BeyondTheBorders |
2015 ஆம் ஆண்டின் க.பொ.த சா/த எழுதிய மாணவர்களுக்கான இரண்டு நாள் (19.12.2015 & 20.12.2015) வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறி பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியால மண்டபத்திலும் கல்குடா இஸ்ரா கல்வி கலாசார நிலையத்திலும் இடம் பெற்றது.
OMSED Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரா யூத் நடாத்திய இந்நிகழ்விற்கு வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை, பிறைந்துரைச்சேனை, தியாவட்டுவான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊக்கமூட்டும் செயற்பாடுகள் (Motivational Activities), தலைமைத்துவ பயிற்சிகள் (Leadership Training), உயர் தர தெரிவு (A/L Path way), ஆண்மீக வழிகாட்டல்கள் (Spiritual Guidance) மற்றும் சாகச நிகழ்ச்சி (Adventure Programs) பிரிவுகளின் கீழ் இலக்குகளை நிர்ணயித்தல் (Goal Setting), இளைஞர்களும் ஆண்மீக வாழ்வும் (Youths and Spiritual Life), தலைமைத்துவம், சமகால உலகு மற்றும் இளைஞ்சர் பாதுகாப்பு (Contemporary World and youth Protection), கூட்டு செயற்பாடு (Team Work), உடற் கல்வி (Physical Education), க.பொ.த உ/த தெரிவு (A/L Selection), எவ்வாறு கற்றல் (How to Learn) மற்றும் நான் யார் (Who am I ?) போன்ற தலைப்புகளும் இதனோடு இணைந்த வெவ்வேறு இலக்குகளையுடைய உள்ளக விளையாட்டுகளும் (Indoor Games) மாணவர்களின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தலைமைத்துவ பண்புகளையும் குழு செயற்பாட்டையும் வெளிக்கொன்டு வரும் நோக்கில் ஐந்து வகையான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சான்றிதழ் வழங்கும் வைபவம் இஸ்ரா கல்வி கலாசார நிலையத்தில் இஸ்ரா கல்வி கலாசார நிலைய மாணவர் பிரிவு தலைவர் மபாலில் அப்துல் முத்தலிப் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து செயற்பாடுகளிலும் அதீத திறமை காட்டிய அணியினருக்கு சிறப்பு பரிசில் வழங்கப்பட்டதுடன் சிறப்பாக இயங்கிய ஐந்து தலைவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்ட்டன. இந்நிகழ்விற்கு அதிதிகளாக காத்தான்குடி சீரா நிலையத்தின் தலைவர் அஷ்-ஷேஹ் அப்பாஸ் நளீமி, செயளாலர் சகோதரர் மவ்சூம், இஸ்ரா கல்வி கலாசார நிலையத்தின் செயளாலர் மற்றும் ஜமாத்துஸ் சலாமாவின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் சகோதரர் அஸ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: