மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்-
தற்போது முகநுால் அரசியல்வாதிகளும், இணையத்தள அரசியல்வாதிகளும், அறிக்கை அரசியல்வாதிகளும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றார்கள்.
அவர்களைப் போன்று நீங்களும் அரசியல்வாதியாக வேண்டுமா...??? அப்படியென்றால் கீழ்க் காணப்படும் உபகரணங்களும் பொருட்களும் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
01. Unlimited இன்டநெட் Package.
02. ஒரு லெப்டொப் அல்லது Desktop கொம்பியூட்டர்.
03. போட்டோ பிடிப்பதற்கு ஒரு கெமறா கூடவே படித்து விட்டு வேலையில்லாமல் திரியும் ஒரு பையன்.
04. ஒருபவுண்டேசன் ஆரம்பித்தல் (தனது பெயரில் அல்லதுதனது தாய்-தந்தைபெயரில் ஒரு பவுண்டேசன் அமைப்பு.
05. மீடியாக்களோடு தொடர்புள்ள ஒரு பையன் அல்லது ஒரு நிருபர்.
06. கண்டநிண்ட படி அவருக்கும் இவருக்கும்சவால் விடுவது போன்ற அறிக்கைகள்.
07.மிகவும் குறைந்த அளவிலான பஜ்ஜெட்டில் பள்ளிவாசல், மத்தரஸாக்களுக்கு ஸ்பீக்கரும் மைக்கும் வாங்கிக் கொடுக்க கையில காசு கொஞ்சம்.
08. அப்பாவி பெண்களை எல்லாம் கூட்டி வெச்சி நான் அப்படிச் செய்வேன்-இப்படிச் செய்வேன் அதுதருவேன் இது தருவேன் என்று சின்னச் சின்ன Pocket Meetings.
09. நம்மட அறிக்கைகளையும், சவால்களையும், நிகழ்வுகளையும் மக்களுக்கு படம் போட்டுக் காட்ட ஒரு பேஸ்புக் கணக்கு.
10. தனது பப்லிசிட்டிக்காக பெரிய பெரிய அரசியல்வாதிகளை சீண்டிப் பார்த்தல்.
இன்றைய நவீன அரசியலுக்கும்-அரசியல்வாதிகளுக்கும் தங்களை அரசியலுக்குல் நுழைத்துக் கொள்ள மேற் சொன்ன பொருட்களும், தகைமைகளும் போதுமானதே தவிர,
மக்களைப் பற்றிய சிந்தனை, தன் சமூகத்தைப் பற்றிய சிந்தனை, சமூகத்துக்கான எதிர்கால திட்டங்கள், அடிப்படை உரிமைகள்பற்றிய திட்டங்கள், எப்படி தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு தன்னால் ஆன அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை தேவைகளைபெற்றுக் கொடுத்தல் போன்றசிந்தனைகள் போன்ற எதுவும் ஒருவர் அரசியல்வாதியாவதற்கு தேவையே இல்லை.
ஆகவே...அரசியல்வாதியாக விரும்புவோர் கடன் பட்டாவது மேற் சொன்ன உபகரணங்களையும்-பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
நன்றி - importmirror
0 comments: