மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கியில் கடுமையான வீழ்ச்சி புள்ளி நிலையினை நோக்கி செல்வதனை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.
2000ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சி மாவட்டத்தில் 29165 வாக்குகளைப்பெற்றிருந்தது. இதில் அலிசாகிர் மௌலானா அவர்கள் 14284 வாக்குகளைப்பெற்று பாராளுமன்றிற்கு தெரிவாகினர். குறித்த காலப்பகுதி ஐக்கிய தேசியக்கட்சியின் சமாதான பேச்சுவார்த்தை, தமிழர்களுக்கான தீர்வு எனும் கொள்கைக்கு ஆதரவளித்தே தமிழ் வாக்குகளில் சுமார் 15000 வாக்குகள் ஐக்கியதேசியக்கட்சிக்கு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்த ஆண்டுகளில் தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சியும் பெரும்பான்மைக்கட்சிகளுக்கு நேரடியாக வாக்களிக்கும் முறைமையினை மாற்றியமைத்தது. இதன் காரணமாக 2001ம் ஆண்டு 22638 வாக்குகளை மாத்திரமே ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுக்கொண்டது. 2004 பொதுத்தேர்தலில் 6,151 வாக்குகளை மாத்திரமேபெற முடிந்தது.
![]() |
| riyal |
இதனைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத்தேர்தலில் 58,602 வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுக்கொண்டமைக்கான காரணம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேர்தலை பகிஷ்கரிப்பு செய்தமையும் யுத்த வெற்றியின் மீது தமிழ் மக்கள் கொண்ட பழிவாங்கல் உணர்வும் வேறு தேர்வின்றி ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்கச்செய்தது. அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதானாலும் இந்த எண்ணிக்கையான வாக்கினை ஐக்கிய தேசியக்கட்சி பெற முடிந்தது.
ஆனால் 2010ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 22,935வாக்குகளைப்பெறிருந்தது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பெற்ற 11678 வாக்குகளும் அடங்கும். எனவே இத்தேர்தலில் சராசரியாக 11000 வாக்குகளை தமிழ்த்தரப்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்கியதனை அவதானிக்க முடியும்.
2012ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் நிலைமை மிகவும் மாறுபாடாய் அமைந்தது. ஐக்கிய தேசியக்கட்சி வெருமனே 2,434 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. மறுபக்கமாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கிகளில் அதிகரிப்பும் தமிழ் மக்களது அங்கீகாரமும் ஏற்பட்டுள்ளதனை காணமுடிகின்றது.
கடந்த கால மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை நோக்குகின்ற போது பெரும்பான்மைக்கட்சிகளை விட்டும் இனம் சார்ந்த கட்சிகளின் கீழ் தமிழ் மக்கள் ஒன்ருபடுவதனை காணமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தல்களிலும் கூட தமிழ் மக்களது தீர்வு குறித்த கொள்கை கொண்ட கட்சிகளுக்கே மாறி மாறி வாக்குகளை அளித்து வந்துள்ளனர்.
கடந்த கால மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை நோக்குகின்ற போது பெரும்பான்மைக்கட்சிகளை விட்டும் இனம் சார்ந்த கட்சிகளின் கீழ் தமிழ் மக்கள் ஒன்ருபடுவதனை காணமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தல்களிலும் கூட தமிழ் மக்களது தீர்வு குறித்த கொள்கை கொண்ட கட்சிகளுக்கே மாறி மாறி வாக்குகளை அளித்து வந்துள்ளனர்.
இத்தகைய நிலையில் 2015ம் ஆண்டு நடை பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆசனத்தைப்பெருவதற்கான வாய்ப்பினை ஆராய வேண்டியுள்ளது. இம்முறை 145000க்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகள் தமிழ்த்தேசியக்கூட்டணிக்கு அளிக்கப்படும் பட்சத்தில் 4 ஆசனங்களை கூட்டமைப்பு பெரும் என்பதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
சுமார் 30000 தமிழ் வாக்குகள் மாற்றுக்கட்சிகளுக்கு பிரிந்து செல்லுமாயின் 3ஆசனங்களை மாத்திரமே கூட்டணி பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. எஞ்சிய ஆசனங்கள் தற்போதய தேர்தல் முறைமையின் அடிப்படையில் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறாயின் 30000 தொடக்கம் 40000 வரையான வாக்குகளைப்பெரும் கட்சிக்கே ஆசனம் பெருவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இந்தவகையில் ஐக்கிய தேசிக்கட்சிக்கான மொத்த வாக்குகள் மாவட்டத்தில் குறைந்தது 30000 வாக்குகளைப் பெற வேண்டிய சூழ்னிலை காணப்படுகின்றது.
இதில் கல்குடா தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் அமீரலி அவர்கள் ஆகக்கூடுதலாக 13000 வாக்குகளையே பெற முடியுமாக இருக்கும்.ஏனெனில் கல்குடாவில் அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கை 22500 களையே கடந்த தேர்தல முடிவுகள் காட்டி நிற்கின்றன.இதில் முஸ்லிம் காங்கிரஸின் நிரந்தர வாக்கு வங்கியானது 6000ம் வரையில் எச்சந்தர்ப்பத்திலும் காணப்பட்டே வந்துள்ளது.
இதனுடன் சேர்த்து ஏனைய கட்சி வேட்பாளர்களுக்கு 1500 வாக்குகள் செல்லுமாயின் எஞ்சிய 15000 வாக்குகளை அமீரலி அவர்கள் பெற்றுக்கொள்வாராயின் ஏனைய குறைந்தது 15000 வாக்குகளை தமிழ்த்தரப்பிடம் இருந்து பெற்றே ஆகவேண்டிய நிலைக்கு ஐக்கிய தேசியக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் தமித்தர்ப்பு வேட்பாளரான முன்னாள் பா.ம.உ. கணேஷ மூர்த்தி அவர்களும் ஏனையவர்களும் இந்த 15000 வாக்குகளைப் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கணேஷ மூர்த்தி அவர்கள் பாராளுமன்றம் சென்ற வேலை 9132 விருப்பு வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார். அத்தோடு சமாதான தேவதையாக சந்திரிக்கா அம்மையார் இலங்கை ஜனாதிபதியாக வளம் வந்த வேலையில்தான் இவ்வாக்குகள் பெறப்பட்டது. சமாதானத்திற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே தவிர தனிப்பட்ட வாக்கு வங்கியாக அதனை கருத முடியாது.
அத்தோடு ஏற்கனவே அலசியது போன்று ஐக்கியதேசியக்கட்சியின் மாவட்ட வாக்கு வங்கி 2434க்கு தேய்வு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனாலும் தொடர்ந்தும் அரசியல் களத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட கூட்டனி அரசியல் வாதிகளையும் தள்ளிக்கொண்டு முன்னாள் வருவது கேள்விக்குறியானதே. எனவே மாவட்டத்தில் வெருமனே ஆககூடுதலாக 20000வாக்குகளையே ஐக்கிய தேசியக்கட்சியினால் பெற்றுக்கொள்ளமுடியுமக இருக்கும்.
மறுபக்கம் பொதுஜன ஐக்கிய முண்ணனி வேட்பாளர்களும் சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மாவட்டத்தில் சுமார் 18000 வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக களநிலவரம் குறிப்பிடுகிறது. எஞ்சிய சுமார் 12000 வாக்குகளை முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் பெற்றுக்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் முன்னாள் அமைச்சர் முரளீதரன் அவர்கள் பெரும்பான்மைக்கட்சிகளின் மீது கொண்ட நம்பிக்கையீனம் காரணமாக தமிழ் மக்களை இனம்சார்ந்த கட்சிகளுக்கு வழங்குமாறும் அறிக்கை விட்டிருப்பதும் சந்திரகாந்தன் அவர்களது வாக்கு வங்கியில் சரிவினை ஏற்படுத்தியுள்ளது என்பதனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூரில் சுமார் 12000குட்பட்ட வாக்குகளை மாத்திரமே பெற வாய்ப்பாகவுள்ளது. என்ற போதும் ஒரு உறைக்குள் இரண்டு வாட்கள் இருக்க ம்சுடியாது என்ற தத்துவம் அரசியலிலும் பின்பற்றப்படுகின்றது. இதன் விளைவாக ஏராவூரின் மூத்த அரசியல் வாதிகள் உள்ளூர் அரசியல் வாதிகளை விட வெளியூர் அரசியல் வாதிகளுக்கும், கட்சிக்கு சின்னத்திற்கு மாத்திரமும் அளிக்குமாறு தமது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு சமிக்ஞ்சை விட்டிருப்பதும் 12000க்கும் மேல் முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூரில் வாக்குகளைப்பெற வாய்ப்பாக அமையாது. இதே போன்று காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நிரந்தர வாக்கு வங்கியான 6000 உடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினது வாக்கு வங்கியான குறைத்து 3000 சேர்ந்து 9000 வாக்குகளே பெறமுடியுமாக அமையும்.
கல்குடாவில் காணப்படும் குறைந்தது 6000 வாக்கு வங்கியுடன் சேர்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிட்டத்தட்ட 30000வாக்குகளை குறைந்தது பெற்றுக்கொள்ள வாய்ப்பாக கள நிலவரம் அமைந்துள்ளது. இதில் அலிசாஹிர் மௌலானா அவர்கள் 10000 தொடக்கம் 10500 விருப்பு வாக்குகளை பெற முடியும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது கல்குடாவில் களமிறக்கப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரியால் அவர்கள் தற்போதய நிலையில் 10000 வாக்குகளை நெருங்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மாற்றமே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கல்குடாவிற்கா அல்லது ஏராவூருக்கா என்பதனை தீர்மானிக்கும்.
நன்றி - நியுஸ்கல்குடா.

0 comments: