இன்று நாடளாவிய ரீதியில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளனர். பல சவால்களுக்கு மத்தியில் இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப் பிரிவிலிருந்து சுமார் 11 மாணவர்கள் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளமை பாடசாலை வரலாற்றில் ஒரு மைற்கல்லாகும். சாதனை என்றே கொள்ளப்படுகிறது. அத்துடன், கணித வர்த்தகப் பிரிவுகளிலும் மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். இவ்வேளையில், பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பெற்றார்களுக்கும், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் குறிப்பாக கணித, விஞ்ஞானப் பிரிவுகளின் வளர்ச்சியிலும் தொடர்ந்து பொருளாதார ரீதியில் உதவி வரும் கட்டார் வாழ் அல் ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர்களுக்கும், கல்குடா கல்வி கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கும் மற்றும் உள்ளூர் வெளியூர் தனவந்தர்களுக்கும் ,மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.
LEBBAI THAMBI - QATAR
0 comments: