (பொருளியல் விரிவுரையாளர்)  எஸ்.எ.அன்வர் ஆசிரியர், மற்றும் ஐ.எம். றிஸ்வின் (செயலாளர் அல்-கிம்மா அமைப்பு) மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், நிதியுதவி வழங்கியோர்,சமூக நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பல்வேறுபட்டவர்கள் கலந்துகொண்டு பாரிய இடையூருக்கு மத்தியிலும்  மிகப்பிரம்மான்டமாக இடம்பெற்றது .  இந்நிகழ்வானது "கிராத்"ஓதி ஆரம்பம் செய்யப்பட்டு தலைவரின் உரையும் அதனை தொடர்ந்து இந்நிகழ்வுக்கு வருகை தந்த சிறப்பாளிகளின் உரையும் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணக்கையளிப்பு,  கௌரவிப்ப நிகழ்வு,  உயர்தர பிரிவு மாணவர்களுக்கான வாசிகசாலைப்பிரிவு அறிமுகம் மற்றும் கருத்தரங்கு ஆகியன சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகல்வில் அஸ்-ஷபர் ஒன்றியம் எதிர்காலத்தில் மிகச்சிறந்த நிலையை நோக்கி நகரவேன்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்ததோடு  இந்நோக்கம் சார்ந்த அமைப்புகள் பல இயங்கி வருகின்ற போதிலும் இவ்அமைப்பானது முன்உதாரணமாக தனது செயற்பாடுகளை செய்து வருகின்றது என பலராலும் இச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டது. மேலும் இவ் ஒன்றியத்தினுடைய செயற்பாடுகளை மற்றய நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சிறப்புரையாளர்கலால் வேண்டப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் எச்.எம். பாக்கிர் அவர்களால் எதிர்காலத்தில் இவ்வூரில்" வர்த்தகத்துரையை விரிவுபடுத்தல்" என்ற தொனிப்பொருளில் மிகச்சிறப்பாக மாணவர்களை மேம்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியபின்னர் நன்றி உரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நிரைவுக்குவந்தது.
Media unit

SHARE THIS

Author:

0 comments: