Wednesday, December 16, 2015

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால்


காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் . உடனடியாக காதினுள் எண்ணெயோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும் . காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்து விடும் அல்லது பூச்சி மிதந்து வெளியே வந்து விடும் .
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல . ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு . ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும் , பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது . ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது .
இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும் . அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப்பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும் . ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் . பிறகு அப்புறப்படுத்த வேண்டும் . சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

-courierboys


SHARE THIS

Author:

2 comments:

  1. அவசியம் தேவையான தகவல்.

    ReplyDelete
  2. அவசியம் தேவையான தகவல்.

    ReplyDelete